இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 4 February 2012

சா.... தி .....


சாதீயத்தை ....
வெட்டிச்  சாய்ப்பதாலும் 
சமத்துவம்  வென்றெடுக்கப்படும்என்கிறாய் .

பண்பாட்டைப் பேணுவாதல்- நம் 
பாதைகள்  நேராகும்என்கிறாய் .

பகைவனை  யல்ல
பகைமையை 
அழித்த்டுக்க -நாம் 
பண்பட்டு உயர்வோம் 
என்கிறாய்.

உன் ...
பார்வைகள் 
உயர்வானவைகள் 
உன்பாதைகள் 
பக்குவப்படுத்தப்  பட்டவைகள் 
நானும்  தொடர்கிறேன் 
அன்பனே .   




                                    தமிழன்புடன்  மாலதி ..... 

 
 









 




17 comments:

Admin said...

சாதியை வெட்டியெடுத்தால் நிச்சயம் சமுதாயத்தை வெட்டியெடுக்கலாம்.

சத்ரியன் said...

மதிப்பிற்குறிய மாலதி,

கவிதை நாயகன் பெரியாரா? பாரதியா?

யாரென்றாலும் சிறப்பே!

மகேந்திரன் said...

பக்குவப்பட்ட மொழிகள்...
பின்பற்றுகிறேன் நானும்...

பாலா said...

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.

ஹேமா said...

நல்லதொரு மனிதனின் அன்போடு தொடர்கிறீர்கள்.வாழ்த்துகள் மாலதி !

இராஜராஜேஸ்வரி said...

பகைவனை அல்ல
பகைமையை அழித்தெடுக்க -
நாம் பண்பட்டு உயர்வோம்

உயர்வான பார்வைகள் .. பாராட்டுக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

எமது பதிவில் விருது காத்திருக்கிரது தங்களுக்கு..

இராஜராஜேஸ்வரி said...

விருது காத்திருக்கும் பதிவின் முகவரி..

http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_3382.html

Anonymous said...

உன் ...பார்வைகள் உயர்வானவைகள் உன்பாதைகள் பக்குவப்படுத்தப் பட்டவைகள் நானும் தொடர்கிறேன் ...

நானும் தான் சகோதரி...

Anonymous said...

நல்ல கருத்து .வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.

மாலதி said...

@இராஜராஜேஸ்வரிவணக்கம் முதல் முதலாக உங்களின் விருதைப் பெறுகிறேன் இதை மிகவும் மகிழ்வுடன் ஏற்கிறேன் உங்களுக்கு எமது பணிவான பாராட்டுகளும் வணக்கங்களும் நன்றி நன்றி நன்றி மாலதி .....

Anonymous said...

அன்பின் சகோதரி தங்களுக்கு தரப்பட்ட விருது பற்றிய தகவலை இங்கு காணுங்கள். வாழ்த்துகள்.

http://kovaikkavi.wordpress.com/2012/02/11/23-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-liebster-blog/

Anonymous said...

சகோதரி தங்களுக்குத் தரப்பட்ட விருதினை இங்கு காணுங்கள். காலையில் தந்தது. அறிவிக்கப் பிந்திவிட்டது போல தெரிகிறது.
http://kovaikkavi.wordpress.com/2012/02/11/23-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-liebster-blog/

முத்தரசு said...

'சா...தி'யை கொன்று 'சா.....தி'க்கணும்

மனோ சாமிநாதன் said...

அர்த்தமுள்ள கவிதை!! அழகான வரிகள்!!

G.M Balasubramaniam said...

சாதியத்துக்கான காரணம் கூறி அதற்கு ஒரு மாற்றும் கூறி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.” தீர்வுதான் என்ன “ என்ற தலைப்பில் ஜனவரி 30-ல் எழுதி இருக்கிறேன். படித்துப்பாருங்களேன்.

G.M Balasubramaniam said...

சாதியத்துக்கான காரணம் கூறி அதற்கு ஒரு மாற்றும் கூறி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.” தீர்வுதான் என்ன “ என்ற தலைப்பில் ஜனவரி 30-ல் எழுதி இருக்கிறேன். படித்துப்பாருங்களேன்.