இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday 25 April 2013

பொறுப்புடன் வாழ்தலும் தான் .

உள்ளமும் உடலமும் 
உயிர்ப்போடு  இருக்கிறதென்றால் 
சூடுபற்றி  உடல் 
இருத்தல்  தேவை.

கண்ணில் கண்டவை 
எல்லாமே ...
உண்மையன்று 
மெல்ல மெல்ல ...
உள்  புகுந்து 
உண்மையரிதல் 
உயர்ந்த  பண்பு.

கண்ணே...
மணியே ...
கற்கண்டே  என்பதன்று 
வாழ்வு .

ஏற்றத்திலும்  இறக்கம் 
காணுகையிலும் 
குத்திக் கட்டாமல் 
கூடி 
வாழ்தல்தான் 
இனிமையன  வாழ்வின் 
தொடக்கமன்றோ .

அறியாமையில் 
உழலும்  மாக்கள் 
கூட்டம்  சிந்திக்க 
வைப்பதுதான் 
சீரிய சிந்தனையாளர்களின் 
உண்மையன வேலை .

உயிர்ப்போடு இருத்தல் 
தன்னலத்தோடு 
இருத்தலுமன்று 
பொது நலந்தாங்கி 
பொறுப்புடன் 
வாழ்தலும்  தான் .

 


11 comments:

உஷா அன்பரசு said...

ஆமாங்க சில பேரு அன்பை கூட வெளி பகட்டா சும்மாவே சீன் போடுவாங்க.. ! நல்ல புரிதலோடு உண்மையான அன்பு இருக்கனும்ங்க..

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான சிந்தனை....ஒவ்வொன்றும் சத்தியமான வரிகள்...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல கருத்துக்கள்

//உயிர்ப்போடு இருத்தல்
தன்னலத்தோடு
இருத்தலுமன்று
பொது நலந்தாங்கி
பொறுப்புடன்
வாழ்தலும் தான் . //
மிகச் சரி

திண்டுக்கல் தனபாலன் said...

முத்தான கருத்துக்கள்...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

(கட்டாமல் - காட்டாமல்)

இதை வெளியிட தேவையில்லை... நன்றி...

இளமதி said...

ஆமாம் தோழி மாலதி... உயிர்ப்போடு இருப்பது என்றால் பொதுநலத்தோடு அடுத்தவர் நன்மை தீமைகளை அனுசரித்து பொறுப்புடனும் வாழ்தல் என்பதுமே.

நல்ல சிந்தனைக் கவி தந்தீர்கள். அருமை! வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

மனித மாண்புகள் பற்றியும்
வாழ்வியல் பொருள் பற்றியும் உரைக்கும்
அருமையான கவிதை சகோதரி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துக்ள்.

-=-=-=-=-

அன்புடையீர்,

வணக்கம்.

இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.

தலைப்பு:

”ஸ்வர்ண குண்டல அனுமன்”

இணைப்பு:

http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html

தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி,

இப்படிக்குத்தங்கள்,

வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in

ம.தி.சுதா said...

அருமையும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது

இராஜராஜேஸ்வரி said...

வெற்றியை அறிவி .

இலக்குகளை
விரிவு படுத்த வாழ்த்துகள்..!

இராஜராஜேஸ்வரி said...

உயிர்ப்போடு இருத்தல்
தன்னலத்தோடு
இருத்தலுமன்று
பொது நலந்தாங்கி
பொறுப்புடன்
வாழ்தலும் தான் .

சிறப்பான சிந்தனைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..