பிழையான கற்ப்பிதங்களை
கொள்கிறவன் அல்லன் நீ .
காதலில் நேர்மையான
கோட்பாடுகளைக்
கொண்டவன் நீ .
இருவருக்குமான
முழுமையான புரிதலில்
தேறியபிறகே
காதலில் தடம்
பதிய வேண்டும் என்கிறவன் நீ .
புரிதல் உடலில் இருந்தல்ல
உள்ளத்தில் இருந்தான
வேட்கை கொள்ள வேண்டும்
என்கிறாய்.
கண்டதும் காதல்
என்ற காட்டுமிராண்டித்
தனத்தை ...
கண்மூடித்தனமாய்
எதிர்க்கிறவன் நீ .
புரிதலுக்கு பிறகேயான
பிரிதலையும்
சாடுகிறவன் நீ.
நான் கற்றுத்தேறிய
கல்லூரியும் நீ
நீ ... நீயே .
கொள்கிறவன் அல்லன் நீ .
காதலில் நேர்மையான
கோட்பாடுகளைக்
கொண்டவன் நீ .
இருவருக்குமான
முழுமையான புரிதலில்
தேறியபிறகே
காதலில் தடம்
பதிய வேண்டும் என்கிறவன் நீ .
புரிதல் உடலில் இருந்தல்ல
உள்ளத்தில் இருந்தான
வேட்கை கொள்ள வேண்டும்
என்கிறாய்.
கண்டதும் காதல்
என்ற காட்டுமிராண்டித்
தனத்தை ...
கண்மூடித்தனமாய்
எதிர்க்கிறவன் நீ .
புரிதலுக்கு பிறகேயான
பிரிதலையும்
சாடுகிறவன் நீ.
நான் கற்றுத்தேறிய
கல்லூரியும் நீ
நீ ... நீயே .
19 comments:
புரிந்து கொண்டேன். புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம் போன்றது.
ம்ம்ம் நல்ல இருக்கு தோழி
அழகான கவிதை,,அர்த்தமான வரிகள்.மிக்க நன்றி.
மாலத்ஹியிடமிருந்து இவ்வளவு அழகானதொரு காதல் கவிதையை எத்ஹிர்ப்பார்க்கவில்லை நான்.
அழகிய கவிதை மாலதி.
அருமை சகோ ...!
உன்னதமான உணர்வுகள் இங்கே
அழகிய கவிதையாய் வார்த்தைகளில்
பளிச்சிடுகிறது சகோதரி...
புரிதலுக்கு பிறகேயான
பிரிதல்
யாவரும் உணரவேண்டிய வரிகள்! அருமை!
புரிந்துகொண்ட அழகான காதல்.இதுதான் நீண்டு வாழ்ந்து செழிக்கும் !
அழகான வரிகள்
அட...கல்லூரியே நீ..
வெரி நைஸ்
மிகவும் கட்டுக்கோப்பான காதலர் போலிருக்கிறது. வரிகள் அருமை.
மழலைப் பள்ளி தொடங்கி கல்லூரி சென்ற காதல் நல்ல முன்னேற்றம் .
கற்றுத்தேறிய களிப்பு + செருக்கு கவிதையில்...கூடவே காதலும்...
புரிதலுடன் கூடிய காதல் தொடர வாழ்த்துக்கள் தோழி
நான் தங்களைப்பற்றி என் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளேன்.
http://vijayandurai.blogspot.in/2012/04/blog-post.html
நான் தங்களைப்பற்றி என் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளேன்.
http://vijayandurai.blogspot.in/2012/04/blog-post.html
காதல் ததும்பி வழிந்த இந்தக் கவிதையை மிக ரசித்தேன் தோழி!
பெருமைதான்
அருமையான
கல்லூரி அமைத்தத்ற்கு
புரிதல், தெரிதல், அறிதல் வாழ்வின் சொர்க்கமன்றோ.
இதில் பிரிதல் என்பதற்கு இடமே இல்லை.
மிக நல்ல அறிதல் கவி வரிகள்.
வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment