இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday, 14 May 2012

நாங்கள் தமிழர்கள்நாங்கள்  சந்தனத்திற்கும் 
சாக்கடைக்குமான 
வேறுபாட்டை  அறியாதவர்கள் .

போலிகளுக்கு  புகழ் 
மாலை சூட்டி 
மகிழுகிறவர்கள்.

நேர்மையை  புதைத்துவிட்டு 
அவலங்களை 
அரங்கேற்றம்  செய்கிறவர்கள்.

புதையலை  ஒதுக்கிவிட்டு 
பொய்களை  தேடிக்கொண்டு 
இருப்பவர்கள் .

தத்துவங்களைத்  தவறவிட்டு 
சதிகளுக்கு   ஆளாகிக் 
கொண்டு இருப்பவர்கள்.

சாதியால்   
சண்டையிட்டு 
சங்கடங்களை  ...
விலை  பேசுகிறவர்கள் .
நாங்கள்  தமிழ் நாட்டுத் 
தமிழர்கள் .

தமிழன்  எப்போதுதான்   விழிப்பனோ?

17 comments:

இராஜராஜேஸ்வரி said...

புதையலை ஒதுக்கிவிட்டு பொய்களை தேடிக்கொண்டு இருப்பவர்கள் தமிழர்கள்" !!!!

செய்தாலி said...

வரிகளில்
கொதிக்கிறது
சமூகத்தின் மேலான கோபம்

சத்தம்
இல்லாமல் வந்தாலும்
அனலை அள்ளி வீசிவிட்டு போறீங்க தோழி

நலமா தோழி

ரிஷபன் said...

சாதியால் சண்டையிட்டு சங்கடங்களை ... விலை பேசுகிறவர்கள் !

Disturbing truth.

நிலவன்பன் said...

தூங்குபவன் விழிப்பான்! நடிப்பவன்?

வரலாற்று சுவடுகள் said...

///தமிழன் எப்போதுதான் விழிப்பானோ..?///

புத்தர் ஆசையை துறக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் சகோ., நீங்க ரொம்ப ஆசைப்படுவதாய் தெரிகிறது எனக்கு ..!

அருமையான ஆக்கம் சகோ ..!

வா.கோவிந்தராஜ், said...

நாம் தமிழர்கள்/// போலிகளுக்கு புகழ் மாலை சூட்டுகிறவர்கள் //

உண்மை உண்மை

மகேந்திரன் said...

விழித்திருப்பதாய் நினைத்து
முழித்துக் கொண்டிருப்பதே
நம் அதீத பணியாய்ப் போயிற்று..
விழித்தெழு தமிழா...

எஸ்தர் சபி said...

சிந்திக்க வேண்டிய கவிதை அக்கா...

சதீஷ் மாஸ் said...

ஏன் இப்படி கோபப்படுறீங்க....

பாலா said...

தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கும்வரை விழித்துக்கொள்ளவே மாட்டான்.

ஹேமா said...

தமிழன் அறிவானவன்.ஆனால் பெயர்,புகழ்,பணத்திறாய் விலையாகிவிடுவான்.இதுதான் பிரச்சனை மாலதி !

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

arul said...

nice and good

ராஜி said...

உங்க கவிதையை படிக்கும்போது த்மைழ் நண்டு கதைதான் ஞாபகம் வருது

செய்தாலி said...

வலைச் சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளேன்
நேரம் இருப்பின் வாருங்கள் (வலைச்சரத்திற்கு )

வேல்முருகன் said...

nice

வேல்முருகன் said...

nice