இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Wednesday, 23 May 2012

ஆனந்தக் காதலில் ... மூழ்கித் திளைக்கிறேன்.நமக்கான  காதல்
தோற்றுவாய் ...
கரும்புத்  தோட்டம் ...
கால்வாய்.....
கோவில் ... குளம் ...
என ஊர்புற  காதலாகவும்

கடற்கரை ... பேருந்து...
வெளிச்சம்  குறைந்த
பட்டணத்துப் பொலிகாளைகள்
நாய்போலகூடித்  தழுவும்
நட்சத்திர  விடுதிகளுமில்லை.

காபிஷாப்  ஷாப்பிங் மால்
மல்டி பிளக்ஸ்  இணையம்
மூஞ்சிப்  புத்தகம்
என திரிந்து கிடக்கவுமில்லை.

கட்டான உடலைக்
கண்டு காதலிக்கவுமில்லை

வட்டநிலா போன்ற
மூஞ்சியைக்  கண்டு
காமுறவுமில்லை.

பகட்டான  வாழ்க்கைக்கு
பணத்திற்கு...
நாம் காதலிக்கவில்லை.

தெளிவான  பார்வை
தேர்ந்த  அறிவு ...
உனக்குமிருந்தத்து ...
எனக்குமிருந்தத்து .

தமிழரின்
உயரிய நூல்
தொல்காப்பியம் போல
காதலுக்கான  இலக்கணங்களை
முரண்படா விதிகளுடன்
கட்டமைத்தாய்.

அந்தக்  காதலில்
இழுக்கப்  பட்டேன்
அந்த  ஆனந்தக்
காதலில் ...
மூழ்கித்  திளைக்கிறேன்.

   

14 comments:

வரலாற்று சுவடுகள் said...

இலக்கண காதல் ... :)

Ramani said...

அற்ப உணர்வுகளுக்கு கட்டுப்படாத
முதிர்ச்சியான காதல் இலக்கணம் கூறும்
கவிதை அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

கட்டவிழ்ந்த பொருளடங்கும்
கட்டுக்கோப்பான தமிழ் இலக்கணச்
சுவைகொண்டு தருவித்த காதலிங்கு
தேன் மதுரமாய் இனிக்கத்தான் செய்கிறது சகோதரி...
நகர்ப்புற தறிகெட்ட காதலை நாசூக்காய் சாடிய விதம்
அருமை...

எஸ்தர் சபி said...

காதல் ஆனந்தமாக இருந்தால் சந்தோஷம்தான் அக்கா..

ரிஷபன் said...

உண்மைக் காதலின் அழகு தெரிகிறது.

விமலன் said...

வாழ்க நல்ல காதல்.

அரசன் சே said...

செவியில் அறைந்த மாதிரி ஒரு காட்டம் .. கவிதை மிக இனிமை இந்த காதலை போல ...

சத்ரியன் said...

காதலும் கூட காலந்தோறும் தன்னை மாற்றிக்கொள்கிறது போல மாலதி.

அ. வேல்முருகன் said...

எட்டு திக்கும்
போற்றட்டும்
இலக்கண காதலை

ஹேமா said...

காதலின் அழகும் உணர்வும் கவிதையில்....!

இராஜராஜேஸ்வரி said...

தெளிவான பார்வை
தேர்ந்த அறிவு ...
உனக்குமிருந்தத்து ...
எனக்குமிருந்தத்து .

பாராட்டத்தக்கது !

Athisaya said...

காதலின் ஆனந்தம் வார்தைகளில் புரிகிறது..வாழ்த்துக்கள்

kovaikkavi said...

பேரானந்தக் காதலாகட்டும். நல்ல கரு. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சி.கருணாகரசு said...

கற்புடைய காதல் வாழ்க.