இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 22 October 2011

மண்ணில் வாழும் மனித நிலவே .....



எதையும் ....
கேட்கலாமா ....
கூடாதா ....
எனக் காலங்
கடத்துவதில்லை  நீ.

விரும்பியதைக்
கேட்டுப் பெறுகிறாய்.
தெரிந்ததை
சொல்லித்  தருகிறாய்.

தவறு நேரின்
பொறுப் பேர்க்கிறாய் ..
பொறுத்தருளவும் (மன்னிப்பு )
வேண்டுகிறாய்.

உள்ளத்தில்  ஒன்றும்
உதட்டில் ஒன்றும்
வேடங்களைச் 
சுமப்பதில்லை நீ.

கண்ணுள்ளபோதே
ஆதவ (சூரிய )
வணக்கத்தை
போதிக்கிறாய்.

இளமை உள்ளபோதே
வாழ்ந்து காட்ட
கட்டாயப்  படுத்துகிறாய்.

மண்ணில் வாழும்
மனித நிலவே
எனக்காகவும் _உன்
தண்ணொளி  வீசட்டுமே . 

         தீபாவளியாம் யாருக்கு  புரியவில்லை அசுரர்கள் சுரர்களை  அழித் தார்களாம் ( சுரர்கள் -குடிகாரர்கள் . அசுரர்கள் -  குடிக்காதவர்கள் . )குடித்துவிட்டு  வீணாக  சமர்புரிகிரவன்  எப்படி  நேர்மையனவானாக  இருக்கவியலும் ?  நரகாசுரன் யார்க்கு  என்ன கொடுத்தல்  செய்தார் ?
அருள் கூர்ந்து தெரிந்தவர்கள்  விளக்கின் தெளிவடைவேன் . நன்றி .

Saturday, 15 October 2011

சித்தன் போல் சிந்திக்கிறாய்

நுனிப்புல்  மேய்வதில்லை
நுணுகி நுணுகி ...
ஆய்கிறவன்  நீ.

கற்காமலே
கருத்துரைப்பதில்லை
ஆழ்ந்து  உள்வாங்கியே
கற்ப்பிக் கிறாய் ,

கண்ணீருக்கு
காரனமானவன்
அல்லன்  நீ
மாறாக  துடைத்தெரிய
களமாடுகிறாய்.

கனமானதை
உள்வாங்கிச்
செறித்துக்  கொள்கிறாய்
அதையே ...
எளிமையாக்கி  எமக்கு
பாடமாக்கு  கிறாய் .

உன் ...
பட்டறிவை எமக்கு
பயிற்று விக்கிறாய்
என் பாதையை
நேராக்குகிறாய்.

சித்தன் போல்
சிந்திக்கிறாய்
உலகின்  கண்களுக்கு
பித்தன் போல்
தோற்ற    மளிக்கிறாய்.

கண்ணுள்ள  குருடர்க்கு
வழி சமைக்கிறாய்
அனை   வருக்குமாய்
கலங்கரை  விளக்காக்கி
உயர்ந்து  நிற்கிறாய்.




  

Monday, 10 October 2011

அறிவுக் கோழைகள் .....



இவர்கள்  ...

கோழைகள் 
தமது ஆளுமையை 
நிலைநிறுத்த  இயலாத 
பேதைமை  உள்ளவர்கள் .

விளைந்தும் 
அறுவடைக்கு  
ஆயத்தமகாதவர்கள் ..
படித்தும்வாழ்க்கைப்   பயன்பாட்டுக்கு 
வராத  அல்ஜிபிரா 
கணக்குகள்.

நேர்மையிருந்தும் 
நேசிக்கத்  தெரியாதவர்கள்
விழி  இருந்தும் 
வழிகேட்டு  அலைபவர்கள் .

கைவிளக்கை  வைத்துக் 
கொண்டே  காரிருளைக் 
கண்டு  அச்சம்கொள்ளுபவர்கள் .

அறிவை  தன்னுள்ளே 
புதைத்துக்  கொண்டே 
முட்டாள்த்  தன
ஆளுமைக்கு அடங்கிப்
போகிறவர்கள் .

பேய்த்தனம்  நிறைந்த
பெண்மையை 
எதிர்க்கத்  தெரியாதவர்கள் .

சத்தமில்லாத ...
சமத்துவம் நிறைந்த _ வாழ்வை 
சமைக்கத்  தெரியாதவர்கள் .

 நாளும் ... 
இல்லறத்தை
அணு அணுவாய் 
சுவைக்கத்  தெரியாதவர்கள் .

பண்பட  தெரியாதவர்கள்.

பாராட்டத்  தெரியாதவர்கள் .

என் ...
விமர்சனம் 
கடினமாகத்  தோன்றினாலும் 
உண்மை  என்னவோ 
இதுதான். 

       கடந்த  எமது  இடுகைக்கு  வந்து  பெயரைக்  குறிப்பிடாமலே  பின்னுட்டம்  ஒன்றை  இட்டுவிட்டு  சென்று  உள்ளார் ஒருவர்  அதாவது  எனது  நறுக்கப்  (கவிதை)   போலவே நேர்மை  நிறைந்து இருந்தாலும்  இவரின்  மனைவி
Anonymous Anonymous said...
இப்படி தான் நானும், ஆனால் என் மனைவி நீ ஒரு மிருகம் என்கிறாள்...
இப்படி   குறிப்பிட்டு  இருந்தார்  இவர் நேர்மையாக  இருந்தாலும்     இவரின்  மனைவி நேர்மையாக  இல்லை  என்கிறார்  இதை  நான்  எப்படி  பார்க்கிறேன்  இந்த  நேர்மையாளர்கள்  வெளியே  வராத  காரனத்தினல்தான்  இந்த  சமூகம் சிக்கலை  சந்திக்கிறது  நேர்மையாளர்கள்   எல்லா இடங்களிலும்  தமது  ஆளுமையை  நிலை  நிறுத்த வேண்டும்  என்பதே  நமது  அவா .




















  







Saturday, 1 October 2011

என் தவத்தின் காரணமும் இதுதான்



உன் இதழ்களில்
வெண்சுருட்டின்
நாற்றமெடுக்க  வில்லை
அதைமறைக்க
வேறு எதையும்
அசைபோட  வில்லை.

உன் வியர்வையிலும்
சாராய  நெடியில்லை
இரத்தத்திலும்  தான்.

உன் கொள்கையிலும்
கோணலில்லை.

உன் உணவுத்திட்டத்திலும்
மரக்கறி  உணவே.
என் வாழ்னாள் 
முழுமையும்
மகிழ்வு நிறைந்திட
இதுபோதும்
என் கடுந்தவத்தின்
காரணமும் இதுதான்
அன்பனே ....