அன்பு உறவுகளே ,
பணிவான வணக்கம் நீங்கள் என்மேல் கொண்டுள்ள அளவற்ற மதிப்பிற்கு தலை வணங்குகிறேன் . இருப்பினும் இன்றைய என்னுடைய தனிப்பட்ட சூழல் . உளநிலை எல்லாமே எனக்கு எதிராக செயல் படுகிறது .
ஒரு தனிமனித சூழலில் காதலின் பங்களிப்பு என்ன என்ன... பாதிப்பை உண்டாக்குகிறது பிரிவு எப்படிபட்டது அது என்ன உள வாற்றளைதரும்
என்ன பாதிப்பை உண்டாக்கும் என்பது பற்றியும் எனது முன்கதையும் முடிவான கதையும் வரும்..... இதில் நான் எவரைப் பற்றியும் புண் படும் படி கூறப் போவதில்லை .எனது எல்லா இடுகைகளும் இந்த சமூகத்திற்காய் அர்ப்பணிக்கப் பட்டவைகளாகும் . அதே அடிப்படையிலேயே எனது பதிவுகள் தொடரும் .....அது எப்போது அதுதான் புரியவில்லை ஆனாலும் உங்களை வாசித்துக் கொண்டே இருப்பேன் .....
பணிவான வணக்கங்களுடன்
மாலதி.

10 comments:
இன்றுதான் என் தளம் பக்கம் வந்தீர்கள் ஒருவேளை எனது கவிதைகளைப் படித்துவிட்டு இவ்வாறான முடிவை எடுத்தீர்களா? தொடர்ந்து எழுதுங்க நீங்க நல்லாத்தான் எழுதுறீங்க தொடருங்கம்மா
வலிகள் இல்லை எனவோ பொய்யெனவோ கூறவில்லை.
உளமாற்றத்திற்கு நல்லன நிறையவே இருக்கின்றன.
உங்கள் இன்றைய நல்லமுடிவு ஆறுதலைத்தருகிறது. வாருங்கள். வரவு நல்வரவாகட்டும்!
வாழ்க்கை தருகிற வலிகளை...
காலம் தருகிற காயங்களை...
வாசிப்பும்...எழுத்துமே..மெல்ல மெல்ல ஆற்றும்.அவற்றைப் போல சிறந்த தோழமைகள் கிடையாது.எழுத்தாளர்கள் என்னவோ தெரியவில்லை.ஆனால் அற்புதமான எல்லாக் கவிஞர்களும் வாழ்வின் ஏதோவொரு கணத்தில் தீராவலியை சுமந்தவர்கள் தான். அவர்களை கண்ணீர்க் காடுகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தவை அவர்களது கவிதைகள் தான். ஒரு படைப்பாளன் தன் ஆன்மாவுக்கு திருப்தியளிக்கவே எழுத்தை கையிலெடுக்கிறான். எழுத்து எல்லாப் பாரங்களையும் இறக்கி வைக்கும். எழுத்து எமது துயரத்தின் வடிகாலாய் இருக்கும். எமது பாரங்களை சுமக்க எந்த யேசுக்களையும் எதிர்பார்க்க முடியா சமூகத்தில் எழுத்து நம்மை தாங்கிக் கொள்ளும் வல்லமை கொண்டது. காலத்தின் காயங்களுக்கு களிம்பு தடவும் எழுத்துக்கள். நாங்கள் எழுத்து வழி இறக்கி வைக்கிற பாரங்களில் இதயம் பஞ்சாகும். இன்னும் மிச்சமிருக்கிற வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தை எழுத்துக்கள் தரும். துக்ககரமான எல்லாப் பொழுதுகளிலும் புத்தகங்களைப் போல சிறந்த நன்பர்கள் யாரும் இருக்கவே முடியாது. வாசியுங்கள். வாசிப்பும் எழுத்தும் உங்களை வாழ்வை மறுபடி மறுபடி நேசிக்கத் தூண்டும். வாருங்கள். வாசியுங்கள். எழுதுங்கள். வாழுங்கள்.
எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து சிந்தனைகளை விரைவில் தொடர வேண்டுகிறேன்...
எதுவாக இருந்தாலும் மன நிம்மதியுடனும், மகிழ்வுடனும் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!
Vetha.Elangathilakam
இனிமேல்தான் உங்களால் அதிகம் எழுத முடியும்,எழுதுங்கள் உங்கள் துயரமெல்லாம் தூள் தூளாகிவிடும் தொடருங்கள் உங்கள் மனமெல்லாம் நாளும் கவி பாடவரும்....
உங்களின் எல்லோரின் கருத்துக் களும் என்னை சிற்றுளி கொண்டு செதுக்குகிறது ... காலத்தின் சூழல் ஒன்றை உறுதியாக நம்பிவிட ... அதில் உண்டான சில .... என்னை என்னுள்ளத்தை கிழித்து விட்டன
உண்மையை சொல்லுவது எனின் இது மிகப் பெரும் பிழையன்று எனக்கு தங்கும் திறன் இல்லை ... அவ்வளவே .... மீண்டும் எழுத வருவேன் ..... பணிவுடன் மாலதி .
உங்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்களும் நன்றியும்

இன்றுதான் முதன் முறை தங்களின் வலைப் பக்கம் வந்தேன். தங்களின் பதிவைக் கண்டபோது வருத்தமே மிஞ்சியது.
விரைவில் தங்களின் இன்னல்கள் நீங்கி, மனமகிழ்வுடன் வலைப் பூவில் வலம் வர வாழ்த்துக்கள்
காலம் எல்லா மனக்காயங்களுக்கும் மருந்துபோடும். வீழ்ந்துவிடாதீர்கள், சோர்ந்துவிடாதீர்கள். முன்னிலும் வேகமாய் உத்வேகமாய் எழவேண்டும். உலகம் பரந்துபட்டது. நீங்கள் விரும்பிய அந்த வாழ்க்கை மட்டுமே வாழ்க்கையில்லை. இன்னும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். யாருக்காவும் உங்கள் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.
காதலில் ஜெயித்தவர்கள் மிகவும் குறைவு. அப்படி ஜெயித்தவர்கள் சந்தோஷமாய் வாழ்வதும் குறைவு. எல்லாருக்குமே இந்த அனுபவங்கள் உண்டு. என்னுடைய 'என் இனிய ஸ்நேகிதிக்கு...' என்ற இந்தப் பதிவை வாசித்துப்பாருங்கள். இந்த பிறவி ஒருமுறை மட்டுமே. சந்தோஷமாக வாழப் பழகிக்கொள்ளுங்கள். வாழ்த்துக்களுடன் கவிப்ரியன்.
Post a Comment