கடவுள் மறுப்பை
கட்டுமிரண்டித்தனாமாய் ...
அறிவியலை புரிந்து கொள்ளாத
கண்மூடித்தனத்தோடு .
எப்போது புரிந்து கொள்வாய்
தமிழனே .
கடவுள் மறுப்பு என்பது
எப்படி... ஏன்...
என அறிவியல்
நுட்பத்தோடு ...
நீ ...
மறுத்தளிக்க
வேண்டும் கடவுள்
இல்லை கடவுள் இல்லை
இல்லவே இல்லை
என்பது எப்படி
அறிவும் அறிவியலும் ஆகும் ?
பெரியார் ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு படுத்தியதும்
முடமாக்கியதும் .
பழமை
அறிவியாலை உள்ளடக்கியது
யோகமும்
சாங்கியமும்
உலகாயதமும்
உள்ளடங்கியதுதான்
வள்ளுவரின் திருக்குறள் .
எவனாவது மறுதலிக்க இயலுமா ?
கடவுள் எப்படி
எதற்காக படைக்கப்
பட்டர் என்பதை
அறிவியல் நுட்பத்தோடு
புரிய வைக்க வேண்டாவா ?
சடங்குகளும்
சில அறிவியல் நுட்பம் வாய்ந்தவை
இதை புரிந்து
கொள்ளவில்லை
என்றால் எதையும்
முழுமையாக
புரிந்து கொள்ள இயலாதே .
காட்டு மிராண்டியாய்
இருந்து விடாதே
விழி ...
ஏழு ...
பார் ...
உலகை நோக்கு
வெற்றியை கைது செய் .
அறிவியல் சில சமயம்
ஆன்மீகமாக
தோற்றம் கொண்டு
இருக்கும்
அறிவைதிரட்டி
புரிந்து கொள்ள முயல்
காட்டுமிராண்டியாக
மறுதலித்து
முடங்கிப் போகாதே .
அறிவியலை
ஆன்மீகமென எண்ணி
கோட்டை விட்டு விடுவோம் .
சான்றைத் தேடி
அறிவியலை பரப்புரை
செய் .
சிந்திப்பாய்
தமிழனே .
16 comments:
சிறப்பான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html
சிந்திக்கக்தூண்டும் கவிதை வாழ்த்துக்கள் தோழி!
முதல் வருகை தோழி. வள்ளுவர், பெரியாரைப் பற்றி கூறுபவை அனைத்தும் உண்மையே...
தொடருங்கள் வாழ்த்துகள்...
பெரியார் - தமிழ் சமூகத்தை முட்டாள்களின் கூட்டமாக தான் ஆக்கி இருக்கார். இதை என்று பெரியாரிஸ்ட்கள் உணர்கிறார்களோ - அன்றே அவனுக்கு எழுச்சி.
நல்ல வரிகள்...
/// காட்டு மிரண்டியாய்
இருந்து விடாதே
விழி...
எழு...
பார்...
உலகை நோக்கு
வெற்றியை கைது செய் ///
அருமை... பாராட்டுக்கள்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
ஆன்மீகத்தையே எல்லாவற்றுக்கும் நம்பித் தொலைப்பவர்களாகத்தானே இன்னும் இருக்கிறார்கள்.கோவில்களும்,கள்ளச்சாமிகளின் எண்ணிக்கையும் கூடித்தானே இருக்கு.சரி சொல்லுங்கள் மாலதி.யார் காதிலாவது விழுந்தால் சந்தோஷம் !
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்.
சிந்திக்க வைத்த பதிவு...நன்றி சகோ
சிந்திக்க வைக்கும் வரிகள் அருமை சகோ.
நல்லதொரு முயற்சி..கவிதையாக...!வாழ்த்துக்கள் சொந்தமே!
இனிமையான கவிதை! கருத்துக்களை தெளிவாய் சொன்னவிதம் அருமை!
http://www.krishnaalaya.com
http://www.krishnalaya.net
அருமையாகவுள்ளது.
சிந்திக்க வைத்துள்ளீர்கள்.
தொடருங்கள் தோழியே
அருமை , தொடருங்கள்
என் தளத்திற்கும் வருகை தாருங்களேன்
வணக்கம்
தந்தை பெரியார் அவா்களின் எழுத்துகளை மிக நன்றாகப் படிக்கவும்
பெரியார் இல்லை என்றால் இன்று தமிழே இல்லை!
மகளி்ர் மாநாட்டில்தான் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது
நனறாகப் படிக்கவும் பிறகு எழுதவும்
மந்தை மாடாய்த் தமிழினத்தை
மட்டம் தட்டி வைத்தார்கள்!
கந்தை என்றே தமிழா்களைக்
கைகள் தீண்ட மறுத்தார்கள்!
சிந்தை தெறிக்கக் கேள்விகளைச்
செதுக்கிச் செதுக்கி எழுதியநம்
தந்தை பெரியார் இல்லையெனில்
தமிழன் எது? மாலதியே!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
!
Post a Comment