இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 13 August 2011

நீ......... உளியாகும் போதெல்லாம் நான் சிலையாகிறேன் .

 நீ ...
தொட்டுக்காட்டும்
போதெல்லாம்
நான்  கற்றுக்கொள்ளுகிறேன் .


 நீ ..........
கற்றுக்கொடுக்கும்
 போதெல்லாம்
 நான்
செழுமையடைகிறேன் .

 நீ.........
வழிகாட்டும்
போதெல்லாம்
 நான்
தெளிவடைகிறேன் .

நீ.........
உளியாகும்
 போதெல்லாம்
 நான் சிலையாகிறேன் .

 நீ........
மௌனம் ஆகும்
 போதெல்லாம்
நான் தவமேற்கிறேன்.












Saturday, 6 August 2011

இன்றைய உலகம்?

தேவைக்கும்
 இருப்பிற்குமான
இடைவெளி  நெடியது _இது
முதலாளித்துவ
சுரண்டல்  தத்துவத்தின்
தனிச்  சிறப்பு .

கொள்ளையும்
கொள்ளை இலாபமும்
அதன்நேரிய குறிக்கோள் .

ஏழ்மையிலும்
அறியாமையிலும் மக்களை
வைத்திருந்தால்தான்
கொள்ளை இலாபம்
அடிப்பவர்கள் கோலேச்சமுடியும்என்பது
அதன்கமுக்கமான  உண்மை .

ஆள்வோருக்கும்  ஆட்டிப்படைப்போருக்கும்
மறைமுக  பிணைப்பு
தொடர்ந்தே  இருக்கும்.

ஆளும் வகுப்பு
என்றும் கடவுள்களை
தோற்றுவித்துக்  கொண்டேஇருப்பார் _ அவர்கள்
கொள்ளையடித்துக்  கொண்டேஇருக்க.

புதியவடிவில் மூடத்தனங்கள்
காட்டுத்தீயாக  பரவும்.
பட்டுப்  பீதாம்பரங்களுடன்.

உண்மை
நூலாம் படையோடு
சுருண்டுவீழ்ந்து கிடக்கும்.

தலைவிதியை  எண்ணி
அறியாமை மக்கள்
கடவுள்களை நோக்கிப்
படைஎடுப்பர்கள் .தங்கள்
பாமரத்தனத்தை  அறியாமல்.

மக்களின்உழைப்புச்
சுரண்டலில்  தேர்ந்தவர்கள்
கோவில்களில்
தொன்னையில்  வைத்துச்
சோறு படைப்பர்.

கடவுளரைக்  காணுவதில்மட்டும்
பாமரர்கள்  ஒன்றுபடுவர்.
அப்போதும்  கொள்ளைக்காரர்களுக்கு
தனிவழி.

மனிதன்  கண்டெடுத்த
கண்டு பிடிப்புகளில்
கடவுள் கண்டுபிடிப்பே
உயர்ந்தது  _இது அறிவர் .

இதன் தாக்கத்தை
பாமரர்கள்  உணராதபடி
முட்டாள்(தொலைக்காட்சி )  பெட்டிகள்
முணகிக்கொண்டே  இருக்கும் .

இதனூடே ....
முதலாளித்துவம்
கொள்ளையடித்துக்  கொண்டே
கோலேய்ச்சும் மாற்றம்
வந்துவிடாதபடி .

ஏதிலிகள்  வயிற்றுப்
பட்டினியுடன் தலைவிதியை
நொந்து  கொண்டே
போராடுவார்கள்  வயிற்றுப்பசியுடன்.

மாற்றம்  வேண்டிய
அறிவர்கள்  பாமரனின்
கண்களில் பித்தர்களாக (பிழைக்கத்  தெரியாதவர்களாக )
தோற்றமளிப்பார்கள்
தீவிரவாதிகள்  என்ற  பட்டந்தாங்கி.

ஒரு
கூட்டம்  திரைப்பட
புல்தடுக்கிப்  பயில்வான்களுக்கு
வெண் சாமரம்வீசிக்கொண்டிருக்கும்
அவனின் எச்சில்களையும்
கழிவுகளையும்  நக்கிக்கொண்டே.



உன்களின் கண்டன கனிகளை  எதிர் நோக்கி

                              மாறாத தமிழன்புடன்
                                        மாலதி .

 .  

Saturday, 30 July 2011

நல்லன எல்லாம் -நீ நீ நீயே .........

தொட்டுக்காட்டமல்
வளர்ந்தவன் -நீ

இந்த ........
சமூகம்
கற்றுக்கொடுக்காமல்
தேர்ந்தவன் -நீ

நாளும் பட்டுத்தேரியவன்
நீ

உள்ளத்தில்
பட்டதைச்  சொல்பவன் -நீ

நல்லன
மட்டுமே கற்றவன் -நீ

இந்நாடே
போற்றவேண்டியவன் -நீ

புதிய
பாதையை
சமைத்தவன் -நீ

பெண்மையை
மதிப்பவன் -நீ

நல்லன
எல்லாம் -நீ  நீ  நீயே .........


Saturday, 23 July 2011

அன்பே நம்வளமான வாழ்வைமட்டுமே சிந்திப்பாயா?

 நம்
பண்பாட்டைப்
பேணுவதில்
உன் சர்வாதிகாரத்தை
வெளிப்படையாய்
அறிவித்தாய் .

கல்லூரிப் பெண்கள்
 விட்டில் பூச்சிகளாக
மடிவதாய்
வருத்தபட்டாய்.

முதலாளித்துவ
இன்றைய
அரசுகள்
குடும்ப உறவுகளை
நசுக்குவதாய்
சினம்  கொண்டாய் .

ஊடகங்களும்
திரைப்படங்களும்
சீரழிவின்
கொம்புகளை கூர்
சீவிவிடுவதாய் 
குற்றம்  சாட்டினாய்.

நம் மொழி
அழியுமுன்னம்
இனமழியும்
என்றாய் .

நம் கலைகள்
காப்பது மட்டுமே
இப்போதைய
தேவை  என்றாய் .

அன்பனே
இதையெல்லாம்
பேசி வறுமையோடு
வாடியவர்களின்
பட்டியலில்
சேரப் போகிறாய் .

கொள்கைக்காக
மரித்துபோவதையும்
மறந்துபோகும்
சீக்காளி சமூகமிது
அன்பே
நம்வளமான
வாழ்வைமட்டுமே

சிந்திப்பாயா?


Saturday, 16 July 2011

இதுதான் அரசுகளின் அறமா?


ஒரு
இனத்தின்
விடுதலை வேட்கை
எங்கனம்
தீவிரவாதமாகும்?

என்
இனப்பெண்களின்
மார்பகம்
எங்கனம்
வெடிகுண்டாய்
மாறும்?

சிங்கள நாய்கள்
சோதித்து பார்த்ததாம் .

உலகத்தீரே
இதுதான் அறமோ?

மனித உரிமைகளை
வாய்கிழியப்  பேசும்
போலிக்கனவான்களே!

பச்சைக்குழந்தைகள்
பாசமிகு முதியோர்
சூலுற்ற  பெண்கள்
இருந்த இடங்களில்
பாஸ்பரஸ்
குண்டுமழை ...
பொழிந்து கொன்றது
எந்த நாட்டு
அரச நீதி ?

இவர்களை  கொல்ல
எவன்கொடுத்தான்
அதிகாரம் ?

சிங்கள
நாய்கள் எப்படி
என்னினத்தை
வேட்டையாடியது ?

உலக
தமிழ் அறிஞர்களே !
நீவீர்  ஏன்
இன்னும்
ஈழத்தமிழரை
அழித்தவர்களை 
அறம்பாடி அழிக்கவில்லை ?

அரிதாரம்
பூசாத என்
வார்த்தைகள்
உங்களை வசப்படுத்தாமல்
போகலாம்.

ஈழத்தில்
நடந்த போர்குற்றங்கள்
இந்த உலகின்
செவிட்டுக்காதுகளுக்கும்
குருட்டுக் கண்களுக்கும்
இன்னுமா புரியவில்லை ?

     இந்த வசனத்தின் காரணம்  ஐயா  வைகோ  அவர்கள்  கல்லுரி  வாசல்களில்  நின்று  வழங்கிய  குறுவட்டை பார்த்ததால்  எழுதப்பட்டதாகும் .

Saturday, 9 July 2011

கற்றுக்கொடுக்காதபோதும் ....

நானும்  சராசரி
பெண்தான் .

என்னுள்ளும்
ஆயிரமாயிர
போராட்டங்கள் .

பலமுனையிலிருந்தும்

நெருக்குதல்கள்.
தாக்கு பிடிக்கயியலா
எத்தனையோ
சுமைகள்
கொடுமைகள் .

வறுமையோடு
போராடுவது
தற்கொலைக்கு
ஒப்பானது .

வழ்கையினுடனான
எனது போராட்டத்தில்
நானே  தலைமை
தாங்குகிறேன் .

நானே வீரனுமாகிறேன் .

தோல்வி  காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால்  கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
 இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.

இந்த  சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .

Saturday, 2 July 2011

முலை திருகி எரிந்து கொன்றழிக்கவும் ...

போலித்தனமில்லா
உன்னுடனான
தொடர்புகளை
நான் நாளும்
உணர்வதால்
இந்த  குமுகம்
குற்றமுடையதுதான்
என்பதை
புரிந்து  கொள்ள
முடிகிறது  என்னவனே ...

பொய்யும்  வழுவும்
அரசபீடம்  ஏறுகிறது
என்பதும் ...

நேர்மையும்
 அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள்  ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...

அதற்காக நான்
பொதுநல 
வாதியாகிட
முடியாது .

நான் தன்னலம்
எண்ணம்  கொண்டவள் தான் .

நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .

அதையே ...
வேடிக்கை  பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று  அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது  ...

மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம்   வா .