வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசி
பழக்கமில்லை .
கடலலையாய்
உள்ளம் அலைபாய்கிறது .
என் உறக்கத்தை
உன்நினைவு
கடன்வாங்கிக்
கப்பலை செலுத்துகிறது .
துடுப்பிழந்த
ஓடமாய் ...
ஓய்ந்துபோக இயலாது
வெடித்துக் கதறுகிறேன் .
நீலவானம்
முடியும்வரைத்
தேடுகிறேன்
உன்னினைவுச்
சங்கிலியோடு .
திமிங்கிலங்கள்
அசைபோடுமுன்
அன்பனே - உன்
முரட்டுக் கரம் தா .
23 comments:
கவிதை மிக்க அருமை சகோதரி.ரசித்தேன்...நன்றியோடு நான்.
கனவில் முரட்டு கரம் வந்துவிட்டதா...
அப்ப விரைவில் மேளச்சத்தம் வீட்டில் கேட்க்கும் ....
அருமை சகோ
பெண்கள் மனதில் வைத்து எழுதிய கவிதை உங்கள் கருத்துக்கள் அதை சிறப்பிக்கும்
http://tamilyaz.blogspot.com/2012/07/ladies-choice.html
பிரிவின் வலியை தாங்க முடியாது. அதனினும், மீண்டும் சேர்ந்துவிட வாய்ப்பை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை மிகக்கொடுமையானது! அதை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்!
வித்தியாசமான கவிதை எழுத்துக்கு சொந்தக்காரர் தாங்கள்!
நல்லாயிருக்குங்க கவிதை..எப்படியிருக்கீங்க.. அடிக்கடி எழுதுவதில்லை போலும்..
ஆறுதல் தேடும் வரிகள்...!
பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள்...!
வார்த்தைகளே வண்ணமயமாய் இருப்பதால்
அதற்கு வர்ணம் பூசவேண்டியதில்லை
உணர்வு கடத்தியாக விளங்கும் கவிதை
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பிரிவு வேதனை கவிதை அருமை
azhakiya vaarthaiyin-
korvai!
அருமையான காதலின் தவிப்பு சகோ.
தங்களை தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
கவிதைக்குள் மறைந்து கிடப்பவை பல.
உறக்கங்களை கடன் வாங்குற கொஞ்சசம் இனிமையானவையாகவும்,கொஞ்ச்சம் துயரம் சுமந்ததாகவும்/
நல்லாருக்குங்க சகோ கவிதை...
நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .
ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php
வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
:) மிக ரசித்தேன் சொந்தமே!வாழ்த்துக்கள்.
கப்பலில் செல்லும் போது
துடுப்பில்லா ஓடம் ஏன்
நினைவுகள்
மாறி மாறி
வாட்டுகிறதோ
காதலன் கொஞ்சம் முரட்டு அன்போடு இருப்பதும் அழகுதான் மாலதி !
நல்ல கவி வரிகள்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நீல வானம் முடியுறதுக்குள்ள தேடல் முடிஞ்சுடுமா? நீண்ட தேடலா இருக்கே!
பாராட்டுகள்...!!
arumai///
Post a Comment