இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 27 August 2011

என்றும் ஆயத்தமாகவே காத்திருக்கிறேன் அன்பனே

உன் ...
வறுமைக்கான
காரணம்  நேர்மை
என்பதை  நானறிவேன்.

இருப்பினும்-உன்
வறுமையை  நான்
பழிக்கவில்லை.

நான்
சாடுவது இந்த
போலி  சமூகத்தைதான் .

ஓரிடத்தில்
செல்வம் குவிமையம்
கொண்டிருப்பதும்
மற்றோர்இடத்தில்   வறுமை
வேட்டையாடுவதும்
பிழையான சமூகத்தின்
எச்சங்கள் தானே?

காலங்கடந்து
நிற்கவேண்டிய மெய்ம்மங்கள்
நம்  பழமைவாய்ந்த
பண்பாட்டின் மீட்டுரு
வாக்கத்தேவை  ஒட்டியே
உனக்கான
போராட்டக்  கலங்கலாக
தொடர்கிறது.

வறுமை நம்
வாழ்க்கையில்
போராட்டமாக
இருக்காது -ஆனால்
போராட்டமே  வாழ்கையாக
மாறிவிடக்கூடாது  என்பதான
உன்  இலக்கை
தலைவணங்கி  ஏற்கிறேன்.

வீண் செலவிற்கும்
சிக்கனத்  திற்க்குமான
வேறுபாட்டை  நானறிவேன்.

சிக்கனம்  தேவையை
ஒட்டி நிறைவேற்றிகொள்ளுவது
வீண் செலவு
இதுதான்  தேவைஎன
அடம்பிடித்து அழிவது
நான் அங்கனமில்லை .

நோயின்றி  
வாழ்வதற்க்கான
உன்தேடலில்
கைகோர்க்க என்றும்
ஆயத்தமாகவே
காத்திருக்கிறேன்  அன்பனே .

ராஜீவ் கொலையாளிகளுக்கு செப்.9-ந் தேதி தூக்கு...
      சரியான விசாரணை இல்லை, இவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லை, இவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரியாது என முன்னாள் நீதிபதிகளே சொன்னது தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்கு தெரியாதா?...இன்னும் எப்படி ராசிவ் "கொலையாளிகள்" என்று இவர்களால் விளிக்கமுடிகிறது.

      தமிழ் நிரபராதிகளுக்கு தூக்கு என்பது நீதிக்கு தூக்கு....
உணர்வுள்ள  தமிழர்களே சாந்தன் , முருகன் , பேரறிவாளன்  ஆகியோரின்  தூக்கு தண்டனையை  எதிர்போம் .


இந்திய  அரசே !
இந்தியாவில்  மரணதண்டனை சட்டத்தை  நீக்கம் செய்.
இப்போதுள்ள அனைத்து மரண தண்டனைகளையும் திரும்பப்பெறு.

தமிழக  முதல்வர் அவர்களே !
மூவரின் மரண தணடனையை  நீக்கம் செய்ய ஆளுநருக்கு  பைந்துரை செய்யுங்கள் .

தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்திட உடனே  சட்டம் இயற்றுங்கள்.


 

 

43 comments:

மைந்தன் சிவா said...

கொலைகள் வேண்டாம்!

சார்வாகன் said...

மரண தண்டனை ஒழிப்போம்,மனித நேயம் காப்போம்

தினேஷ்குமார் said...

இணைந்து போராடுவோம் .... தமிழினத்தை வட நாட்டவர்கள் கிள்ளுக்கீரை என நினைத்துள்ளார்களோ தமிழகத்தில் வஞ்சம் பிடித்து கட்சி கட்சி என்று தாயையும் தாரத்தையும் விலைப்பேசும் அரசியல் வியாதிகள் ஒழிய வேண்டும் ....

புலவர் சா இராமாநுசம் said...

அன்புமகளே!
வாழ்க! வலைவந்து கருத்துரை வழங்கினாய். நன்றி!
கட்சிகளை மறந்து ஒன்றுபட்ட
தமிழ் உணர்வோடு நாடு முழுவதும்
உணர்ச்சி மிக்க போராட்டம்
தொடங்கி நடைபெற்றால் தவிர
இப் படுகொலையைத் தடுக்க
இயலாது.
அது நடக்குமா..?

புலவர் சாஇராமாநுசம்

Ramani said...

மனம் கவர்ந்த கவிதை
வறுமைக்கான காரணம்
நேர்மைதான் எனில்
அவர்தான்
செம்மையான வாழ்வு வாழ்கிறார்
எனப் பொருள்
நேர்மையிழந்து செழித்து வாழுதலுக்குப் பெயர்
ஜீவித்திருத்தல் என வேண்டுமானால் சொல்லலாம்
வழக்கம்போல் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி said...

வறுமையிலும் செம்மை....

அசத்தலான வரிகள் மாலதி....

நேர்மையுடன் வாழ்ந்து சிறப்பதே வாழ்க்கை....

நேர்மையற்று வாழ்ந்து சொத்து குவிப்பதில் என்ன லாபம்?

தூக்குத்தண்டனை விதிக்கக்கோரி அரசியல்வாதிகள் ஆடும் கபடநாடகத்துக்கு மூன்று உயிர்கள் பலியாகக்கூடாது..

மனிதநேயம் உங்கள் ஒவ்வொரு வரிகளிலும் சிறப்பாக தெரிகிறது மாலதி....

சிறப்பான கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துகள்...

அம்பாளடியாள் said...

மேலுள்ள கவிதை அருமை வாழ்த்துக்கள் .
தமிழ் நிரபராதிகளுக்கு தூக்கு என்பது நீதிக்கு தூக்கு....
உணர்வுள்ள தமிழர்களே சாந்தன் , முருகன் , பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை எதிர்போம் .

இது வேதனைக்குரிய விசயம்.முடிந்தவரை ஏதாவது செய்யவேண்டும்
சகோ .நன்றி பகிர்வுக்கு .வாங்கள் என் வீட்டுக்கும்

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 3

காந்தி பனங்கூர் said...

பொறுத்திருந்து பார்ப்போம் தமிழக முதல்வரின் (கருனை)உள்ளத்தை.

Anonymous said...

ஓரிடத்தில்
செல்வம் குவிமையம்
கொண்டிருப்பதும்
மற்றோர்இடத்தில் வறுமை
வேட்டையாடுவதும்
பிழையான சமூகத்தின்
எச்சங்கள் தான். உண்மை தான் சகோதரி. இது மாறும் போது எல்லாம் சரி வரும். ஆனால் அது எப்போது என்பதில் தானே வாழ்க்கையே ஓடுகிறது. நல்ல சிந்தனை பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

தமிழ் உதயம் said...

அரசியலை கடந்து சகோதரர்களை மரண தண்டனையில் இருந்து காப்போம்.

RAMVI said...

//ஓரிடத்தில்
செல்வம் குவிமையம்
கொண்டிருப்பதும்
மற்றோர்இடத்தில் வறுமை
வேட்டையாடுவதும்
பிழையான சமூகத்தின்
எச்சங்கள் தானே?//

அருமை.

//தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்திட உடனே சட்டம் இயற்றுங்கள்.//

தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க சட்டம் வர வேண்டும்..

இராஜராஜேஸ்வரி said...

உன் ...
வறுமைக்கான
காரணம் நேர்மை
என்பதை நானறிவேன். /

வறுமையில் செம்மை.

இராஜராஜேஸ்வரி said...

"என்றும் ஆயத்தமாகவே காத்திருக்கிறேன் அன்பனே"

இணைந்து போராடுவோம் ...

உலக சினிமா ரசிகன் said...

தமிழ் உயிர்களை காப்போம்.

மகேந்திரன் said...

மனிதனின் விலைமதிப்பை கணக்கிடாதீர்கள்
உயிருக்கு விலை உண்டா
இன்று வரை எத்தனையோ சம்பவங்கள் நம் நாட்டில் நடந்திருக்கின்றன
இப்படி ஒரு கொடுமையான தண்டனை கொடுக்கப்படவில்லை.
தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்.
மனிதம் காக்கப்பட வேண்டும்.

கிராமத்து காக்கை said...

வறுமை கவிதை அருமை

K.s.s.Rajh said...

அருமையான கவிதை..

கோகுல் said...

ஓரிடத்தில்
செல்வம் குவிமையம்
கொண்டிருப்பதும்
மற்றோர்இடத்தில் வறுமை
வேட்டையாடுவதும்
பிழையான சமூகத்தின்
எச்சங்கள் தானே?//

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் ஓலை குடிசை கட்டி என்று பல வருடங்களுக்கே சொல்லிருந்தாலும் இன்றும் அந்நிலை தொடர்வது அவலம்!போலி சமுதாயத்தை நோக்கிய சரியான சாடல்!

//
நியாத்திர்க்கு குரல் கொடுப்போம்!

shanmugavel said...

கற்கால தண்டனை முறைகள் அகற்றப்படவேண்டும்.

காட்டான் said...

வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கவிதையுடன்... தமிழ் உயிர்களை காப்பாற்ற அறைகூவல் செய்ததற்கும்.. ஓட்டு போட்டாச்சு

காட்டான் குழ போட்டான்..

சென்னை பித்தன் said...

த.ம.7

சென்னை பித்தன் said...

//உன் ...
வறுமைக்கான
காரணம் நேர்மை
என்பதை நானறிவேன்.

இருப்பினும்-உன்
வறுமையை நான்
பழிக்கவில்லை.//
உண்மை.நேர்மை வறுமையைத் தருமானால் அது பழிப்புக்குரியதல்ல; ஆனால் உலகத்தின் பொதுப் பார்வையில் அவர் பிழைக்கத் தெரியாதவர்! என்ன அவலம் இது.

நல்ல பதிவு!

Anonymous said...

ஒரு கட்சிக்காரர் அறிக்கை விட்டிருக்கிறார்,குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதான்னு,அவருக்கு மண்டையிலதான் முடியில்லைனு பார்த்தா சுத்தமா ’எதுவுமே’கிடையாது போல,இந்த எட்டப்பன்கள் பதிவுலகத்திலேயும் இருக்காங்கப்பா,பார்த்துகோங்க:((((

r.v.saravanan said...

வாழ்த்துக்கள்

துஷ்யந்தன் said...

மரணதண்டனைக்கு மரணதண்டனை கொடுக்கலாமே,
இறைவன் கொடுத்த உயிரை அழிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை
சம்மந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்..

Anonymous said...

நல்ல கவிதை....
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ரெவெரி...

ஸ்ரீதர் said...

தங்கள் பதிவுகளை படித்து மனது கனத்துவிட்டது.வார்த்தைகள் வரவில்லை!

செங்கோவி said...

//இன்னும் எப்படி ராசிவ் "கொலையாளிகள்" என்று இவர்களால் விளிக்கமுடிகிறது. //

சாட்டையடிக் கேள்வி!

சுசி said...

கவிதை ரொம்ப நல்லாருக்குங்க.

முனைவர்.இரா.குணசீலன் said...

வறுமைக்கான
காரணம் நேர்மை

உண்மை

முனைவர்.இரா.குணசீலன் said...

மரண தண்டனை ஒழித்திட உடனே சட்டம் இயற்றுங்கள்.

மாலதி said...

@Anonymousஉண்மைதான் நாம் அறியாத ஒன்று அல்ல என் நாடு என் மொழி என் இனம் இதைவிட எனது உயிர் பெரியது அல்ல இப்படி காட்டி கொடுப்பவர்கள் அழிக்கபடுவார்கள் என்பதும் உண்மையே .வேசிகளின் விலாசங்களை தேடி அலையும் அந்த தூக்கி எறியப்பட்ட மண்டையை தானே கூறுகிறீர் அது கிடக்கிறது .

இராஜராஜேஸ்வரி said...

வீண் செலவிற்கும்
சிக்கனத் திற்க்குமான
வேறுபாட்டை நானறிவேன்/

சிறப்பான கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துகள்

G.M Balasubramaniam said...

வறுமையின் காரணம் நேர்மை எனும்போது , நேர்மையின் விளைவு வறுமை எனப் பொருள் கொள்ளக்கூடாது.எந்த இலக்குக்கும் கொலை முறையல்ல.அதேபோல் மரண தண்டனையில் என்றும் உடன்பாடில்லை.குற்றம் புரிந்தவர்கள் உணர்ந்து விட்டார்களா.?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன் ...
வறுமைக்கான
காரணம் நேர்மை
என்பதை நானறிவேன். //

அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

வெயிட்டிங்க் ஃபார் எ மிராக்கிள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

உங்களுடைய வரிகளும் தீர்ப்பை மாற்ற வேண்டி போராடும் நல் உள்ளங்களுடன் சேர்ந்து அவர்களின் வாழ்விற்கு உயிர் தரட்டும்...

மனித நேயம் காக்க ஒன்றாய் பாடுபடுவோம்...

22 வருடங்கள் சிறையில் கழித்தவர்கள்.. மீதியிருக்கும் வாழ்வினை அங்கேயாவது கழிக்க நியாயம் பிறக்கட்டும்...

மனோ சாமிநாதன் said...

உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

M.R said...

வாழ்வின் யதார்த்தத்தை கவிதையாய் தந்தமைக்கு நன்றி

Anonymous said...

...வறுமைக்கான
காரணம் நேர்மை ...''
வேதா. இலங்காதிலகம்.

கவிப்ரியன் said...

உங்கள் கோரிக்கைக்கு நானும் உடன்படுகிறேன். கவிதை அருமை.

mohan said...

அருமையான வரிகள் நன்றி சகோ