இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 14 January 2012

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

இருட்டு உடையட்டும்
விடியல் பிறக்கட்டும்
தரணி போற்றிடும்
தமிழர் வாழ்வில்.


திசைமாறி உதிக்கும்
ஆதவன் திக்கெட்டும் 
தீக்கதிர் பறப்பட்டும்
போலிகள் வீழ்ந்துமடியட்டும் .


அறியாமை இருள்நீங்கி 
பகலவன் தோன்றட்டும் 
ஆர்பரிக்கும் கடலலையாய்
தமிழர்கலைகள் விண்ணைமுட்டட்டும்.


தமிழன்நீடுதுயில் நீங்கி
நிலம் கிழித்து
காட்டை வளமாக்கி 
பொன்னை விளைக்கட்டும்.


கன்நெலும் செந்நெலும் 
காடெலாம்கழனியெலாம் விளைந்து
வீடெலாம் வீதியெலாம்            
நெற்கதிர் குவியட்டும்.


கரும்புபாகாகி கட்டியாகி
நம்குருதியாகி எலும்பாகி 
தோள்கள் வலிமைபெறட்டும் 
பகைவன் ஒடிஒழியட்டும் .


நம்பழமையும் அறிவியலும் 
வானவியலும் கட்டிடக்கலைகளும்
தமிழர் மருத்துவமும் ஆனஎல்லாக் 
கலைகளும் வளம்பெறட்டும்.


சாதிமதப் பித்தொழிந்து
சமத்துவம் உதிக்கட்டும் 
உலகச்சமாதானம் தொன்றட்டுமென 
இத்தமிழர் திருநாளில் 
வணங்கி வானமாகிவாழ்த்துகிறேன் . 


கரும்பு வெல்லம் குருதியைப் பெருக்கும் எலும்பை வளர்க்கும் வளப்படுத்தும் . 


அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துகள் .     
    .... என்றும் மாலதி                                             

12 comments:

Ramani said...

தமிழர் திரு நாள் சிறப்புக் கவிதை அருமை
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

மயிலன் said...

பொங்கல் வாழ்த்தும் கவிதையில் தானா?
நல்லாயிருக்கு..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

விச்சு said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிமையான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

Kalidoss Murugaiya said...

நல்ல கவிதை புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்புடன்..

ரெவெரி said...

பிடித்தது...

தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

சிந்தனை கதிர்
சிறகடித்து பறந்த
வைர வரிகள்
அருமை.
வாழ்த்துக்கள் உங்களுக்கும்

மரு.சுந்தர பாண்டியன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வே.சுப்ரமணியன். said...

நன்றி தோழி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்களது அன்பு உறவுகளுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Part Time Jobs said...

Nice & Great info!

Follow My Websites too.

A to Z online General knowledge Information Portal Website - www.bharathibtech.com

dhanasekaran .S said...

அருமையான பொங்கல் கவிதை வாழ்த்துகள்.இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்