இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 19 November 2011

எதையும் தாங்கு....



எதிர் பார்ப்புகள்
தோற்கும்  வெல்லும்
ஆயத்தம்மாகு .

தோல்விகள்  எல்லாம்
சுமையும்  அல்ல
சுழியமும்  அல்ல .

இமயத்தை   மயிரால்
கட்டி இழு .

வந்தால்  மலை
போனால்  மயிர் .

விடியட்டும்  என

காத்திராதே .

விடியவை  வாழ்வை .


                           மறப்போம் மன்னிப்போம்  

15 comments:

சம்பத்குமார் said...

//எதிர் பார்ப்புகள்
தோற்கும் வெல்லும்
ஆயத்தம்மாகு .
தோல்விகள் எல்லாம்
சுமையும் அல்ல
சுழியமும் அல்ல .//

தன்னம்பிக்கை வரிகள் சகோ..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

மாலதி said...

மிகவும் சரியான நேரத்தில் சிறு தவற்றை சுட்டிகாட்டியமைக்கு பாராட்டுகளும் நன்றியும் சத்ரியன் அவர்களுக்கு திருத்திக்கொண்டேன் .

SURYAJEEVA said...

இத்தனை ஆண்டு காலம் காத்திருந்தும் விடியவில்லையே... ஆகையால் காத்திருந்தால் விடியாது என்ற புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் பரவுகிறது.. பரவட்டும்...

மு மேத்தா எழுதிய எனக்கு பிடித்த கவிதை..

ஊர் உறங்கும் காற்று...
உயிர் நடுங்கும் குளிர்..
ஒற்றை தீக்குச்சி..
உரசு..

மாலதி said...

@suryajeevaநான் விடியட்டும் நீ அதுவரை காத்துக்கொண்டு வீணே முடங்கி கிட என பசப்பவில்லை விடியவை என தன்னம்பிக்கை யூட்டி எழசொல்லுகிரீன் புரிதலுக்கு நன்றி

சத்ரியன் said...

//தோல்விகள் எல்லாம்
சுமையும் அல்ல
சுழியமும் அல்ல..//

மாலதி மேடம்,

சரியாச் சொன்னீர்கள். எதையும் தாங்குபவர்களுக்கான உலகம் தான் இது.

Unknown said...

நல்ல கருத்து மறப்போம் மன்னிப்போம்!!

Unknown said...

// விடியட்டும் என
காத்திராதே .

விடியவை வாழ்வை //

முயற்சி தான் மெய்வருந்த
கூலி தரும்!
என்பதின் விடிவா இக்கவிதை
நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

விடியட்டும் என
காத்திராதே .

விடியவை வாழ்வை ./

தன்னம்பிக்கை வரிகள்.பாராட்டுகள்..

ஹேமா said...

அதிரடிக் கவிதை.இது மாலதி !

Anonymous said...

//விடியட்டும் என
காத்திராதே...
விடியவை வாழ்வை//

தன்னம்பிக்கை வரிகள் சகோதரி....

வாழ்த்துக்கள்...

Anonymous said...

ஆயத்தம்மாகு...

ஆயத்தமாகு...என்று இருந்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்...புலவரே சும்மா இருக்காரு...அப்படின்னு சொல்றீங்களா? -:)

அ. வேல்முருகன் said...

நம்பிக்கைதான் வாழ்வை நடத்துகிறது, கவியின் வரிகள் போல

மகேந்திரன் said...

நம்பிக்கையூட்டும் வரிகள் சகோதரி..
விழித்து எழுந்ததும் கிடைப்பது வெற்றியல்ல
வீழ்ந்து எழுந்தபின் கிடைப்பதுதான் வெற்றி..
இவ்வுலகில் எதிர்ப்பவைகளுடன் சமர் புரிந்து
இவ்வுலகுக்கு விடியல் வழங்கு எனச் சொல்லும் உங்கள் கவி இனிது....

நம்பிக்கைபாண்டியன் said...

தன்னம்பிக்கை
தரும் கவிதை முயற்சி!

அந்த பழமொழி தவிர்த்து வேறுஏதேனும் வரிகளை சேர்த்திருக்கலாம்!