இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 5 May 2012

நானும் ஒருத்தி என்பதாலா அன்பனே .....

 சாதிகளைச் சொல்லி
சலுகைக்காக
 வேட்கைகொள்ளுகிறவன்  இல்லை .

சாயம் போன
அரசியல்  பிழைப்பாளியும் இல்லை  நீ .

வீணான கருத்தியல் பேசி
மக்களை  கவிழ்ப்பவனும்  இல்லை .

அறம் சார்ந்த பொருளியல்
பேசுகிறாய்.

குமுகப்  பாமரத் தனங்களை
உடைத்தெறிய
களமாடுகிறாய்.

கட்டவிழ்த்து  விடப்பட்ட
காட்டுமிராண்டித் தனங்களை
முடமாக்க  எண்ணுகிறாய்.

யாதும் ஊரே
யாவாரும் கேளீர்  என
தமிழ்  சித்தாந்தத்தை
முன்னெடுக்கிறாய்.

இருத்தலை உடைத்தெறிகிறாய்.
புதியன  பதியமிடு கிறாய்.

கற்றதைக்  கற்பிக்கிறாய்.
புதியன  கற்றுக்கோள்ளுகிறாய் .

பறந்துப் பட்ட மக்களின்
நலனையே எல்லோரின்
பார்வைக்கும் வைக்கிறாய் .

அதில்  நானும்  ஒருத்தி
என்பதாலா     அன்பனே .
11 comments:

மதுமதி said...

இருக்கலாம் சகோதரி..இக்கவிதையின் மூலமாக சமுதாயத்தையும் சாடியது சிறப்பு.

ரிஷபன் said...

கற்றதைக் கற்பிக்கிறாய்.
புதியன கற்றுக்கோள்ளுகிறாய் .

நானும் ஒருவனாய் ரசித்தபடி..

வரலாற்று சுவடுகள் said...

லவ்லி ..!

வா.கோவிந்தராஜ், said...

இன்று தான் உங்கள் தளத்திற்கு வருகிறேன் கவிதை கருத்தாழம் உள்ளது

இராஜராஜேஸ்வரி said...

பரந்துப் பட்ட மக்களின் நலனையே எல்லோரின் பார்வைக்கும் வைக்கும். அன்பனுக்கு வாழ்த்துகள்...

POWER Thaz said...

கவிதையில் உள்ள எழுத்து பிழைகளை திருத்தலாமே.

ஹேமா said...

உங்களுக்கேத்தவர்தான் மாலதி !

krishy said...

மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

Esther sabi said...

அதில் நானும் ஒருத்திதான் மாலதி அக்கா

ராஜி said...

நானும் ஒருத்திதான் மாலதி...

kovaikkavi said...

விழிப்பணர்வுக் கருத்துகள். வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.