இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 26 November 2011

இதைத்தான் ... இப்படித்தான்



நாளும் ...
நானும்
இதைத்தான்
நோக்கி இருந்தேன் .

உன்னிடமிருந்தான
பச்சை விளக்கு
எரிவதும்  நிறம் மாறுவதும்
தொடர்கதையாகிப்  போகிறது .

உள்ளம்  உள்ள
இடத்தில்  சிலருக்கு
கள்ளம்  இருக்கும் .

உன்னுள்ளம்
உயர்ந்ததென  நானறிவேன் .

நல்லதை  விரைந்துசெய்
தீயதை  தள்ளிப்போடு .

இது ...
நேர்மையானது  தானே .

நீ  நல்லதையும்
அல்லவா தள்ளிப்
போடுகிறாய் ?

தேவைகள் ...
தேவைகளாகவே
தொடரும்போது
தீர்வுகள்  தோற்றம்
கொள்ளதன்பனே .

நம்
இணைப்பிற்க்கான
வழியை  விரைந்து
சமைப்பாயா ?


            







23 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்லதை விரைந்துசெய்
தீயதை தள்ளிப்போடு .

இது ...நேர்மையானது தானே .

"இதைத்தான் ... இப்படித்தான்"

என அருமையாக பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

ரிஷபன் said...

தள்ளிப் போட முடியாத வாசிப்பு.

KParthasarathi said...

நன்றாக உள்ளது

மகேந்திரன் said...

இணைதலுக்கான அழகிய நிமித்தம்...
உயர்ந்தவன் என அடையாளம் கண்டு
அங்கே நல்லவைகளை தள்ளிபோடாதே
என இடித்துரைக்கும் அழகிய கவி சகோதரி..
மனம் நிறைந்தது கவி கண்டு..

வலிப்போக்கன் said...

நன்றி! வாழ்த்துகள்.

கீதமஞ்சரி said...

எரிவதும் அணைவதும் பச்சை விளக்கென்பதால் பயமேதுமில்லை.
கள்ளமில்லா உள்ளமென்பதால்
கவலையேதும் கொள்வதற்கில்லை.
கவிதைகள் பிறப்பதால்
காத்திருக்கும் காலத்தைக் குறைசொல்லவும் இயலவில்லை.

அழகான கவிதை. வாழ்த்துக்கள் மாலதி.

MANO நாஞ்சில் மனோ said...

இணைதலுக்கான உங்கள் சமையல் சூப்பர்ப்....!

ananthu said...

நல்ல கவிதை ...என் தனிமை ... கவிதையை படிக்க வருமாறு அழைக்கிறேன் ...http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_24.html

தினேஷ்குமார் said...

கவிதை நன்று சகோ...

Unknown said...

நல்லா இருக்கு கவிதை சகோ நன்றி!

RAMA RAVI (RAMVI) said...

//நல்லதை விரைந்துசெய்
தீயதை தள்ளிப்போடு .

நீ நல்லதையும்
அல்லவா தள்ளிப்
போடுகிறாய் ?//

அழகான வரிகள்..
அருமையான கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நல்லதை விரைந்துசெய்
தீயதை தள்ளிப்போடு .//

நல்லாவே இருக்கு. இதைப் படிப்பதைத் தள்ளிப்போடவே முடியவில்லை. vgk

சுதா SJ said...

ஹீ ஹீ.... நானும் தள்ளிப்போடாமல் வாசித்துவிட்டேன்..... சூப்பர் அக்கா

shanmugavel said...

நல்லதை தள்ளிப்போட வேண்டாமே!.அருமை.

Unknown said...

என்னமோ சொல்ல வரீங்க, ஆனா என்னன்னுதான் தெரியல :-)

சத்ரியன் said...

துள்ளியோடும் காளையைக் கட்டிப்போட்டு விடும் திட்டத்தில், தள்ளிப்போட வேண்டாமடா என தூது செல்லும் கவிதைக்கு மயங்காமல் தப்பித்துக் கொள்ளட்டும் ... அந்த தலைவன்.

சிங்காரவேலன் திரைப்படத்தில் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

“தூது செல்வதாரடி.....”http://www.youtube.com/watch?v=K8QVXo_QRQo

Anonymous said...

நீ நல்லதையும்
அல்லவா தள்ளிப்
போடுகிறாய் //

அழகான வரிகள்...
அருமையான கவிதை...நன்றி சகோதரி...

ஹேமா said...

இணை(ய)ம் விடும் தூது.சம்பந்தப்படவர் பார்த்துக்கோங்க !

ராஜி said...

//நல்லதை விரைந்துசெய்
தீயதை தள்ளிப்போடு .//
>>>
ரொம்ப சரியா சொன்னீங்க சகோதரி. அதனால், இப்பவே கமெண்ட் போட்டுடேன். ஹி ஹி

ராஜி said...

//நல்லதை விரைந்துசெய்
தீயதை தள்ளிப்போடு .//
>>>
ரொம்ப சரியா சொன்னீங்க சகோதரி. அதனால், இப்பவே கமெண்ட் போட்டுடேன். ஹி ஹி

அம்பாளடியாள் said...

நீ நல்லதையும்
அல்லவா தள்ளிப்
போடுகிறாய் //

உண்மையை அருமையாக விளம்பியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ...

vetha (kovaikkavi) said...

குறுக்கமாகவு இனிமையாகவும் இணைப்பு பற்றிக் கூறப்பட்டது அழகு! வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ம.தி.சுதா said...

ஃஃஃஃநல்லதை விரைந்துசெய்
தீயதை தள்ளிப்போடு ஃஃஃஃ

இந்த வாக்கியம் என்றும் அவசியமானது..

அருமைங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)