நுனிப்புல் மேய்வதில்லை
நுணுகி நுணுகி ...
ஆய்கிறவன் நீ.
கற்காமலே
கருத்துரைப்பதில்லை
ஆழ்ந்து உள்வாங்கியே
கற்ப்பிக் கிறாய் ,
கண்ணீருக்கு
காரனமானவன்
அல்லன் நீ
மாறாக துடைத்தெரிய
களமாடுகிறாய்.
கனமானதை
உள்வாங்கிச்
செறித்துக் கொள்கிறாய்
அதையே ...
எளிமையாக்கி எமக்கு
பாடமாக்கு கிறாய் .
உன் ...
பட்டறிவை எமக்கு
பயிற்று விக்கிறாய்
என் பாதையை
நேராக்குகிறாய்.
சித்தன் போல்
சிந்திக்கிறாய்
உலகின் கண்களுக்கு
பித்தன் போல்
தோற்ற மளிக்கிறாய்.
கண்ணுள்ள குருடர்க்கு
வழி சமைக்கிறாய்
அனை வருக்குமாய்
கலங்கரை விளக்காக்கி
உயர்ந்து நிற்கிறாய்.
நுணுகி நுணுகி ...
ஆய்கிறவன் நீ.
கற்காமலே
கருத்துரைப்பதில்லை
ஆழ்ந்து உள்வாங்கியே
கற்ப்பிக் கிறாய் ,
கண்ணீருக்கு
காரனமானவன்
அல்லன் நீ
மாறாக துடைத்தெரிய
களமாடுகிறாய்.
கனமானதை
உள்வாங்கிச்
செறித்துக் கொள்கிறாய்
அதையே ...
எளிமையாக்கி எமக்கு
பாடமாக்கு கிறாய் .
உன் ...
பட்டறிவை எமக்கு
பயிற்று விக்கிறாய்
என் பாதையை
நேராக்குகிறாய்.
சித்தன் போல்
சிந்திக்கிறாய்
உலகின் கண்களுக்கு
பித்தன் போல்
தோற்ற மளிக்கிறாய்.
கண்ணுள்ள குருடர்க்கு
வழி சமைக்கிறாய்
அனை வருக்குமாய்
கலங்கரை விளக்காக்கி
உயர்ந்து நிற்கிறாய்.
35 comments:
அருமையாக இருக்கிறது கவிதை, நாம் குருவாக நினைப்பவர்களுக்கும் பொருந்தும்!
@நம்பிக்கைபாண்டியன்விரைந்த கருத்துகளுக்கு நன்றி
கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக என்னும் வள்ளுவன் வாக்கை காப்பவனோ?
சித்தன் பலர் கண்களுக்கு பித்தனாக தான் தெரிவார்கள், ஏனெனில் அவர்கள் சிந்திப்பது மாற்று சிந்தனை,
இறைவன் இல்லை என்று ஆணித்தரமாய் புட்டு வைத்தவர்கள் சித்தர்கள்...
வழக்கம் போல் சொல்லாடல் அருமை
@suryajeevaஉண்மைதான் கடவுள் மறுப்பாளர் களாகத் தான் சித்தர்கள் வாழ்ந்தார்கள் மக்களுக்காகவே சிந்தித்தார்கள்
அருமையான கவிதை அழகாக இருக்கிறது
கனமானதை
உள்வாங்கிச்
செறித்துக் கொள்கிறாய்
அதையே ...
எளிமையாக்கி எமக்கு
பாடமாக்கு கிறாய் ./
மிக அரிய கருத்துக்களுடன்அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
நன்று.
நல்ல சிந்தனை கவிதை .
சிந்தை தெளிந்தவர்கள் சித்தர்கள்
போகர் எனும் சித்தர் முருகனை வழிபட்டதாய் சொல்வது ???
@M.Rநல்ல சிறந்த கதசிரியாரால் படைக்கப்பட்ட அக்மார்க் கதைகள்தான்
எளிமையும் இனிமையும்
கருத்துச் செறிவும்
அமைந்ந கவிதை!
மகளே!
புலவர் சா இராமாநுசம்
அருமை.
கவிதை அருமையா இருக்கு...!!!
கடவுளை காண விழைபவர்களை பக்தர்கள் என்றும்,கண்டு தெளிந்தவரகளை சித்தர்கள் என்று கூறுவார்.கடவுளை மறுப்பவர்கள் என்று எல்லோரையும் கூற இயலுமோ?தங்கள் ஆத்மா சாதனைகள் மூலம் எய்திய சித்திகள் வழியாக பெற்ற அனுபவங்களையும் ,உண்மைகளையும் தங்கள் பாடல்கள் மூலம் பாமரர்களுக்கு அருளி இருக்கிறார்கள்.ஆனால் எளிதில் புரியக்கூடியவை அல்ல.அவர்களை இனம் கண்டு கொள்வதும் சுலபமில்லை.
அருமையான கவிதை
அருமையான கவிதை மாலதி.
சிந்தித்தாலே சித்தர் ஆகிவிடுவோமே. கவிதையின் கரு நன்று.
சித்தன் போல்
சிந்திக்கிறாய்
உலகின் கண்களுக்கு
பித்தன் போல்
தோற்ற மளிக்கிறாய்.
சித்தன் போல்
சிந்திக்கிறாய்
உலகின் கண்களுக்கு
பித்தன் போல்
தோற்ற மளிக்கிறாய்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html
//கனமானதை
உள்வாங்கிச்
செறித்துக் கொள்கிறாய்
அதையே ...
எளிமையாக்கி எமக்கு
பாடமாக்குகிறாய் ./
அழகிய கவிதை. அற்புதமான வரிகள். vgk
ரசித்தேன்.
குருவாய்,வீரனாய்,சித்தனாய்,அறிவாளனாய்,அன்பானவனாய்...கவிதையில் அருமையானவனாய் !
சித்தனைஎல்லாம் பித்தனென்று தான் சொல்வார்கள்..
கண்ணீருக்கு காரணம் நாமில்லை என்றாலும்
அதை துடைத்தெறியும் பக்குவம் வெகு சிலருக்கே இருக்கும்.
அக்குணம் நிறைந்தால், வாழ்வியலின் பொருளை எளிதில்
கையாளலாம்.
நீங்கள் கவியை கையாண்ட விதம் வெகு அருமை.
அவரவருடைய ரோல்மொடலுக்கெல்லாம் பொருந்தக் கூடிய கவிதை. நன்று.
கண்ணுள்ள குருடர்க்கு
வழி சமைக்கிறாய்
அனை வருக்குமாய்
கலங்கரை விளக்காக்கி
உயர்ந்து நிற்கிறாய்.
ரசித்தேன் பாராட்டுக்கள்.
ரசிக்கவைக்கும் கவிதை வாழ்த்துக்கள் சகோ
சிறந்தவனாய் இருப்பது சிறப்பு என அருமையாய் உரைத்தீர்
நல்ல கவிதை மிகவும் இரசித்தேன்
மனதை தொட்ட கவிவரிகள், வாழ்த்துகள் மாலதி....
தமிழ் இன்னும் உயிருடன் வீறு நடை போடுகிறது என்பதற்கு இந்த கவி வரிகள் எடுத்துகாட்டு...
ந்ல்ல கவிதை. சித்தர்கள் பற்றி சிந்திக்கவைக்கிறது. "நவீன சித்தர் என்று தங்களை குறிப்பிடலாம்
@ஹேமாம் ...வருக வருக .....
அருமையான கவிதை...அருமையான கவிதை...4 நாள் கடந்து வந்ததற்கு வருந்துகிறேன் நன்றி சகோ!
நீங்கள் கூட சித்தன் போல சிந்தித்து
மிக எளிமையாக அழகாகத்தான்
படைப்பைத் தந்துள்ளீர்கள்
அருமை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மூடிய கருத்துடைக் கவிதை எப்படியும் கற்கனை பண்ணலாம் ஒரு ஆசிரியனுக்கும் பொருந்துவது போல் வாழ்த்துகள் சகோதரி மாலதி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
வணக்கமம்மா
சித்தர்களை பற்றி அருமையாக சொன்னீர்கள்.. நாம்தான் அவர்களை கடவுள் ஆக்குகின்றோம்!!!!
சித்தர்கள் நமக்காக களமாடுபவர்கள்.
அருமை
சிறப்பான வருகைக்கும் பின்னுட்டங் களுக்கும் பணிவான வணக்கங் களும் நன்றியும் .
Post a Comment