இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Wednesday, 21 November 2012

உன் நினைவு தரும் சுகத்தால்

 உன்  கலப்படம்
இல்லாத சொற்களால்
கவரப்படுகிறேன் .

உன் உயர்ந்த சிந்தனையால்
ஊட்டம் பெறுகிறேன் .

உன்...
தொலைநோக்குத்
திட்டங்களால்
வியந்து போகிறேன் .

உன் மாசற்ற
பார்வையால்
மயங்கிப்போகிறேன் .


உன் நடிப்பற்ற
செயல்களால்
பூரிப்படைகிறேன் .

உன் வசீகரிக்கும்
நடத்தை முறைகளால்
உலகையே  மறந்து
போகிறேன் .

கண்கள் ஓயும்வரை
உன்னைப் பார்த்துச்
சுவைக்கிறேன்  .


உன் நினைவு
தரும்  சுகத்தால்
வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன் .


 என்றும் தமிழன்புடன்....
         மாலதி. 

7 comments:

முத்தரசு said...

சுகங்கள் பல வகை இதுவும் ஒரு வகை

அருமை பகிர்வுக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...


"உன் நினைவு தரும் சுகத்தால்"

தலைப்புக்கேற்ற நல்ல கவிதை.
பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

உயர்ந்த சிந்தனை பகிர்ந்த பதிவுக்குப் பாராட்டுக்கள்..

Anonymous said...

மிகவும் அருமையாக உள்ளது கவிதை...

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...

ஹைதர் அலி said...

ம்ம்
அருமையான கவிதை

SAMPATH KUMAR said...

தங்களின் கவிதை தொகுப்புகளுக்கு
புதிய படிப்பாளி நான்.
குடும்ப சூழல் காரணமாக படிப்பை
கால் வாசியிலே இழந்தவன் நான்.
நண்பர் ஒருவர் மூலம் தங்களின்
வலைதளத்தை பார்த்தும், எனக்கென
அவர் உருவாகித்தந்த வலையில்
என் மகன் (நான்காம் வகுப்பு ) உதவியோடு
என் வலையில் என் சொந்த உணர்வுகளை
பகிர்கிறேன் .நேரம் கிடைத்தால் வரவும், கருத்தும் செய்க.
சகோதரன் சம்பத்
http://easampath.blogspot.in/