இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 21 January 2012

தோற்றுவாய்

    இப்போதெல்லாம்  காதல் 
இலக்கியங்களைக்  கற்றதனால் 
தோற்றங் கொள்ளுவதில்லை .

மாறாக மட்டரக 
திரைப்படங்களின்  வழி 
காதல்  பெறப்படுகிறது .

மட்டரக  காதல்
மாவீரர்களைத்  தோற்றங்கொள்ளச்  
செய்வதில்லை .

இலக்கியக்  காதல் 
வீரத்தையும்  வாழ்வியலையும் 
படம் பிடித்துகாட்டி 
பாடமாக  விளங்கியது . 

திரைப்படங்களுக்கு 
அங்கன மெல்லாம் 
இருக்க  தேவையில்லை .

காதல்  வெறும் 
இன  கவர்ச்சி
மட்டுமே  கவர்ச்சியை 
காட்டும்  காசுபார்க்கும் .

விரைந்தொட்டும் பசைபோல 
இன கவர்ச்சி  விரைந்துகூடி 
 விரைந்து  பிரியும் .

கற்று கொடுக்காமை 
இந்த குமுகத்தின்பிழை  
ஊடலும்  கூடலும் 
இயல்புதான்  எனினும் 
இப்போதைய  காதல் 
முறிவை  நோக்கியே 
முன்னே  நகருகிறது .

ஒன்று பட்டு  வாழ்வதற்க்கான 
சூழலை  கண்டறிவோம் 

பிணக்குகளை  புறந்தள்ளி 
ஒற்றுமைக்கான  காரணங்களை 
கண்டறிந்து  கற்ப்போம் 
புதிய  காதல்பாடம்.

17 comments:

மரு.சுந்தர பாண்டியன் said...

ஆணித்தரமான உண்மை அக்கா...

விச்சு said...

மட்டரகமான திரைப்படங்களின் மூலம்தான் காதலும் மட்டமானதாக உள்ளது.

மயிலன் said...

ஹ்ம்ம்.. மிக சரி..
சினிமாவில் காண்பதுதான் காதல் என்று நம்பும் நிலைதான் இப்போது..
மேலும் வடக்கத்திய மோகமும்...அதிகம்..

ஒரு மென்மையான உணர்வை இனிமேலும் மீட்டெடுக்க படைப்பாளிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்..
சினிமாக்காரர்கள் உட்பட...

மதுமதி said...

இலக்கியங்களில் காதல் கௌரவிக்கப் பட்டது..இன்றைய திரைப்படங்கள் அதற்கு மாறாக இருக்கிறது.என்ன செய்வது.சொன்ன விசயம் சிறப்பு வாசித்தேன் வாக்கிட்டேன் நன்றி.
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-3)

RAMVI said...

அருமையாக இருக்கு கவிதை.

//பிணக்குகளை புறந்தள்ளி ஒற்றுமைக்கான காரணங்களை கண்டறிந்து கற்ப்போம் புதிய காதல்பாடம்.//
சிறப்பான வரிகள்.

வியபதி said...

"பிணக்குகளை புறந்தள்ளி ஒற்றுமைக்கான காரணங்களை கண்டறிந்து கற்போம் புதிய காதல்பாடம்" என்று மிகச்சரியாக எழுதி இருக்கிறீர்கள். இது "காதல்பாடம்" மட்டுமல்ல வாழ்க்கைப் பாடமுமாகும்

ராஜி said...

ஒன்று பட்டு வாழ்வதற்க்கான
சூழலை கண்டறிவோம்
>>>
அவசியம்தான் சகோ. விரைந்து கண்டறிய வேண்டிய நேரமிது...,

செய்தாலி said...

கருத்துள்ள கூறிய சிந்தனையுள்ள
சிறந்த கவிதை தோழி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

குணசேகரன்... said...

ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு அம்புகள் போல இருக்கு..பாராட்டுக்கள்

Anonymous said...

உண்மை சகோதரி...

இலக்கியங்களில் கௌரவிக்கப் பட்ட காதல் இன்று எங்கும் கொச்சைபடுத்தப்பட்டு...

அருமையான வரிகள்...

தொடர வாழ்த்துக்கள்....

ஹேமா said...

நாகரீகம் என்று சொல்லிச் சொல்லியே எல்லாவற்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் மாலதி.மீட்டெடுக்க இன்னொரு உலகம் புதிதாய் வேண்டுமென வேண்டிக்கொள்வோம் !

பட்டிகாட்டு தம்பி said...

உண்மைதான்.

சி.பி.செந்தில்குமார் said...

ஊடலில்லா காதல் சாத்தியமா?

Chitra said...

இப்பொழுது மாறி கொண்டு வரும் நிகழ்வுகளை குறித்த நல்ல அலசல்.

sakthi said...

அருமை சகோதரி

நட்புடன் ,
கோவை சக்தி

எஸ் சக்திவேல் said...

அருமை :-)

Kalidoss Murugaiya said...

அருமை.வாழ்த்துக்கள்