உன் ...
நினைவுகள்
என்னைத்தாக்கும்
போதெல்லாம்
கோடைமழைஎன
கொட்டித்தீர்க்கிறது
கண்கள் .
ஆண்மை மீறாத ஆண்மை
அமைதி
வியக்கவைக்கும்
பொறுமை எதற்கும்
கலங்காத நெஞ்சம் .
இந்த ...
சமூகத்தைப்பற்றிய
சரியான புரிதல் .
வறுமை உன்னை
ஆட்டங்கான
வைக்க நேர்ந்தபோது
ஆண்மைதவறாமல்
காத்தமை .
உன் ...
இலையுதிர்காலத்து
நாட் குறிப்பேட்டை (டைரி )
காணநேர்ந்தபோது
வாய்விட்டே
கதறி அழுதே அல்லாவா
போனேன் .
எப்படி ...
எப்படி ....
உன்னிதயத்தை
இரும்பாக்கிக்கொண்டு
அத்தனையும்
பதிவு செய்தாய் .
இன்முகம்
காட்டி எப்படி
எல்லோரிடமும்
பேசுகிறாய் அன்பனே? இன்றைய சூழலில் காதல் வெறுமனே உடலை கண்டு காதல் என கற்பிதம் செய்துகொள்ளுகிறது. காதல் உடல் அல்ல உள்ளம் சார்ந்தது என்பதையும் காதல் பற்றிய முழுமையான புரிதலை உண்டக்கவுமே இந்த ஆக்கங்கள் எழுத்து பிழை இருப்பின் சுட்டிகாட்டும் அன்பர்களுக்கு எமது உளம் கனிந்த பாராட்டுகள் சொற்பிழை இருப்பின் சுட்டிகாட்டுக என்றும் நன்றியுடன் மாலதி .
28 comments:
மிக மிக அருமை
படைப்பாளி எந்த உணர்வில் ஒரு கவிதையை
படைக்கிறாரோ அதே உணர்வை
படிப்பவரும் (அறிய அல்ல)உணரச் செய்யுமாயின்
அதுதான் சிறந்த படைப்பு
இந்த கவிதையில் நான் உணர்ந்தேன்
தரமான படைப்பு
( அல்லவா மட்டும்)தொடர வாழ்த்துக்கள்
படித்தேன் ரசித்தேன்
என்மனதை பாதித்தது
அடடடா நெஞ்சை பிசையுதே'ப்பா....!!!
நல்ல கவிதை.
மேன்மையான குணத்தை கொண்ட ஒருவரை
அழகான நடையிலும், எழுத்திலும் எழுதியிருக்கிறீங்க..சூப்பர்..
உயர்ந்த கருத்து மேன்மையான நடை
இது பின்னூட்டம் அல்ல,
காணநேர்ந்தபோது
வாய்விட்டே
கதறி அழுதே அல்லாவா
போனேன் .//
கதறி அழுதல்லவா....
என்று வந்தால் அழகாக இருக்கும்,
வறுமை உன்னை
ஆட்டங்கான
வைக்க நேர்ந்தபோது
ஆண்மைதவறாமல்
காத்தமை //
இங்கே கவிதை உதைக்கிறது சகோ,
வறுமையின் காரணமாக பெண்கள் பெண்மையினை விற்பதை அறிந்திருக்கிறேன், ஆனால் ஆணகள் அப்படி எமது தமிழ்ச் சமூகத்தில் இல்லை என நினைக்கிறேன்.
வறுமை உன்னை
ஆட்டங்கான
வைக்க நேர்ந்தபோது
ஆண்மைதவறாமல்
காத்தமை //
இங்கே கவிதை உதைக்கிறது சகோ,
வறுமையின் காரணமாக பெண்கள் பெண்மையினை விற்பதை அறிந்திருக்கிறேன், ஆனால் ஆணகள் அப்படி எமது தமிழ்ச் சமூகத்தில் இல்லை என நினைக்கிறேன்.
வறுமையினை மறைத்து, உள்ளத்தில் கபடமின்றிப் பழகிய ஒரு அன்பனின் நாட் குறிப்பினைப் படித்து,
அவன் பின்னணியினை அறிந்து கொண்ட பாதிப்பினைக் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.
உன் ...
நினைவுகள்
என்னைத்தாக்கும்
போதெல்லாம்
கோடைமழைஎன
கொட்டித்தீர்க்கிறது
கண்கள் //
அருமையான வர்ணனை, இங்கே வெளிப்பட்டு நிற்கிறது.
அழகிய கவி வரிகள்
நன்றி வரவேற்கப்படுகிறது.
பட்டியலின் தொடர்ச்சி :
1) எழுத்துப் பிழை என்பதும் சொற் பிழை என்பதும் சற்றேறக் குறைய ஒன்றுதான். நீங்கள் சுட்டிக் காட்டச் சொல்லியிருப்பது கருத்துப் பிழை என நினைக்கிறேன்.
2) வழக்கம் போலவே இந்தச் சிறு ஆக்கத்திலும் ’ஆட்டங் கான’ ‘அல்லாவா’ போன்ற பல பிழைகள் மலிந்து கிடக்கின்றன. சொற்களுக் கிடையில் இடைவெளி யின்றிப் பல இடங்களில் தென்படுகிறது.
3) நாட்குறிப்பை அவரறியாமல் படித்தீர்களா? அல்லது அவரே கொடுத்துப் படிக்கச் சொன்னாரா?
அவரறியாமல் படித்திருந்தால் அது நீங்கள் செய்த தவறு. அவரே கொடுத்துப் படிக்கச் சொல்லியிருந்தால் அதன் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகிறது. ஒருவரின் நாட்குறிப்பை வைத்து உருகுவதை விட அவரது நடத்தை குறித்து அறிந்த பின் முடிவுக்கு வருவதே சரி. நாட்குறிப்பு எழுதாத - அல்லது எழுதி, அதைப் படிக்கத் தராத - எத்தனையோ சிறந்தவர்கள் இருக்கிறார்கள்.
4) கருத்துப் பிழைகள் என்று பார்த்தாலும் பஞ்சமே யில்லை.
i) ஆண்மை தவறாமல் காத்தமை (வேண்டாம் விடுங்கள்)
ii) வியக்க வைக்கும் பொறுமை (அப்படி இருந்ததால்தான் துன்பங்கள் தொடர்ந் திருக்கின்றன)
iii) உங்கள் தன்னிலை விளக்கத்தில்
’காதல் வெறுமனே உடலை கண்டு காதல் என்று கற்பிதம் செய்து கொள்ளுகிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள். சரிதானா?
ஓர் எளிய ஆலோசனை: கனிவு கூர்ந்து தமிழை ஓரளவு பயின்ற பிறகு கவிதை (போன்ற ஒன்றை) எழுத முயலுங்கள்.
@லதானந்த்வணக்கம் உங்களின் கருத்துகளுக்கும் முறையான விமர்சனங்களுக்கும் உளம் கனிந்த பாராட்டுகள் . ஒன்று எனக்கு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்கள் இந்த நேரத்தில் பதிவு எழுதி மற்றவர்களின் இடுகைகளுக்கு சென்று கருத்துகளை சொல்லி வருவது என்பது எனக்கு நேரம் போதவில்லை . வேண்டும் என்றே என் மொழியை பிழை பட கூற எனக்கு வராது காரணம் நேரம் இன்மை . இருக்கிற தமிழில் இந்த குமுகத்திற்கு எதாகிலும் செய்ய எண்ணுகிறேன் . வரட்டுத்தனமாக அக நிலையாகி என்னை என்னுடைய சொந்த கதை களை கூறி கொண்டிருக்கவில்லை பிழைகளை திருத்தி கொள்ளுகிறேன் நன்றி .
சிறந்த முயற்சி. தொடருங்கள் வாழ்த்துகள்
iam not able to find any correction..nice post...continue.
//இன்முகம்
காட்டி எப்படி
எல்லோரிடமும் பேசுகிறாய் அன்பனே?
//
எதையோ காரணம் காட்டி யாருக்காகவோ வாழ வேண்டிய கட்டாயம்.. நிறைய காதலர்கள் இப்படி தான் போலும் மாலதி...
very very supper..
congratulation
very very supper..
congratulation
"காதலில் தோல்வி" என்பது உண்மை இல்லை! உண்மை காதல் ஒரு போதும் மங்காது.
தங்கள் கவிதையில் எக்குற்றமும் இல்லை.
>>ஆண்மை மீறாத ஆண்மை
அமைதி
ஆஹா அழகு
கவிதைக்காக நீங்க யோசிச்சதை விட பின்னூட்டத்துக்கு பதில் தர நல்லா யோசிச்சீங்க போல ஹய்யோ ஹய்யோ .. செம பதில்
அருமையான கவிதை
என்னைத்தாக்கும்
போதெல்லாம்
கோடைமழைஎன
கொட்டித்தீர்க்கிறது
கண்கள் //
நெஞ்சைத்தொட்டன
இந்தவரிகள் வாழ்த்துக்கள்
சகோதரி.மென்மேலும்
வளம்பெற......
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
உங்கள் வருகைக்கும் உளப்பூர்வமான கருத்துகளிற்கும் பாராட்டுகள் எனக்கு உண்மையில் உங்கள் எல்லோரின் முறையான விமர்சனம் வியக்கவைக்கிறது .குறிப்பாக சதானந் என்ற பெயரில் வந்துள்ள விமர்சனம் உண்மையில் பாராட்டுகளுக்குரியது. நிரூபன் தமிழ் பண்பாட்டில் ஆண்கள் விபச்சாரம் செய்வதில்லை முரண்பாடாக உள்ளதே என பதிவு செய்திருந்தார் . உண்மை இருந்தாலும் . கோவையில் தமிழகத்தில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தது அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கும் கற்பு தேவை என்பதை உணர்த்தவே இந்த இடுகையின் உண்மையான நோக்கம் உளம்கனிந்த பாராட்டுகள் சதானந் உங்கள் ஆய்வு கட்டுரை வாசித்தேன் கருத்து கூற நேரமில்லை படித்து கருத்து போடுகிறேன் மனற்கேனியில்
எப்படி ....
உன்னிதயத்தை
இரும்பாக்கிக்கொண்டு
அத்தனையும்
பதிவு செய்தாய்
எனக்குள்ளும் சோகம் நெஞ்சோடு இருக்கும்..சிரிக்காத நாளில்லையே....
rajeshnedveera
எழுத எழுதத்தான் மொழி பழகும்..
தயக்கம் உதறி எழுதுங்கள்..
Post a Comment