தேர்வு செய்யுமுன் ...
ஓராயிரம் முறை சிந்திப்பேன்.
தேர்ந்தபின்
என்தலை சாய்ந்தாலும் ...
கைவிடேன் .
காதலன்
ஆடையல்ல.
அது உயிர் .
மரித்துபோன
சடலத்தை
மனிதனால்
சல்லாபிக்க
படுவதில்லை ...
இந்த
உலகின் ...
ஆதரவிற்கு முன்
என்னை பெற்றவர்களின்
ஆதரவை பெறவிழைகிறேன்.
முத்தத்தின் எச்சில்
காயுமுன் ...
காதலனை மாற்றும்
பண்பாட்டில் வளரவில்லை .
எவரையும்
புண்படுத்துவதற்காக
அல்ல ...
பண்படுத்துவதற்காக.
15 comments:
ம்ம்ம்ம் ரொம்ப கோவமா இருக்கீங்க போல.....
கவிதை நல்லாருக்கு!
//எவரையும்
புண்படுத்துவதற்காக
அல்ல ...
பண்படுத்துவதற்காக//
இது என்ன? டிஸ்கியா? :-)
கவிதை நல்லா இருக்கு ஆனா என்ன ஆச்சு..!!
:)
கண்ணியமான கவிதை. :-)
வித்தியாசமான பெண்முனைக் காதல்!
நேர்மையா ரொம்பவே வெளிப்படையா விஷயத்தைச் சொல்லும் தீர்க்கம் ரொம்ப அழகா இருக்குங்க ...
வாழ்த்துக்கள்... :-)
பண்படுத்தப்பிறந்துள்ள கவிதைக்கு வாழ்த்துக்கள்.
நேர்மையான காதல்
நேர்மறை சிந்தனையும் கூட
தலைப்பும் கூட
எதிர்மறையாய் இல்லாதிருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்குமோ
என்ற எண்ணத்தை மட்டும்
தவிர்க்க இயலவில்லை
ந்ல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
காதலனினையோ அல்லது காதலையோ எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்பதைக் கவிதை அருமையாகச் சொல்லுகிறது.
நம் பண்போடு மனதையும் சொல்லும் கவிதை !
நச்-னு இருக்கு..உங்க கவிதை...super.
கவிதை மூலம் உங்கள் பண்பும் வெளிப்படுகிறது.
Parents Permission வாங்கியாச்சா?...
நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...
மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html
அசத்தல் கவிதை..
நன்று
வாழ்த்துக்கள்
விஜய்
ஹேம
நம் பண்போடு மனதையும் கவிதை !
Post a Comment