இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 1 December 2012

விதை தூவு .... விருட்சமாக தொற்றங் கொள் .

 கல் நெஞ்சக்காரனே ...
அத்தனை  இரும்பு
இதயமா உனக்கு?

எத்தனை  தடவை
கேட்டேன்...
இதயம் திறந்து
காட்டினேன்
புரியவில்லையா ?
நடிக்கிறாயா?

என்
கனவுக் கோட்டைகளை
சிதைக்க  முயலுகிறாய்.

பெண்மையின்

மென்மையையும்
அதன் மௌனத்தின்
வலியையும்
புரிந்து கொள்ளாதவன்  நீ.

வலிய வந்து
கேட்டதால்
வலிமையற்றவள்  அல்ல
நான் .

உன் ....
கோட்டைக்குள்
குடிபுக  தகுதியற்றவளும்
அல்ல நான் .

விழிமூடி
மௌவுனிப்பதை
உடைத்தெறி ....
கண்  திறந்து
பார் ....
உனக்கான
வசந்த
வாசல் திறந்து
காத்திருக்கிறது .

விதை  தூவு ....
விருட்சமாக
தொற்றங் கொள் .

அன்புடன் ....
உன் மாலதி

8 comments:

Anonymous said...

விதை தூவு.
விருட்நமாய் தோற்றம் கொள் .
இது நல்ல வரி மாலதி.
பதிவிற்கு இனிய நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சசிகலா said...

மிகவும் அழுந்த மனதில் பதியுமாறு உரைத்தீர்கள் சகோ.

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான சாட்டையடி வரிகள்...

உஷா அன்பரசு said...

மாலதி நீங்க எழுதற ஒவ்வொரு கவிதையும் எனக்கு பிடிச்சிருக்கு! உங்க கவிதை நடை நல்லாருக்கு!

ஹேமா said...

திட்டுறீங்களா செல்லம் கொஞ்சுறீங்களா மாலதி.இதுதான் காதலின் அழகு !

Unknown said...

சகோதரிக்காக...
http://easampath.blogspot.in/2012/12/blog-post.html

மனோ சாமிநாதன் said...

கவிதை அருமை!

vimalanperali said...

தூவுகிற விதைகள் நல்லதாகவே/