இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 22 October 2011

மண்ணில் வாழும் மனித நிலவே .....



எதையும் ....
கேட்கலாமா ....
கூடாதா ....
எனக் காலங்
கடத்துவதில்லை  நீ.

விரும்பியதைக்
கேட்டுப் பெறுகிறாய்.
தெரிந்ததை
சொல்லித்  தருகிறாய்.

தவறு நேரின்
பொறுப் பேர்க்கிறாய் ..
பொறுத்தருளவும் (மன்னிப்பு )
வேண்டுகிறாய்.

உள்ளத்தில்  ஒன்றும்
உதட்டில் ஒன்றும்
வேடங்களைச் 
சுமப்பதில்லை நீ.

கண்ணுள்ளபோதே
ஆதவ (சூரிய )
வணக்கத்தை
போதிக்கிறாய்.

இளமை உள்ளபோதே
வாழ்ந்து காட்ட
கட்டாயப்  படுத்துகிறாய்.

மண்ணில் வாழும்
மனித நிலவே
எனக்காகவும் _உன்
தண்ணொளி  வீசட்டுமே . 

         தீபாவளியாம் யாருக்கு  புரியவில்லை அசுரர்கள் சுரர்களை  அழித் தார்களாம் ( சுரர்கள் -குடிகாரர்கள் . அசுரர்கள் -  குடிக்காதவர்கள் . )குடித்துவிட்டு  வீணாக  சமர்புரிகிரவன்  எப்படி  நேர்மையனவானாக  இருக்கவியலும் ?  நரகாசுரன் யார்க்கு  என்ன கொடுத்தல்  செய்தார் ?
அருள் கூர்ந்து தெரிந்தவர்கள்  விளக்கின் தெளிவடைவேன் . நன்றி .

23 comments:

SURYAJEEVA said...
This comment has been removed by the author.
SURYAJEEVA said...

இருண்டே தான்
இருக்கிறது என்றும்
ஐப்பசி அமாவாசை
தோழி

முதலில் எழுத்து பிழை வந்து விட்டது

கவி அழகன் said...

அழகான கவிதை

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மண்ணில் வாழும் மனித நிலவே .....//

அழகிய தலைப்புடன் அழகான கவிதை. பாராட்டுக்கள்.

மகேந்திரன் said...

///உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் ஒன்றும்
வேடங்களைச்
சுமப்பதில்லை நீ.////

இன்றைய தினத்தில் இப்படி ஒருவரை
சந்திப்பது மிக அரிது.
நம்மிடம் பேசும்போது மனம் ஒருபுறம்
பறக்க விடுபவர்களே அதிகம்.
அப்படி ஒருவர் இருந்தால் அவர் மண்ணில் வாழும் நிலவு தான்.
அழகிய கவி சகோதரி.

Anonymous said...

கவிதை அழகு ..இறுதி கேள்விக்கும் நான் விடையை எதிர்பார்க்கிறேன்...

RAMA RAVI (RAMVI) said...

//உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் ஒன்றும்
வேடங்களைச்
சுமப்பதில்லை நீ.//

அருமை,மாலதி.

கிராமத்து காக்கை said...

தனக்காக மட்டும் ஒளி வீசும் நிலாக்காள் தான் அதிகம்

கவிதை அருமை தோழி

Unknown said...

சிந்தனை வானில்
சிறகினை விரிக்க
வந்ததோக் கவிதை
வாழ்க பொன்மகளே

புலவர் சா இராமாநுசம்

jalli said...

"pulampalkal illatha "postive -kavithai"

"surya namaskaaram"-aathava vanakkam. thamizh paduththiuLLathu.
varaverka thakkathu.

annal kadaisi naanku varikal rompa
saathaaranam. niraya padikkavendum.
allthe best.

நம்பிக்கைபாண்டியன் said...

மண்ணில் வாழும் அரிய நிலா இது!

தீபாவளிக்கு பல காரணங்கள் உள்ளட்தாம்,

ஒருவேளை இதில் பதில் இருக்கலாம்!
http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_20.html

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

அழகான வர்ணனை.. உலகில் மனிதர்களும் இப்படியே இருக்க வேண்டும்.

Unknown said...

அழகான கவிதை சகோ நன்றி!

K.s.s.Rajh said...

அழகான கவிதை

அ. வேல்முருகன் said...

இப்படியொரு உலகம் சமைக்க எல்லோருக்கும் ஆசை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் அருகி வரும் நிலையில் அயராது தங்கள் சிந்தனைகளை பதிந்து உலகே இப்படி வாழ்ந்தால் இப்படி மதிக்கப்படுவாய் என்று அருமையாய் பதிந்துள்ளீர்கள்

Karthikeyan Rajendran said...

அற்ப்புதமான வரிகள் , சிந்தனையை தூண்டுகிறது,,, வாழ்த்துக்கள்.........

Karthikeyan Rajendran said...

எனது தளத்தை தரிசித்தமக்கு, நன்றி!!!!!!!!!!

ராஜி said...

I Wish u very happy diwali thozhi

Unknown said...

அருமை

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

ஹேமா said...

மண்ணில் வாழும் நிலவுக்கு அழகான வேண்டுகோள்.

கண்ணெதிரே இன்னும் நிறைய அசுரர்கள் !

விச்சு said...

அநேகம்பேர் இரட்டை வேடத்தில் வாழ்கின்றனர். நல்லதொரு கவிதை.

vetha (kovaikkavi) said...

''...உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் ஒன்றும்
வேடங்களைச்
சுமப்பதில்லை நீ...'''
vaalthukal..
http://www.kovaikkavi.wordpress.com

Vetha. Elangathialakam.

superlinks said...

வணக்கம்,உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.