இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது
Showing posts with label அன்பனே ... விரைந்து மங்கள நாண் கொண்டுவா .. Show all posts
Showing posts with label அன்பனே ... விரைந்து மங்கள நாண் கொண்டுவா .. Show all posts

Tuesday, 6 November 2012

அன்பனே ... விரைந்து மங்கள நாண் கொண்டுவா .

என் உள்ளத்திலுள்ள
வேட்கைபோலவே
உன்வரவின்
நாள் நெருங்குவதாய்
ஏதோ  உள்ளுணர்வு
சொல்லுகிறது .

உன் எக்குருதியான
தோள்களைத்
தழுவிட
உடல்  ஏங்குகிறது .

காவியங்களை
மிஞ்சும் காதல்
மொழிகளை
பேசிட  உதடுகள்
துடிக்கிறது .

ஆசைதீர
உன்  எழிலை
பருகிட  கண்கள்
ஆவல் கொள்ளுகிறது

உன் ...
நெருக்கத்தை
சுவைத்திட
என்மேனி
பசலை  பூக்கிறது.

இருப்பினும்
பண்பாடு என்னைத்
தடுக்கிறது .

அன்பனே ...
விரைந்து
மங்கள  நாண்
கொண்டுவா .