இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 6 November 2012

அன்பனே ... விரைந்து மங்கள நாண் கொண்டுவா .

என் உள்ளத்திலுள்ள
வேட்கைபோலவே
உன்வரவின்
நாள் நெருங்குவதாய்
ஏதோ  உள்ளுணர்வு
சொல்லுகிறது .

உன் எக்குருதியான
தோள்களைத்
தழுவிட
உடல்  ஏங்குகிறது .

காவியங்களை
மிஞ்சும் காதல்
மொழிகளை
பேசிட  உதடுகள்
துடிக்கிறது .

ஆசைதீர
உன்  எழிலை
பருகிட  கண்கள்
ஆவல் கொள்ளுகிறது

உன் ...
நெருக்கத்தை
சுவைத்திட
என்மேனி
பசலை  பூக்கிறது.

இருப்பினும்
பண்பாடு என்னைத்
தடுக்கிறது .

அன்பனே ...
விரைந்து
மங்கள  நாண்
கொண்டுவா .

17 comments:

Seeni said...

arumai!


arumai...

முத்தரசு said...

நல்லா இருக்கு

//பண்பாடு என்னைத்
தடுக்கிறது//

அருமையிலும் அருமை

மதுமதி said...

அன்பரே விரைந்து வாருங்கள்..

T.N.MURALIDHARAN said...

சங்கப் பாடலை புதுக் கவிதையில் படித்தது போல் நல்ல நயத்துடன் கவிதை ஜொலிக்கிறது.

s suresh said...

நல்லதொரு ஏக்க கவிதை! சிறப்பு!

Ramani said...

காதலனுக்காக ஏங்கி காத்திருத்தல் குறித்த
போலி ஒப்பனையற்ற அருமையான கவிதை
மனம் தொட்ட பதிவு
வாழ்த்துக்கள்

மாற்றுப்பார்வை said...

அருமை

esther sabi said...

ம்ம்ம் அருமை அக்கா ஒரு சில வேளைகளில் உங்கள் கவதை எனக்கு சாதகமாய் அமைந்து விடுகிறது.........

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சீக்கிரம் வாங்கப்பா...

விமலன் said...

அன்பன் சீக்கிரம் வரட்டும் மங்கள நானோடு.வாழ்த்துக்கள்.நன்றாகயிருக்கிறது.

kovaikkavi said...

மங்களம் பொங்கட்டும்!
வரவு நன்மையாக முடியட்டும்.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

உஷா அன்பரசு said...

காத்திருப்பதும் இனிமையோ!

ரெவெரி said...

இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

ஜோதிஜி திருப்பூர் said...

வலைச்சரத்தில் அறிமுகம் பார்த்தேன். நன்றி. எழுத்துப்பிழைகள் அதிகமாக உள்ளது. சற்று கவனம் செலுத்துங்க.

நன்றி.

2008rupan said...

வணக்கம்
மாலதி

மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கவிதை நல்ல கற்பனை வளம் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இரவின் புன்னகை said...

விரைவில் அந்த நல்ல நாள் பூக்கும்...

சுபம்...

வேல்முருகன் said...

Nice