இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 3 December 2011

மலட்டுவிதை மான்சென்டோ

                                                     

முன்பு ...
இந்தியாவில்
புரட்சி  செய்கிறோம்
என்றார்கள் .

செய்தும்  காட்டினார்கள்
ஆட்சியாளர்கள் வேளாண்புரட்சி .

வீரியரக  விதைகள்
கோதுமையில் ,நெல்லில்
இதனால்
விளைநிலங்கள்
விலை நிலமாகிப்போனது .

மண்வளமே
பாழாய் போச்சுது
இரண்டாம்  உலகப்
போரின் வெடிமருந்து
சொம்மாவா ?

நம்  நாடுபோலவே
சோமாலியாவும்
வளமாகவே  இருந்தது .

அமெரிக்க மாமா
வந்தார் கோகோ
போடச்சொன்னார் .

நாங்கள்  வளமோடு
வாழ்கிறோம்  வேண்டாமென்றார்கள் .

கடன்தருகிறோம் பயிரிடு
என்றான்  மாமா .

தவறான  வழி
ஆசைதானே  அழிவிற்கு
வழி .

கோகோ  போட்டன்
சிலர்  கொழுத்தனர்
பலர் வியந்தனர் .

நாடு முழுமையும்
கோகோ  பயிரே
கோலோச்சியது .

மரபுவழி  விதையும்
பயிரும்  பாழாய்போச்சு .

காலச்  சூழலில்
கோகோ விளைச்சலின்
தரமும்  குறையலாச்சு .

உங்கள் கோகோ
எமக்கு  வேண்டாமென்றான்
மாமா .

வெட்டவும் இயலாமல்
வீழ்த்தவும்  இயலாமல்
பட்டினியின்  பிடியில்
இன்று  சோமாலியா .

இந்த ...
மான்சென்டோ  மலட்டு
விதைதான்  இப்போது
இந்திய  சந்தையில்
நெல்லில்...
கோதுமையில் ...
மக்கா சோளத்தில்...

மண்ணும் பாழாய் ...
உணவும் இல்லாமால்
நாம் மடியப்போகும்  நாள்
விரைவில்  வரும்
அப்போதாகிலும்
விழிப்போமா ?            

15 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

ரிஷபன் said...

தவறான வழி
ஆசைதானே அழிவிற்கு
வழி .

விளைநிலங்கள்
விலை நிலமாகிப்போனது .

வரிகளால் சாடிய விதம் அருமை.

துஷ்யந்தன் said...

அருமையான புரட்சி வரிகள்...
சாடல்களில் நிஜம் ரெம்ப கொட்டிக்கிடக்குது

இராஜராஜேஸ்வரி said...

மண்ணும் பாழாய் ...
உணவும் இல்லாமால்
நாம் மடியப்போகும் நாள்
விரைவில் வரும்
அப்போதாகிலும்
விழிப்போமா ?

விழித்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது...

ஹேமா said...

ஆதங்கம் நிறைந்த வரிகள்.சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் யோசிக்கவேண்டும்!

அ. வேல்முருகன் said...

புறகணிப்போம் அன்னிய நிறுவனங்களை
மீட்டெடுப்போம் நாட்டு வளங்களை

நன்றி

சத்ரியன் said...

புதுசு-ன்னு எதைக் காட்டுனாலும் மயங்கிடறாய்ங்களே நம்ம மக்கள்.

‘அந்த’ மாமன் சொன்னா மறு பேச்சே இல்லையே.

Anonymous said...

புரட்சி + ஆதங்க வரிகள்...ஆயிரம் கட்டுரைக்கு சமம்...

மகேந்திரன் said...

இன்றே விழித்தல்
நாளைக்குப் பெருமை...
அருமையான கவிதை சகோதரி...

rishvan said...

nice .... puratchi .. www.rishvan.com

Advocate P.R.Jayarajan said...

தெரிந்தே சாகும் விட்டில் பூச்சிகள் நாம்..
நல்ல பதிவு...

Advocate P.R.Jayarajan said...

http://sattaparvai.blogspot.com/2011/12/blog-post_09.html

rishvan said...

nice and arthamulla kavithai... thanks to share and thanks for commenting on my blog www.rishvan.com

vasan said...

எம்.எஸ். சுவாமிநாத‌ன் தான், மான்செட்டாவின் ஏஜ‌ண்ட். ப‌சுமை புர‌ட்சி என்று சொல்லியே நிலத்தின் வ‌ள‌மையை சுர‌ண்டி, இர‌சாயண உர‌மிட்டு ம‌ண்ணை ம‌ல‌டியாய் மாற்றி வ‌ர‌ட்சிக்கு வ‌ழி வ‌குத்த‌வ‌ர்.

தீபிகா(Theepika) said...

விழிப்புணர்வு விதைக்கும் கவிதை. நன்று