இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 15 June 2013

திட்டம்கொண்டு போராடு - காதல் கடிதம்போட்டி .



எனது அரக்கு
மாளிகைகள் 
எரிக்கப் பட்ட பின்னரும்....
நான்  கற்ப்பூரங்களை
தோடிக்கொண்டு  இருக்கிறேன்
விளக்கேற்றிக் கொள்ள  அல்ல
வீடுகட்டிக்  கொள்ள .தேவையாக இருக்கிறது

     எல்லாக் கதவுகளும்   அடைக்கப்  பட்ட பின்னரும் நான்  எனக்கான  பாதையை தெரிவு  செய்து விட்டேன்  எதையும்  ஏற்றுப் பழகுவது .... இந்த உலகில்  எது நிரந்தரம்  எது தற்காலிகம் ?

எல்லாமே பிழைபட  கற்றுக் கொண்டால்  பாதைகள் கடினமாகத் தோன்றும்  மிகச் சரியானதை புரிந்து கொள்ளாவிட்டாலும்  பாதைகள் கடினாமாகும் . இந்த  கடிதம் வரையும்  எல்லா நொடிகளும்  நான் மிகவும் தெளிகவகவே  இருக்கிறேன் .
   ஒரு இனிய வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும்  என பல ஆண்டுகளாக  செதுக்கிச் செதுக்கிச்  செய்து வைத்து இருந்தேன்  அந்த இனிய வாழ்வு  கிடைத்து விட்டதாய் . உள்ளூர  அகமகிழ்ந்தேன்  எல்லாமே கனவுபோல நடந்தேறிவிட்டது . எது  நடக்கக்  கூடாதோ  அது  நடந்தேறி விட்டது  சராசரிபோல  பிரிவின் துயரில்  மூழ்கிக்  கிடந்தேன் .
   நமக்கான கற்ப்பிதங்கள்  நம்மைப் போலவே  முரண்பட்டே கிடக்கிறது . மூளியாக.... வாழ்க்கையும் புரிதல்களும்  நான் சொல்லுவதே  சரி  நீ எண்ணுவதே  மிகவும் சரி  என்பது எல்லாமே  இங்கு  பிழையானவைகள் இங்கு எல்லோரும் எல்லாவற்றையும்  கற்றுக் கொண்டு வருவதில்லை  கற்றுக்  கொடுப்பதும் இல்லை .
உனதான  தொடர்புகள்
எல்லாதிசைகளிலும்
அடைத்து  மூடப் பட்டன
ஆனாலும் .....
என் நம்பிக்கை
துளிர்விடும்  என்ற
ஆசையில் ....  வாழுகிறேன் .
காதலாம்  காதல்  எல்லாமே இனக் கவர்ச்சி ... தேவைகள் தீர்ந்து போனால் ஆசைகள் அருகிப் போகும்  என  வரட்டுத் தத்துவ வாதிகள்  கூறலாம் . கூர்மழுங்கிய  வார்த்தைகளினால் .அனால்  எனக்கான  வாழ்க்கைப்  பாதை  எனதான திட்டமிடலுன்  உன்னதமான  நம்பிக்கையுடன்  வடிவமைக்கப் பட்டவைகள் .
நிகழ்காலம் தான் உண்மை கடந்த காலமும்  எதிர்கலாமும் நமது கட்டுப் பாட்டில் இல்லை  எனலாம்  நிகழ்காலம்  நமதானால்  எல்லாக் காலங்களும்  நமக்கானதே .
ஏமார்ந்தோம் ....
ஏமாற்றப் பட்டோம் ...
என் நம்பிக்கைகள் வெட்டிச்
சாய்க்கப் பட்டுவிட்டன
துன்பக்  கடலில்
துடிக்கிறேன் ...    என்பதெல்லாம்  முட்டாள் தனம் நிறைந்த சொல் விளையாட்டுக்கள்.
      நாம்  நாமாக இருக்கும் போது  நாம் என்றுமே  அழத்  தேவையில்லை .
இப்போது  என்னதேவை ...
என்ன இருக்கிறது ...
எப்படி பயன்படுத்தி
மகிழ்வடையப் போகிறாய்.
     என்பதே  எனது புதிய  கற்ப்பிதம்  ஆயிரம்  ஆண்டுகள்  கற்றுக் கொள்ளாதது  ஒரு நொடியில்  கற்றுக் கொண்டு விடலாம் . கற்றுக்  கொள்ளவிட்டால்  இங்கு கற்றுக்  கொடுக்க வேண்டியதும்  பெரியதேவையாக இருக்கிறது  அனால் முறையாக  கற்றுக் கொடுக்கத்தான்  . இங்கு ஆளில்லையோ  என எண்ணத் தோன்றுகிறது .
    ஒரு சிறிய பிழை நேர்ந்து விட்டால்  அதை எவ்வளவு  அழகாக திருத்திக் கொள்ள வேண்டும் .ஒற்றை வார்த்தை பிழை செய்துவிட்டேன்  திருத்திக் கொள்ளுகிறேன்  மீண்டும் பிழை நேராது  இது எவ்வளவு  மனிதனை மா மனிதனாக  மாற்றும் உயரிய வார்த்தை  இந்த  வார்த்தையை  நாம் கையாளாத போது  காயங்கள் பெரிதாகும்  என்ன செய்யப் போகிறோம்.?
   கற்றுக் கொடுப்பவர்மேல்  நம்பிக்கை இழந்து போனால்  கற்றுக் கொள்ள  தேவையிருக்காது  சற்று கீழிறங்கி  நான் இதை செய்து இருக்கவேண்டும்  இதை செய்து விட்டேன் பிழை என்னுடையதுதான்  பொறுத்தருளுங்கள்  இந்த  வார்த்தைகளை  நான்  பயன் படுத்தவே இல்லை . பயன் படுத்தி இருந்தால்  நான் மா மனிதனாக  உயர்ந்து இருப்பேன்
     வாழ்க்கை  சட்டையல்ல  மாற்றிக் கொள்ளுவதற்கு காலங்கடந்து நிற்க வேண்டியது  பொறுமையுடன்  காத்திருக்க வேண்டியதும்  பொறுமையாக  நடக்க வேண்டியது இங்கு தேவையாக இருக்கிறது  நான்  அதையும் சொல்லவில்லை . செய்து காட்டவும்  இல்லை .
     பிழை முதலில்  என்னில் இருந்தே தொடங்குகிறது  இல்லையேல் இங்கு தவறு நேர்ந்து இருக்காது .பிழை செய்துவிட்டேன் பொறுத்துக்கொள்  என வேண்டிய பிறகும்  மன்னிக்கவில்லை என்றால்  ...
     தெரிந்தே  வேண்டுமென்றே  தவறு செய்யவில்லை எதோ ஒருவிதமான  பிழையான புரிதல்  இந்த்த சமூகம் கொடுத்த  அறிவின் மிச்ச சொச்சம் என்னை பாதித்துத்  தொலைத்து விட்டது . என்னுடைய இப்போதைய  நிலையை எண்ணிப் பார்த்து இருக்கலாம்  இதை அழகா கட்டிக் கட்டி இருக்கலாம்  எனக்கு கற்றுக் கொடுகாதது ....
துக்கமும் சினமும் ...
கண்ணீரும் கையாலதத்தனமும் ...
ஒன்றுதான் .
விபத்து நேர்ந்து போனது
சாலையை அடைத்துக் கொண்டு
இருந்தால் எப்படி ?
அழுகையை விட்டெரிந்து
புதிய   வழித்தடத்தை
செப்பனிடு ...
 செப்பனிட்டு இருக்க வேண்டும்  என்னுடைய அவசர புத்தி  எல்லாவற்றையும் பாழ்படுத்தி அல்லவே செய்துவிட்டது .
     
     நீ  இல்லாத  எனதான  வாழ்க்கை  சுவைக்காது நீ இல்லாத  என் வானம்  உதிக்காது  நீ  காட்டாத  திசை  எனக்கு புரியாது ...
எல்லாமுமாக இருந்த  நீ  இன்று என்னுடன் இல்லையென்றால்  இந்த உடல் உண்ணவும் உறங்கவும்  மறந்துபோகிறது . மனிதம்  மரித்துப் போக துடிக்கிறது.

    உன்னுடலை கரைத்துக் கொண்டு  என்னலனைத்  தாங்கிநின்றாய்.
உரிமையானவ... உன்முகம் காட்டு ... போலித்தனமில்லா  உனதன்பை  இந்த பரவெளியில் வேறெங்கு தேடட்டும் .

    காதலுக்கும்  இல்லறத்திற்கும்  இடைவெளி  நீண்டதாய்  உணரவில்லை நீ காட்டும் பரிவும் பாசமும்  முற்றிலும்  மாறுபட்டவை இதில்  காமமும்  காதலும் உன்னதமாக  உயர்ந்து நிக்கிறது .

  இந்த சமூகம் பற்றிய புரிதல்  மாறுபட்டது  ஆனால் நீ  என்றும்  மாறாத  அன்பை  கொட்டிக்  காட்டுகிறாய் . அந்த பிரதி பலனற்ற  பாச வலையை ...  நேசித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன் .

                                                                          என்றும் அன்புடன்மாலதி

25 comments:

இளமதி said...

உங்கள் இப்படைப்பு அருமை என்பதெல்லாம் மிக மிக சாதாரணம்தான் தோழி!
அத்தனை சிறப்பாக வரைந்து தள்ளியிருக்கின்றீர்கள். மீண்டும் மீண்டும் வாசித்தேன். உள்ளக்கிடக்கையில் இருப்பவற்றை கனகச்சிதமாகக் கொட்டித்தீர்த்துவிட்டுள்ளீர்கள்...

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி!

எம்.ஞானசேகரன் said...

அனுபவங்களையே வார்த்தைகளாக்கியிருக்கிறீர்கள். இந்த போட்டியின் மூலம் மீண்டும் பதிவுலகில் பிரவேசித்திருக்கிறீர்கள். மாற்றம் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

மாலதியின் காதல் மடல்கண்டேன்! வாழ்த்துகிறேன்!
கோலக் குறளில் குழைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Prem S said...

நன்று வெற்றி பெற வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

/// நிகழ்காலம் நமதானால் எல்லாக் காலங்களும் நமக்கானதே ...

போலித்தனமில்லா உனதன்பை இந்த பரவெளியில் வேறெங்கு தேடட்டும்... ///

வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி...

MANO நாஞ்சில் மனோ said...

வெற்றி மாலை சூட வாழ்த்துகிறேன்....!

Thozhirkalam Channel said...

இனிமையான வார்த்தை சேகரிப்பு,,, கவிதை கொண்டு கடித வடிவில்,,,

வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ...

ஜீவன் சுப்பு said...

ரெம்ப நல்லாருக்குங்க ...!

ஸ்ரீராம். said...

அருமை. சிலவரிகள் அசத்துகின்றன.

அப்பாதுரை said...

//நிகழ்காலம் நமதானால் எல்லாக் காலங்களும் நமக்கானதே
நினைவில் வைக்க வேண்டியது, சுலபமாக மறந்து போகிறது.

உணர்வு மிகுந்த கடிதம் படிப்பவரை உலுக்கியெடுக்கிறது.

வாழ்த்துக்கள்.

Tamizhmuhil Prakasam said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி !!!

ஹிஷாலி said...

ஒவ்வொரு வரிகளும் செதுக்கி விட்டேர்கள் அக்கா வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

வெற்றிவேல் said...

அழகான, உணர்வுப்பூர்வ அனுபவ காதல் கடிதம்...

வெற்றி பெற வாழ்த்துகள்...

சசிகலா said...

தோழி என் எழுத்துக்களோடு உங்க சில வரிகள் ஒன்றிப்போகின்றன. நான் மறுபடி முதலில் இருந்து தொடங்க வேண்டும் போல... அடடா.

saidaiazeez.blogspot.in said...

வாழ்க்கை சட்டையல்ல மாற்றிக்கொள்வதற்கு...
எதோ ஒருவிதமான பிழையான புரிதல் இந்த்த சமூகம் கொடுத்த அறிவின் மிச்ச சொச்சம் என்னை பாதித்துத் தொலைத்து விட்டது...
விபத்து நேர்ந்து போனது சாலையை அடைத்துக் கொண்டு இருந்தால் எப்படி ?...
இந்த சமூகம் பற்றிய புரிதல் மாறுபட்டது ஆனால் நீ என்றும் மாறாத அன்பை கொட்டிக் காட்டுகிறாய்...

சகோ. மாலதியின் இக்கடிதம் சமூகத்தின் பல அவலங்களை துகிலுரிக்கின்றன. ஒரு காதல் கடிதத்தில் இவ்வளவையும் வெளிப்படுத்தியுள்ள உனக்கு என் வாழ்த்துக்கள்.

மாலதி said...

அனைவரின் வருகைக்கும் வணக்கங்களும் நன்றிகளும் . இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியாகும் முன்னரே எனக்கான போராட்டம் தொடக்கம் ஆகிவிட்டது நான் இந்த பதிவை தொடருவேனா இல்லையா என ஒருவித போராட்டத்தில் இருந்த சூழலில் சீனு ஐயா அவர்களின் போட்டி அறிவிப்பு வந்தது இந்த சூழல் எனக்கான சூழலாக மாற்றிக் கொண்டு எழுதத் தொடக்கி விட்டேன் . இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுள்ளத்தில் கருக்கொண்டு உருவானவைகள் எதோ போட்டிக்காக எழுதப் பட்டதல்ல அனாலும் போட்டியில் பங்கேற்றுக் கொண்டது என்னவோ உண்மை உங்களின் அளப்பரிய அன்பிற்கும் வாழ்த்திற்கும் வருகைக்கும் பணிவான நன்றிகளும் பாராட்டுகளும் ..... உங்களின் மாலதி

vimalanperali said...

பிரதிபலனற்ற பாசவலை என்றும் நம் நேசத்திற்க்குரியதுவே/

ராஜி said...

நீயும் எழுதியாச்சா?! இன்னும் முதல் வார்த்தை சிக்காமல் தேடுறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

VOICE OF INDIAN said...

வாழ்க்கை என்பது கழற்றிப் போட்ட சட்டையில்ல
என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி சாதனைகள் பல புரிந்து அனைவரும் போற்றும்படியான வாழ்க்கை உமக்கு அமைய வாழ்த்துக்கள்

சும்மா எதுவும் கிடைக்காது ஒன்றைக் கொடுத்தே இன்னொன்றைப் பெறவேண்டும் என்பது நியதி அல்லவோ இதுவும் கடந்துபோகும் கடவுள உன்னிடம் இருந்து வேறு எதோ ஒன்றை எதிர்பார்க்கின்றார் அதை என் மூலம் உனக்கு தெரியப்படுத்துகின்றார் தேடு தேடிக்கொண்டே இரு விடை கிடைக்கும் வரை தேடு மனதை ஒருநிலைப் படுத்தித் தேடு அமைதியாக தேடு நீ உயிர் பெற்றதன் அர்த்தமும் பூமியில் உன் வாழ்க்கையின் தேவையும் புரியும் உனக்காக உன் சாதனைக்காக இங்கே தேசமே உலகமே காத்திருக்க நீ மனம் ஓடிவதேன்

வாழ்க வையகம் உள்ளவரை வாழ்க

Athisaya said...

வணக்கம் சொந்தமே!அனுபவங்கள் பதிவாகும்போது அத்தனை இயல்பாயிருக்கும் என்பதற்குசிறப்பான சான்று!வாழ்க்கையிலும்போட்டியிலும் வெற்றி
பெற வாழ்த்துக்கள்.

சதீஷ் செல்லதுரை said...

ஆரம்ப வரிகளில் அசத்தல்...அதனை தொடர்ந்து உண்மையான. உணர்ச்சிகள் ...வாழ்த்துக்கள் .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கடிதம் நன்று. தன பக்கம் இருக்கும் தவறு இருக்கும் என்று ஒப்புக் கொண்டு வருந்துவதுதான் உண்மையான காதல். அதை கடித்ததில் அழகாக சொலி விட்டீர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அசத்தலா எழுதியிருக்கீங்க...
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி திருமதி மாலதி அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (14.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 14ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/14.html