கூட்டுக்குடும்ப வாழ்கை
முறையை முன்னெடுப்போம் .
முற்றாய் இன்றையசிக்கலை
இனங்கண்டு தட்டித்
துரத்துவோம்.
அடிமைமுறைக் கல்விஇது
அதனால் ஆளையேகொல்லுது
ஆசிரியையே வெட்டி சாய்க்குது .
பாழும் பணத்தின்
ஆசையால் ...
பதவிகளின் தாகத்தால் ...
குடும்ப உறவகளே
சுமையாய் மாறுது
பண்பட வேண்டியவனை
பாடாய் படுத்துத்து .
கல்விக்கூடத்தில்
கத்தியை பாய்சுது .
பள்ளிப் படிப்பே
சுமையை தருகுது
சுமையாய் மாறுது.
பதவிகளின் கனவே
இலக்காய் தொடருது .
அன்பை நாளும்
வளர்த்தோமில்லை.
பண்பைச் சொல்லி
பழக்கிநோமில்லை .
பணம்தான் மனிதத்தை
சிதைக்குது ...
அந்த பணமே
மனிதனைக் கொல்லுது .
மனிதமே நீ ...
என்றுதான் மனிதத்தை
சிந்திப்பாய் .
மனிதனாய்
மாறுவாய் ?
19 comments:
சிந்திக்க வைத்த கவிதை வரிகள்
அருமை தோழி
சிந்திக்க வைத்த கவிதை வரிகள் அருமையான தொகுப்பு
மனிதமே நீ ...
என்றுதான் மனிதத்தை
சிந்திப்பாய் .
மனிதனாய்
மாறுவாய் ?
சிந்தித்துக் கற்க வேண்டிய மனிதம் உணர்த்தும் பாடம்!
அருமையான எளிமையான கவிதை
வாழ்த்துக்கள் சகோ
கொலையா கற்பிக்கிறாய்?
கேள்வியில் [பதிவில்]
நியாயம் உள்ளது.
இனைய நாட்டின் நிலையை அருமையாக பதிவாக்கியிருக்கிறீர்கள்!
நான் நினைக்கிறேன் சகோதரி நாங்கள் முன்பு வளர்ந்தது போல பிள்ளைகளை வளர்த்தால் அறம் செய்ய வீரும்பு ஆறுவது சினம் என்று - பழைய முறைக்குப் போனால் தான் சரி வருமோ என்று...நல்ல சிந்தனை... மக்கள் சிந்திக்கட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
நடப்பை கவிதை வரிகளில் வார்த்துவிட்டீர்கள்..யோசிக்க வேண்டிய விசயம்தான்.
வணக்கம் சகோதரி..தங்களுக்கான விருது ஒன்று எனது தளத்தில் காத்திருக்கிறது..பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.
Unmai unmai arumaiyaai solliyieukkinka
கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். அது மனப்பாடம் செய்வதாய் இல்லாமல் வாழ்க்கை கல்வியாகவும், நன்னெறிக் கல்வியாகவும் இருந்தால் நலம். சிந்திப்பார்களா கல்வியாளர்களும், அரசியல் செய்வோரும்.
நல்ல கவிதை.
பெற்றோர்களுக்கும் கடமை இருக்கிறது.
நன்றி.
உங்கள் எழுத்துக்கள் சிறக்கட்டும் தங்களுக்கு வெர்சாட்டைல் விருது வழங்கி கௌரவிக்கிறேன்.
மிக அழகான கவிதை தொடரட்டும் உங்கள் கவி.என் வாழ்த்துக்கள்
சமூகத்தின் அவலங்கள் மனதைத் தாக்கி தனிமனிதனை நோயாளியாக்குகிறது.இதற்கெல்லாம் முடிவு ?
மனிதனே என்று மனிதனாய் மாறுவாய். மனிதத்தைச் சிந்திப்பாய். நன்று. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
நடப்பு நிலவரம் கவிதைகளில்!
5 பேரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே தவிர கொல்லப்படவேண்டியவர்கள் அல்ல என்ர கருத்து 100% உண்மை
மனிதமே நீ ...
என்றுதான் மனிதத்தை
சிந்திப்பாய் .
மனிதனாய்
மாறுவாய் ?
>>>
முகத்திலறைந்தாற் போன்ற கேள்வி. இனியாவது சிந்திப்போமா?
கவிதை வரிகள் அருமை.
நன்றி.
Post a Comment