இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது
Showing posts with label விதை தூவு .... விருட்சமாக தொற்றங் கொள் .. Show all posts
Showing posts with label விதை தூவு .... விருட்சமாக தொற்றங் கொள் .. Show all posts

Saturday, 1 December 2012

விதை தூவு .... விருட்சமாக தொற்றங் கொள் .

 கல் நெஞ்சக்காரனே ...
அத்தனை  இரும்பு
இதயமா உனக்கு?

எத்தனை  தடவை
கேட்டேன்...
இதயம் திறந்து
காட்டினேன்
புரியவில்லையா ?
நடிக்கிறாயா?

என்
கனவுக் கோட்டைகளை
சிதைக்க  முயலுகிறாய்.

பெண்மையின்

மென்மையையும்
அதன் மௌனத்தின்
வலியையும்
புரிந்து கொள்ளாதவன்  நீ.

வலிய வந்து
கேட்டதால்
வலிமையற்றவள்  அல்ல
நான் .

உன் ....
கோட்டைக்குள்
குடிபுக  தகுதியற்றவளும்
அல்ல நான் .

விழிமூடி
மௌவுனிப்பதை
உடைத்தெறி ....
கண்  திறந்து
பார் ....
உனக்கான
வசந்த
வாசல் திறந்து
காத்திருக்கிறது .

விதை  தூவு ....
விருட்சமாக
தொற்றங் கொள் .

அன்புடன் ....
உன் மாலதி