இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 23 July 2011

அன்பே நம்வளமான வாழ்வைமட்டுமே சிந்திப்பாயா?

 நம்
பண்பாட்டைப்
பேணுவதில்
உன் சர்வாதிகாரத்தை
வெளிப்படையாய்
அறிவித்தாய் .

கல்லூரிப் பெண்கள்
 விட்டில் பூச்சிகளாக
மடிவதாய்
வருத்தபட்டாய்.

முதலாளித்துவ
இன்றைய
அரசுகள்
குடும்ப உறவுகளை
நசுக்குவதாய்
சினம்  கொண்டாய் .

ஊடகங்களும்
திரைப்படங்களும்
சீரழிவின்
கொம்புகளை கூர்
சீவிவிடுவதாய் 
குற்றம்  சாட்டினாய்.

நம் மொழி
அழியுமுன்னம்
இனமழியும்
என்றாய் .

நம் கலைகள்
காப்பது மட்டுமே
இப்போதைய
தேவை  என்றாய் .

அன்பனே
இதையெல்லாம்
பேசி வறுமையோடு
வாடியவர்களின்
பட்டியலில்
சேரப் போகிறாய் .

கொள்கைக்காக
மரித்துபோவதையும்
மறந்துபோகும்
சீக்காளி சமூகமிது
அன்பே
நம்வளமான
வாழ்வைமட்டுமே

சிந்திப்பாயா?


29 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் சாட்டை.......

MANO நாஞ்சில் மனோ said...

குடும்ப உறவுகளை
நசுக்குவதாய்//

இடிக்குதே'ப்பா....??? மூனா கானா குடும்பம் நல்லாதானே இருக்கு ம்ஹும்....

MANO நாஞ்சில் மனோ said...

சரியான சாடல் நியாமான கோபம்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

இந்த காலத்தில் நல்லவன் வாழ முடியாது, மூனா கானா மாதிரியான ஆட்கள், காலையிலயே ஒரு சட்டி இட்லியை துன்னுட்டு ராஸ்கல் அரைநாள் உண்ணாவிரதம் இருந்து நாரடிச்ச மாதிரி நாறடிக்க தெரிஞ்சிருக்கொனும் தமிழனை கொய்யால....

MANO நாஞ்சில் மனோ said...

ஸாரி மாலதி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்....

மாலதி said...

@MANO நாஞ்சில் மனோஉங்கள் சினம் நியாயமான சினம் தானே என் உங்களையே பின்பற்ற வேடியுள்ளதே பாராட்டுகள் நன்றி

கிராமத்து காக்கை said...

ஊடகங்களும் திரைப்படங்களும் ஆடம்பரத்தை வளர்க்கும் போக்கை
செம்மையாக செய்கிறது ஒரு வேளை
உணவுக்கு அலையும் மனிதர்களை பற்றி சுவில் பேங்கில் கணக்கு வைத்திருக்கும் அரசியல்வாதிக்கு
என்ன கவலை

கவி அழகன் said...

அழகிய சமுக உணர்வூட்டமுள்ள கவி வரிகள்

தொடருங்கள்

குணசேகரன்... said...

பதிவு நல்லா இருக்கு.நைஸ்

வழ்வைமட்டுமே
சிந்திப்பாயா?//note the words

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அன்பே நம்வளமான வாழ்வை
மட்டுமே சிந்திப்பாயா?//

நல்லதொரு நியாயமான எதிர்பார்ப்பு தான்.

மீதியெல்லாம் வெட்டி வேலைகளே! என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

கூடல் பாலா said...

சமூக ஆர்வலர்களை நசுக்கும் நிகழ்வுகள்தான் தினமும் நடந்துகொண்டிருக்கிறது .......

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு

பிரணவன் said...

கொள்கைக்காக
மரித்துபோவதையும்
மறந்துபோகும்
சீக்காளி சமூகமிது
அன்பே
நம்வளமான
வழ்வைமட்டுமே
சிந்திப்பாயா?
அருமையான வரிகள். . .

இராஜராஜேஸ்வரி said...

அன்பே
நம்வளமான
வழ்வைமட்டுமே
சிந்திப்பாயா?//

சிந்திக்கதூண்டும் சிறப்பான வரிகள்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//கொள்கைக்காக
மரித்துபோவதையும்
மறந்துபோகும்
சீக்காளி சமூகமிது
அன்பே
நம்வளமான
வழ்வைமட்டுமே
சிந்திப்பாயா?//

அருமை.. வாழ்த்துக்கள்..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

மாய உலகம் said...

//ஊடகங்களும்
திரைப்படங்களும்
சீரழிவின்
கொம்புகளை கூர்
சீவிவிடுவதாய்
குற்றம் சாட்டினாய்.//
//கொள்கைக்காக
மரித்துபோவதையும்
மறந்துபோகும்
சீக்காளி சமூகமிது
அன்பே
நம்வளமான
வழ்வைமட்டுமே
சிந்திப்பாயா?//

அர்த்தமுள்ள கவிதை அருமை

M.R said...

நல்லதொரு சிந்தனை கவிதை .பகிர்வுக்கு நன்றி

சிவகுமாரன் said...

\\நம் மொழி
அழியுமுன்னம்
இனமழியும்
என்றாய்///
.
முகத்தில் அறையும் உண்மை .

\\நம்வளமான
வழ்வைமட்டுமே
சிந்திப்பாயா?///

வாழ்வை என்று மாற்றுங்கள்.

மாலதி said...

Blogger சிவகுமாரன் said...

\\நம் மொழி
அழியுமுன்னம்
இனமழியும்
என்றாய்///
.
முகத்தில் அறையும் உண்மை .

\\நம்வளமான
வழ்வைமட்டுமே
சிந்திப்பாயா?///

வாழ்வை என்று மாற்றுங்கள்.திருத்தம் செய்தமைக்கு உளம் கனிந்த நன்றி பாராட்டுகள் . வளமான வழ்வு என்பதை வளமான வாழ்வு என திருத்தம் செய்யப்பட்டது .

சென்னை பித்தன் said...

//நம்வளமான
வாழ்வைமட்டுமே

சிந்திப்பாயா?//
அது இல்லையென்றால் வேறு எதுவுமே இல்லையே!அருமை மாலதி!

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
ஆயினும் தாங்கள் சொல்லிப்போகிற அழிவுகளை
தடுக்கும் பொறுப்பும் நமக்கிருக்கிறது அல்லவா
இல்லையெனில் அதன் அசுர ஆட்டத்தில்
நாமும்தானே சேர்ந்து அழியப்போகிறோம்
அதற்காக தியாகம் என்கிற பெயரில் நாம்
ஏமாளி ஆகவும் வேண்டாம் ஆகையால்
இறுதி வரிகள் " நமது வளமான வாழ்வு
குறித்தும் கொஞ்சம் சிந்திப்போமா "
என இருக்கலாமோ என எனக்குத் தோன்றியது
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

தமிழ்மீது காதலொடு எழுதின பதிவு !

Anonymous said...

நம் மொழி
அழியுமுன்னம்
இனமழியும்
என்றாய் ....
தங்களின் தளம் இன்று தான் தரிசித்தேன். மிகவும் அழகு! கவிகள் அருமை!! வாழ்த்துக்கள் !!!

மகேந்திரன் said...

சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள்.
கவிதை நடை அருமை.
எத்தனையோ சமூக மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
ஒதுக்கப்பட்டே இருக்கின்றனர்.
தமிழ் என முழங்கி தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள்
ஏராளம்
தட்டி எழுப்புவோம் அவர்களின் கல்லறை நினைவுகளை.

நன்றி.
அன்பன்
மகேந்திரன்

சத்யா said...

உங்கள் கோபத்தின் வெளிப்பாடாய் கவிதையின் வரிகள்

Unknown said...

அன்பு மகளே!
ஆவேசக் கவிதையைக்
கண்டேன். பூங்காற்று புயலானது
போல, கன்னித் தமிழ் காட்டாற்று
வெள்ளமென வருதல் கண்டேன்
வளரட்டும் கவி வளமை,இங்கே
வடித்துள்ளகவி அருமை!
என், வலை நாடி வந்தாய்
நன் மொழி மகிழ,தந்தாய்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

M.R said...

கொள்கைக்காக
மரித்துபோவதையும்
மறந்துபோகும்
சீக்காளி சமூகமிது சாட்டை

கார்த்தி said...

இது சுயநல மக்களுக்கு விழுந்த பலத்த அடி!!