இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 9 October 2012

எனக்குப் பொருத்தமானவனும் நீ.
ஆண் ,பெண்  இனபேதம்
பார்க்காதவன்  நீ.

இயற்கையின்  படைப்பில்
அனைவரும் சமம்
என்கிறவன் நீ.

சாபங்களும்
சாபவிமோசனங்களும்
மனிதத்தை
முடமாக்குவன
என்கிறவன்  நீ.

கருத்தியலை
அழித்தொழித்து
பொருளியலை
முன்னெடுக்கிரவன்  நீ .

போர்க்குணம்

நிறைந்தவன்  நீ.

எனக்குப்
பொருத்தமானவனும் நீ.
 

14 comments:

Sasi Kala said...

பொருத்தமானவரை தேடிட்டிங்க போல நல்லது.

Ayesha Farook said...

பொருத்தமானவர் நல்லவர் ...
நல்ல வரிகள்... தொடருங்கள்

MANO நாஞ்சில் மனோ said...

பொருத்தமானவன்[ள்] அமைந்தால் வாழ்க்கையில் இன்பமோ இன்பம், கவிதை அழகு...!

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

கவிப்ரியன் said...

யார்? யார்? யார் அது யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ!?

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள், பொருத்தமானவரைக் கண்டுபீத்து, நல்ல கவிதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு.

விமலன் said...

பொருத்தமானவரை தேர்ந்தெடுக்க பெறும் வாய்ப்புகள் மிகவும் கொஞ்சமாக உள்ள தேசத்தில் இது மிகவும் நன்றாக/

Anonymous said...

போர்க்குணம் நிறைந்தவன் நீ.
எனக்குப் பொருத்தமானவனும் நீ.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சந்திரகௌரி said...

வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

கருத்தியலை
அழித்தொழித்து
பொருளியலை
முன்னெடுக்கிரவன் நீ .

பொருத்தமானவன்தான்!

இரவின் புன்னகை said...

பொருத்தமானவங்கள தேடிய உங்களுக்கு வாழ்த்துகள்... ஆனால் கடைசி வரைக்கும் அது யார் என்று தாங்கள் கூறவே இல்லையே...

ஆர்.வி. ராஜி said...

அருமையான வரிகள் மாலா.

*anishj* said...

ரசித்தேன் !!!

- இப்படிக்கு அனீஷ் ஜெ...

Seeni said...

ada....

appadiyaa....