இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday 3 June 2012

ஐந்தாம் பொருத்தம்

ஐந்தாம் பொருத்தம்

எல்லோரும்  ஐந்தாம்
பொருத்தத்தை  சோதித்துவிட
ஆளாய் பறக்கும்
போது  அதைத் 
தட்டிக்கழித்தவன்  நீ .

நம்  இல்லறம்
நல்லற மாவதற்கான
ஒத்திகையை  நாளும்
உள்ளத்தில்
அரங்கேற்றம் 
செய்கின்றவன்  நீ.

வாழ்க்கைக்கான
கருப்பொருளை
தேனீக்கள்  போல
சேமிகிறவன்  நீ .

என் காதலும்  நீ .

காவிய
நாயகனும்  நீ .


 
ஐந்தாம் பொருத்தம்  யோனி பொருத்தம்  என்பது  தெரியாதா  என்ன  உங்களுக்கு ...



10 comments:

MARI The Great said...

அருமையான கவிதை சகோ.., தொடர்ச்சியாக வந்த இரண்டாவது காதல் கவிதை இது என்று நினைக்கிறேன் .. :)

செய்தாலி said...

ஐந்தாம் பொருத்தம்
இல்லற அவசியம்
கருப்பொருள் வாழ்க்கைக்கான தேடல்

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க்கைக்கான
கருப்பொருளை
தேனீக்கள் போல
சேமிகிறவன் நீ .

Unknown said...

ஜந்தாம் பொருத்தம் என்றால் என்னவென தெரியவில்லை அக்கா...

பட் கவிதை சூப்பர்ர்ர்ர்ர்ர்......

மகேந்திரன் said...

காமமற்ற காதலின் மகத்துவம்
வரிகளில் அருமையாய் புலப்படுகிறது...
உடலின் பால் ஈர்ப்பு கொள்ளாது
உள்ளத்தின் பால் கொண்ட அன்பை
விளக்கும் உன்னத கவிதை...

அ. வேல்முருகன் said...

ஐந்தென்ன
அத்தனையும்
பொருந்திதான் இருந்தது

ஆயினும்
கருதான் தங்கவில்லை
செய்ற்கைமுறை தேடினர்

வாழ்வின்
கரு அஃதில்லையென
அருமையாய் உரைத்தீர்

விஜய் said...

ரஜ்ஜு பொருத்தம் அமைய வாழ்த்துக்கள்

விஜய்

ஹேமா said...

அன்பு கூடிவிட்டால் ஐந்தாம் பொருத்தத்தைத் தள்ளியே வைத்துவிடலாம் மாலதி !

Anonymous said...

திருமணப் பொருத்தம் 5 எல்லாம் புரிகிறது. ஆனால் கவிதை கொஞ்சம் விளங்கவில்லை சகோதரி. ஆயினும் தங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Athisaya said...

வணக்கம் சொந்தமே!பெரியவர்கள் சொல்லித்தான் கேள்வி..இன்று புரிகிறகு.அன்பிற்கு முன் வேறென்ன வேண்டும்..???அருமை