மனிதப் படிஎடுத்தலின்
மகத்துவம் அறிந்திருக்கவில்லை
இப்போது .
கால்வழிக் குற்றங்கள்
கண்மூடித்தனமாய்த்
தோற்றங் கொண்டுத்
தொடர்கிறது .
நதியின் பிழையன்று
நறும் புனலின்மை
போல
விதியின் பிழையன்று
நோயுற்ற குமுகமும்
நோய்க்கான காரணங்களும் .
இது ...
நம் மதியின்
பிழை .
உடலினை
ஊடுருவிப் பார்த்து
நோய்க்கான
காரணமதைப் புறந்தள்ளி
நம் மண்ணின்
மருத்துவமதை
கைக்கொண்டால்
பிணிவந்து வருத்திடுமா ?
நம் பிள்ளைகள்
நோய் வந்து
வீழ்ந்திடுமா ?
சிந்திப்போம் .
அக்கா சந்திரகௌரி அவர்கள் கேட்டுக் கொண்டமைக்காக
இந்த ஆக்கம் போதுமா அக்கா ?
23 comments:
தரமான ஆக்கம்...நிறைவான வாழ்த்துகள்...
கால்வழிக் குற்றங்கள்
கண்மூடித்தனமாய்த்
தோற்றங் கொண்டுத்
தொடர்கிறது .//
அக்காளுக்காக எழுதிய கவிதை ஆயிரம் கதை சொல்கிறது, வாழ்த்துக்கள்...!!!
உயர் ரக கவிதை போலிருக்கு... ரெண்டு மூணு தடவை படிச்ச பின்னும் புரியல.. நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் வந்து படித்து அசை போடுகிறேன்
இது மதியின் பிழை..
அழகாக சொன்னீங்க சகோதரி...
நாம் செய்யும் குற்றங்களை முதலில் அடையாளம் கண்டு
அதை தணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்...
கொண்ட பிணிக்கு மருந்திழைப்போம்
உங்களின் சில வரிகளை எடுத்துக் காட்டலாம் என்று எண்ணினேன், மெளஸ் வேலை செய்யவில்லை...
உடலினை ஊடுறுவிப் பார்த்து
நோய்க்கான காரணத்தை புறந்தள்ளி...
இப்படியும் ஒரு கவிதை எழுத முடியும் என்பதை உங்கள் கவிதை எனக்கு விளக்கிவிட்டது
சத்தியமா புரியல. திரும்ப ட்ரை பண்றேன்.
முதலில் நன்றி மாலதி. இப்போது கவிதைக்குள் நுழைவோம் . காரணத்தைக் கண்டுபிடித்து காரியம் ஆற்றச் சொல்லியிருக்கும் பக்குவத்தை இக்கவிதையில் காணக்கூடியதாக இருக்கின்றது. காரணத்தைப் புறந்தள்ளல் என்பது எனக்குப் பிடித்திருக்கின்றது. இதுதான் காரணம் இது தான் காரணம் என்று சொல்லிக்கொண்டு இருப்பதனால் எந்தவித பயனும் இல்லை. வழிமுறையைத் தேடவேண்டும். அது எமது மண்ணிலேயே இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றீர்கள். எதிர்கால உலகம் எமது குழந்தைகள். அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு படைத்த இக்கவி பாராட்டத்தக்கது. வித்தியாசமானது கூட . தொடருங்கள் மாலதி, புதிய ஆக்கம் இடும் பொது எமக்கும் அறிவித்து விடுங்கள்
நான் நினைக்கிறேன் குழந்தைகளுக்கு நோய் வந்தால் இயற்கை மருந்துகளைப் பாவிக்கச் சொல்கிறீர்கள்.சரியா மாலதி ?
அருமை
//நதியின் பிழையன்று
நறும் புலனின்மை போல
விதியின் பிழையன்று
நோயுற்ற குமுகமும்
நோய்க்கான காரணமும் //
அருமை
சகோ வாழ்த்துக்கள்!
@ஹேமாகுழந்தைகளுக்கு நோய் வந்தாலும் வராவிட்டாலும் நோய் காக்கும் முறை தமிழ மண்ணில் உண்டு ஈழ மன்னன் பரச சேகரன் என்ற மன்னன் குழந்தை மருத்துவ நூல் ஒன்றை யாத்துள்ளதாக அறிகிறேன் சிறப்பான நூல் ஆக குழந்தையில் இருந்தே முறையான மருந்துகளை எடுக்கும் போது சிறப்பான எதிர்கலம் உண்டல்லவா ? நோய் இல்லாமல் வீரத்துடன் இருப்பன் இல்லையா ?
வித்தியாசமான கவிதை . படி எடுத்தலைக் காட்டிலும் மிகப் பலமான ஆராய்ச்சிகளெல்லாம் செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
நம் பலகீனமே நம் பலத்தை அறியாதிருப்பது தான்.
பல சிந்தனைகளை துருவிய கவிதை.
பாராட்டுக்கள் சகோதரி.
மாலதி அவர்களுக்கு, வணக்கம்! நான் இந்த பதியுலகத்திற்கு புதியவன். கருத்துரையை எப்படி எழுதுவது என்று இப்போது தான் கற்றுக் கொண்டுள்ளேன். இன்னும் ப்ளாக்கைப் பற்றி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்... சரி... அது இருக்கட்டும்... பல மாதங்களாக நானும் உங்கள் வாசகன். (உங்கள் Follwers-இல் பாருங்கள்-Allnews Cinema என்று இருக்கும்) நான் கஷ்டப் பட்டு பக்க பக்கமாக எழுதுகிறேன். ஆனால், நீங்கள் கவிதையாய் நறுக்கென்று நாலு வரியில் சொல்லி விடுகிறீர்கள். "நான் என்னத்த சொல்ல..." முதல் இன்று வரை எல்லாமே அருமையான பதிவுகள். என் வாழ்த்துக்கள். நன்றி!
எல்லோருமு் ஒரு விடயத்தை சொல்ல எப்படி திக்கிகத் திணறுகிறோம் நீங்கள் சில வரியில் சிக்கென்று உறைக்க வைக்கிறீர்களே...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கடவுள்களை தொலைத்து விட்டோம்
@திண்டுக்கல் தனபாலன்கவிதைக்கென தனியான இலக்கணம் இருக்கிறது அந்த இலக்கணப்படி நான் எழுது கிறேனா என்பது ஐயமே நாங்கள் எல்லாம் வானத்தில்இருந்து வந்து விடுவதில்லை உங்கள் இடுகை சிறப்பானதாக இந்த சமூகத்தைப் பற்றியதாக இருக்கட்டும் உண்மையில் உலகெலாம் சென்றடையும் தொடர்ந்து படித்து வருவதாக எழுதுகிறீர்கள் நன்றியும் பாராட்டுகளும் .
@சிவகுமாரன்உண்மை இதுதான் மிகவும் சரியாக புரிந்து கொண்டு உள்ளீர்கள் பாராட்டுகளும் நன்றியும்
நம் பாரம்பரியத்தை விட்டு விலகியதிலிருந்து ’எல்லாமும்’ தொலைத்தாகி விட்டது.
தேவையற்றதெல்லாம் காலைச் சுற்றிக் கொண்டது.
இன்னும் கூட விலாசி விளக்கியிருக்கலாம், மாலதி மேடம்.
அருமை .
அனைவரின் சிறப்பான வருகைக்கும் கருத்து களிற்கும் வணக்கங்களும் நன்றிகளும் .
நம் மண்ணின்
மருத்துவமதை
கைக்கொண்டால்
பிணிவந்து வருத்திடுமா
நோயற்ற வாழ்வுக்கு பழகும் புத்தி வேண்டும்.. மதியின் பிழை தெளிவை நோக்கி போக வைக்கும் கவிதை
சிந்திப்போம் அக்கா!!
வாழ்வியல் உண்மைகள் வடிக்கப்பட்ட கவிதை!
நன்று! மகளே!
புலவர் சா இராமாநுசம்
Post a Comment