இவர்கள் ...
கோழைகள்
தமது ஆளுமையை
நிலைநிறுத்த இயலாத
பேதைமை உள்ளவர்கள் .
விளைந்தும்
அறுவடைக்கு
ஆயத்தமகாதவர்கள் ..
படித்தும்வாழ்க்கைப் பயன்பாட்டுக்கு
வராத அல்ஜிபிரா
கணக்குகள்.
நேர்மையிருந்தும்
நேசிக்கத் தெரியாதவர்கள்
விழி இருந்தும்
வழிகேட்டு அலைபவர்கள் .
கைவிளக்கை வைத்துக்
கொண்டே காரிருளைக்
கண்டு அச்சம்கொள்ளுபவர்கள் .
அறிவை தன்னுள்ளே
புதைத்துக் கொண்டே
முட்டாள்த் தன
ஆளுமைக்கு அடங்கிப்
போகிறவர்கள் .
பேய்த்தனம் நிறைந்த
பெண்மையை
எதிர்க்கத் தெரியாதவர்கள் .
சத்தமில்லாத ...
சமத்துவம் நிறைந்த _ வாழ்வை
சமைக்கத் தெரியாதவர்கள் .
நாளும் ...
இல்லறத்தை
அணு அணுவாய்
சுவைக்கத் தெரியாதவர்கள் .
பண்பட தெரியாதவர்கள்.
பாராட்டத் தெரியாதவர்கள் .
என் ...
விமர்சனம்
கடினமாகத் தோன்றினாலும்
உண்மை என்னவோ
இதுதான்.
கடந்த எமது இடுகைக்கு வந்து பெயரைக் குறிப்பிடாமலே பின்னுட்டம் ஒன்றை இட்டுவிட்டு சென்று உள்ளார் ஒருவர் அதாவது எனது நறுக்கப் (கவிதை) போலவே நேர்மை நிறைந்து இருந்தாலும் இவரின் மனைவி
- Anonymous said...
- இப்படி தான் நானும், ஆனால் என் மனைவி நீ ஒரு மிருகம் என்கிறாள்...
இப்படி குறிப்பிட்டு இருந்தார் இவர் நேர்மையாக இருந்தாலும் இவரின் மனைவி நேர்மையாக இல்லை என்கிறார் இதை நான் எப்படி பார்க்கிறேன் இந்த நேர்மையாளர்கள் வெளியே வராத காரனத்தினல்தான் இந்த சமூகம் சிக்கலை சந்திக்கிறது நேர்மையாளர்கள் எல்லா இடங்களிலும் தமது ஆளுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதே நமது அவா .
29 comments:
சில நேரத்து சூழ்நிலைக் கைதிகள் அவர்கள்... அவர்கள் பொங்கி எழுந்தால் ஒன்று நல்லது நடக்கும்... இல்லை என்றால் தீயவர்களின் சதியால் பேராபத்து நிகழும்... அதையும் எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும்... ஒதுங்கியே நின்று பழகி வாழ விரும்பியவர்கள்...
சத்தமில்லாத ...
சமத்துவம் நிறைந்த _ வாழ்வை
சமைக்கத் தெரியாதவர்கள் .//
செமையான சாட்டையடி....!!!
தமிழ் பத்து, தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு!!!
எல்லா சூழ்நிலைகளும் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சாதகமாக அமைவதில்லை. பிரச்சனைகள் எப்போது எந்த ரூபத்தில் எவ்வளவு தீவிரமடையும் என்றும் யாரும் சொல்லவும் முடியாது. அதனால் அவர் ஒதிங்கிப்போக நினைக்கலாம்.vgk
@MANO நாஞ்சில் மனோதமிழ் மணத்தில் இணைத்தமைக்கும் தமிழ்பத்து வில் இணைத்தமைக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்
அருமையான வரிகள் மாலதி
தலைப்பும் அதற்கான விளக்கமாக அமைந்த
பதிவும் மிக மிக அருமை
நம் நாட்டில் உள்ள பிரதானப் பிரச்சனையே
அறிவுக் கோழைத்தனமும்
முட்டாள்தனத்தின் வீரமும்தான்
அதை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஃஃஃஃநேர்மையிருந்தும்
நேசிக்கத் தெரியாதவர்கள்
விழி இருந்தும்
வழிகேட்டு அலைபவர்கள்ஃஃஃஃ
சரியான விதப்புரை மிக்க நன்றீங்க...
கவிதை அருமை சகோ கவிதையின் தலைப்பே சூப்பரா இருக்கு
அழகான உவமையுடன் சாடும் கவிதை அருமை சகோ
த.ம 3
எனது பின்னூட்டத்திற்கு பதில் கவிதையா?
நல்லது...
என் மனைவி நேர்மையானவள் இல்லை என்று கூறவில்லை...
அவள் கற்பனைக்கு ஏற்ற கணவனாய் நான் இருக்கவில்லை...
அவளின் ஏழ்மை நிலை என்னிடம் பணத்தை எதிர்பார்த்தது..
என் விடாப்பிடி கொள்கை..
என்னை வறுமையில் தள்ளியது...
விளைவு அவள் ஆசைப் பட்டபடி வாழாததால்..
எனக்கு கிடைத்த பட்டம் மிருகம்...
அவளை குறை கூறவில்லை...
அதே நேரம் என்னையும் குறை கூறவில்லை...
சமூகம் செதுக்கும் மனிதர்கள்...
அவ்வளவு தான்...
என் மனைவியாக இருந்தால் எதிர்த்திருப்பேன்..
என் பிள்ளைகளின் தாய் ஆகையால்
எதிர்க்க முடியவில்லை..
மாய உலகத்தாரும் வை கோபால கிருஷ்ணன் சாரும் புரிந்து கொண்டார்கள், அவர்களுக்கு நன்றி
கவிதை படிக்க கார சாரமாய் இருக்கிறது.ஆனால் வாழ்வில் எல்லாமே கருப்பு வெளுப்பாக பிரிக்கப்படுவதில்லை.வேறு சில கலவை வர்ணங்களும் உண்டு.எதுவுமே இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்க
இயலாது.பல சூழ்நிலைகளின் நடுவே
வளைந்தும் விட்டுகொடுக்கும்படியான நிர்பந்தங்கள் இருக்ககூடும்.
வளைந்தவர்கள் எல்லாரும் கோழைகள் அல்ல,நிமிர்ந்தவர்கள் எல்லாம் வீரர்களும் அல்ல.
விவேகிகள் சமய சந்தர்ப்பத்தை பார்த்து அணுகக்கூடிய திறமை பெற்றவர்கள்
நல்ல கவிதை.
நல்ல விமர்சனம்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
கவிதை அருமை...
அருமையான கவிதை மாலதி.
//நேர்மையாளர்கள் எல்லா இடங்களிலும் தமது ஆளுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதே நமது அவா //.
ஆம்.
விளைந்தும்
அறுவடைக்கு
ஆயத்தமகாதவர்கள் ..
படித்தும்வாழ்க்கைப் பயன்பாட்டுக்கு
வராத அல்ஜிபிரா
கணக்குகள்.
அருமையான கவிதை.
@Anonymousவணக்கம் உங்களின் சிறப்பான மீண்டுமொரு சிறந்த ஆக்கத்திற்குநன்றிகள் நாம் சொல்லுவதெல்லாம் எல்லோரையும் எல்லா இடங்களிலும் தமது ஆளுமைக்குள் கொண்டுவர இயலாது தெரிந்த செய்திதான் உங்களின் மனைவி நேர்மை இல்லாதவர் என நாம் குறிப்பிட்டது தமது குடும்பத்தை தனது கணவரை முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்பதற்காக நான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் வார்த்தையில் கடினம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை நான் குறிப்பிட்டது புரையோடிப்போன இந்த குமுகத்தைதான் என்பதை அருள் கூர்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ளவும்
துறை சார்ந்த வல்லவர்களே அதிகம் என சொல்லலாம், அதனிலும் அவர்களுக்கு வேறு துறை அறிவு இருப்பது அரிது. . .நல்ல படைப்பு. . .
வார்த்தையில் கடினம் இல்லை, மன்னிப்பு கேட்க தேவையும் இல்லை... உங்கள் கோபம் நியாயமானதே...
சமூகத்தில் <> என்று பெண்களையும்,
<<>> என்று ஆண்களையும்
<<> என்று இருவரையுமே விளாசியுள்ளீர்கள், வரிகளுக்குள் அடங்கும்போது நல்ல கவிதை! வாழ்கைக்குள் வரும்போது சற்று சிக்கலான கவிதை!
கவிதை அழகாக எழுதியிருக்கிறீங்க மாலதி.
யாரிலும் குற்றமில்லை, எல்லாம் விதியின் விளையாட்டு....
விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது...
விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக்கொள்ளும், அதற்காக அழுதும் பலனில்லை.... கவியரசு கண்ணதாசன்.
அறிவுக் கோழைத்தனம்
முட்டாள்தனத்தின் வீரம்.
வளைந்தவர்கள் எல்லாரும் கோழைகள் அல்ல,நிமிர்ந்தவர்கள் எல்லாம் வீரர்களும் அல்ல.
நல்ல கருத்துகள்...அசைபோடுகிறேன்.. பாராட்டுகள் மாலதி! கருத்தைக் கொடுத்து, கருத்தை எடுப்பதும் நல்ல ஒரு பாடம்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அறிவுக்கோழைகளாக
இருக்கக்கூடாது!
ஒத்துக்கிறேன்...
முட்டாள்வீரர்களாக
இருக்கலாமா?
ஹி...ஹி...சும்மா!
@சீனுவாசன்.குஅறிவுக் கோழையால் இந்த சமூகம் சீரழிவை சந்திக்கும் முட்டாள்தன வீரத்தினால் இந்த சமூகம் பேரழிவை சந்திக்கும் பரவாயில்லையா? ஹிஹி ஹி இது சீரிசகத்தான் எல்லாமே சொம்மா நகைசுவதன் தவறாக எடுக்க வேண்டாம் .
சாட்டை அடி.
அறிவுக் கோழைகள்... அட
சில பேருக்கு தான் உங்கள் பதிலோ?
இதில் என்ன பாகுபாடு?
@KParthasarathiமீண்டுமொரு சிறந்த வருகைக்கு பாராட்டுகள் உங்களின் வினாவில் விடையும் இருப்பதனால் பதில் அளிக்க வாய்ப்பு இல்லாமல் போனது அதாவது வாழ்கை வாழ்ந்து கட்டவேயன்றி கூறுபோட்டு சண்டையிட்டு கொண்டு இருப்பதில்லை திருமணத்திற்கு முன்னதாகவே இந்தப் பெண் அல்லது ஆண் சிறந்தவனா நமக்கு ஏற்றவனாஎன்பதை எல்லாம் சிந்தித்து வாழ்கையை தொடங்கினால் இந்த சிக்கல்கள் தோன்றது என்பதே எமது பதில் நன்றி ....
Post a Comment