உண்மை எப்போதுமே எளிமையானது கவர்ச்சி இல்லாததது அதனால்தான் அதை நாம் பின்பற்றுவதும் நம்புவதும் சிரமமாக இருக்கிறது.
இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது
Saturday, 16 July 2011
இதுதான் அரசுகளின் அறமா?
ஒரு
இனத்தின்
விடுதலை வேட்கை
எங்கனம்
தீவிரவாதமாகும்?
என்
இனப்பெண்களின்
மார்பகம்
எங்கனம்
வெடிகுண்டாய்
மாறும்?
சிங்கள நாய்கள்
சோதித்து பார்த்ததாம் .
உலகத்தீரே
இதுதான் அறமோ?
மனித உரிமைகளை
வாய்கிழியப் பேசும்
போலிக்கனவான்களே!
பச்சைக்குழந்தைகள்
பாசமிகு முதியோர்
சூலுற்ற பெண்கள்
இருந்த இடங்களில்
பாஸ்பரஸ்
குண்டுமழை ...
பொழிந்து கொன்றது
எந்த நாட்டு
அரச நீதி ?
இவர்களை கொல்ல
எவன்கொடுத்தான்
அதிகாரம் ?
சிங்கள
நாய்கள் எப்படி
என்னினத்தை
வேட்டையாடியது ?
உலக
தமிழ் அறிஞர்களே !
நீவீர் ஏன்
இன்னும்
ஈழத்தமிழரை
அழித்தவர்களை
அறம்பாடி அழிக்கவில்லை ?
அரிதாரம்
பூசாத என்
வார்த்தைகள்
உங்களை வசப்படுத்தாமல்
போகலாம்.
ஈழத்தில்
நடந்த போர்குற்றங்கள்
இந்த உலகின்
செவிட்டுக்காதுகளுக்கும்
குருட்டுக் கண்களுக்கும்
இன்னுமா புரியவில்லை ?
இந்த வசனத்தின் காரணம் ஐயா வைகோ அவர்கள் கல்லுரி வாசல்களில் நின்று வழங்கிய குறுவட்டை பார்த்ததால் எழுதப்பட்டதாகும் .
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
ஒரு சம்பவத்தின் பாதிப்பில் உடனடியாக எழுதப்படும் கவிதைக்கு வீச்சு அதிகம்...அது தெரிகிறது!
அதற்கான பதில்தான் யாரிடமும் இல்லை!
ஈழத்தில்
நடந்த போர்குற்றங்கள்
இந்த உலகின்
செவிட்டுக்காதுகளுக்கும்
குருட்டுக் கண்களுக்கும்
இன்னுமா புரியவில்லை ?
புரிந்துதான் இருக்கிறது.. செய்வது அறியாமல்.
ரத்தம் கொதிக்கும் இந்த கவிதையால் கண்ணில் கண்ணீர் ஆறாக கொட்டுகிறது....ஏய் நாசமா போன உலகமே உன் கண்ணை திற....
உணர்ச்சிபூர்வமான உண்மையான கொந்தளிப்பு புரிகிறது. என்ன செய்வது எப்படிச்செய்வது என்று தெரியாமல் உள்ளது உலகம். விரைவில் நல்ல தீர்வு, எந்த வழியிலேனும் ஏற்படட்டும்.
வரிகளில் உக்கிரம் தெரிகிறது சகோதரி...
உலகிற்கு ஒரு அறைகூவல் உரிமையிழந்த இனத்தில் இருந்து
அரிதாரம்
பூசாத என்
வார்த்தைகள்
உங்களை வசப்படுத்தாமல்
போகலாம்.....
செவிட்டுக்காதுகளுக்கும்
குருட்டுக் கண்களுக்கும்
செவிடுமல்ல குருடுமல்ல.. கண்ணைக்கட்டிக்கொண்டும், காதில் பஞ்ஞை வைத்துக்கொண்டும்....வேடிக்கை பார்க்கும் உலகமல்லவா....
வித்திட்டவர்கள் பூவாய் உதிர்ந்தாலும்.. வித்துக்கள் பூகம்பமாய் அதிர்வார்கள்...
///அரிதாரம்
பூசாத என்
வார்த்தைகள்
உங்களை வசப்படுத்தாமல்
போகலாம்.////
வார்த்தை கள் கூட இல்லை என்னிடம்
இதயம் மரத்து போகிறது
இயலாமையின் விளிம்பில்
வெறுப்பின் உச்சத்தில்
சராசரி இந்தியா தமிழனாய்
எதையும் சகித்து ...............
என்ன கூவியும் எந்தப் பலனும் விளையப்போவதில்லை... நமக்கான ஆறுதலுக்காக வேண்டுமானால் எழுதியும், பேசியும், பகிர்ந்தும் மனதைத்தேற்றிக்கொள்ளலாமே தவிர... தன் வாழ்க்கை, சினிமா, கிரிக்கெட், மதுபானம், இரவு நடனம், பீஸா கார்னர், பெப்சி கோக் என்று உணர்ச்சியற்றுப்போன கூட்டங்களுக்கு நடுவில் மந்தையின் நடுவில் ஒரு ஆடாய் நாமும் திரிவதைத்தவிர தமிழ்நாட்டில், இந்தியாவில் ஈழத்தமிழர்களுக்காக எதுவும் நடக்கப்போவதில்லை... அதிசயமாய் பிரபாகரன் மீண்டு வந்தாரானால் அவர்களின் வாழ்விலும் பல அதிசயங்கள் நிகழலாம்... இல்லையென்றால் ஜனநாயகம் மற்றும் கம்யூனிச முகமூடியில் மன்னராட்சி நடக்கும் தேசங்கள் ஈழத்தமிழர்களுக்காக எப்போதும் எதையும் செய்யப்போவதுமில்லை... யாரையும் எதையும் செய்யவிடப்போவதுமில்லை!
அரிதாரம்
பூசாத என்
வார்த்தைகள்
உங்களை வசப்படுத்தாமல்
போகலாம்.
வலிமிகுந்த வரிகள்.
கொடூரமான காட்சி. அதன் தாக்கம் மிகுந்த இதயத்தின் வலி வார்த்தைகளாக வெடித்திருக்கிறது.
இங்கே யாருக்கும் வெட்கமில்லை என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.
விரைவில் ஒரு விடிவு வரும் சகோ.
ஆட்டுவிப்பவர்கள் அடங்குவார்கள் ,
வலி
:(
மனதில் நிலவும் வேதனை எழுத்துக்களில்
வலிகள் நிறைந்த இந்த உணர்வுதான் எம் வறண்டுபோன
கண்ணீருக்குப் பதிலாக இறுதியாக இருந்த இரத்தத் துளிகள்கொண்டு
நாம் எழுதும் உண்மையான கலப்படம் அற்ற கவிதை வரிகள்.எம்
வாழ்வோடு பின்னிப் பிணைத்து நிற்கும் பொல்லாத துயரின்
பொட்டலங்கள் இவை .இவைகளைக் கண்டு நான் இரசிக்கவில்லை
துடிக்கின்றேன் தோழி.தொடருங்கள் மழைபோல இந்தக்
கவிதை வரிகளாவது சில மரத்துப்போன நெஞ்சங்க்கைத் தழைக்க
வைக்கட்டும்.(என் தாய்த்திரு நாட்டுக்கு சமர்ப்பணம் என்ற தலைப்பில் உள்ள எனது
பாடலையும் முடிந்தால் உங்கள் உணர்வுகளோடு கலந்துவிடுங்கள் உறவுகளே)
மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு.............
அரிதாரம் பூசிய வார்த்தகளை விட
அடிவயிற்று வேதனையுடன் வரும்
சொற்களுக்கு வலு அதிகம்
தங்கள் கவிதையை போலவே
கரு மனம் நோகச் செய்வதாயினும்
படைப்பு மனம் கவர்ந்து போகிறது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வலிகளை உணர்ந்து எங்களோடு கை கோர்த்திருக்கிறீர்கள் மாலதி.
தட்டிக்கொண்டே இருக்கிறோம்.
காலதாமதம் ஆனாலும் திறக்கப்படும் ஒருநாள் !
பாரதியின் புதுமைப் பெண்ணை காண்கிறேன் தங்கள் கவிதைகளில் .
avarkalukku puriyavea maadduthu sako...
valikkuthu,,
Post a Comment