அன்புகாட்டுவதில்
புதுமை படைக்கின்றாய் .
மொழிபோல
நிலைத்து நிற்கின்றாய் .
முன்விட்டு பின்னர்
அறிவை சுவைக்கின்றாய் .
கோ போல என்னிதயத்தில்
உயர்ந்து நிற்கிறாய்.
வம்சம் தழைக்க
வழியும் செய்கின்றாய்.
கொஞ்சம் தானே
சிரித்துக் கொள்கின்றாய்.
குறைவிலா
மகிழ்வூட்டுகிறாய் .
நிறைவான இன்பம்
காண தூண்டுகிறாய்.
கண்ணில் பெரு
ஒளியாய் ...
இதயத்தே
இனிய மகிழ்வாய்....
ஆர்பரிக்கும் ...
அலைகடலாய்.....
இன்முகம் காட்டுகிறாய்.
திக்கு தெரியாமல்
இன்பம் காணுகிறேன் ....
துணையாய் வந்திருக
பற்றிக் கொள் ....
தற்செயல்தான் இந்த ஆக்கத்தில் ஒரு குறிப்புஒன்று பொதிந்து உள்ளதை காணுகிறேன் .
கண்டு சொல்லுங்கள் பரிசொன்றை வெல்லுங்கள் .
தமிழன்புடன் ....
மாலதி .
16 comments:
நல்லபடைப்பு.
உங்கள் திருமண நாளா?
ஏதோ ஒரு நல்லநாள்
வாழ்த்துக்கள்
திருமண நாள் அல்லது அதற்கடுத்த பதவி உயர்வு..?! வாழ்த்துக்கள்!
வாழ்க்கைத்துணையை கண்ட
வரமான மகிழ்வோ ..!
கவிஞா் மாலதி அவா்களுக்கு
வாழ்த்துக்கள்
இனிக்கும் தமிழை இசைக்கின்ற தோழி
கனிபோல் அளித்தாய் கவி!
குன்றின் விளக்காய்க் கொடுத்த வலைச்சரம்
நன்றி நவில்கின்றேன் நான்
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...
ஆமாம் எனக்கும் அதே சிந்தை தான் .திருமண நிச்சயமாக இருக்கலாம் அல்லது திருமண நாளாக இருக்கலாம். வாழ்த்துக்கள் சகோ.
நல்ல நாட்களில் நானும் வாழ்த்திப் பெருமையடைகிறேன்
உயிரின் பிறந்தநாளோ?
kavithai arumai...!
kanavanavarai patriyathaa..!?
சின்னஞ் சிறு குழந்தையை பற்றிதானே?
மிகவும் மனகிளர்ச்சியளிக்கும் கவிதை
சிறப்பான கவிதை! அருமையான வரிகள்! பகிர்வுக்கு நன்றி!
வாழ்த்துகள் வாழ்த வேண்டிய கவிதை வாழ்த்திவிட்டேன் அதன் அருமைக்கு
சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்
மனதில் இனிமையும் சுகமும் தரும் வார்த்தைகள்.....சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்
மிக அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
Post a Comment