இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 31 May 2011

மாலையுடன் வா



உனக்கான
வருகைக்காக ...
காத்துக்கிடக்கிறது
உள்ளம்.

என்ன சொல்லி ...
அழைப்பது ?
புரியவில்லை.

நாளும் நாளும்...
ஒரு யுகமாய்
கழிகிறது.

நாம் ...
பதின் (teen age )பருவத்தை
கடந்துவிட்டோம்.

காலங்களும்
நமக்காக துணைநிற்கிறது.

நமக்கேற்ற
வருவாய் முறைப்படி
ஈடடுகிறாய்.

என் கடந்த ...
காலத்திலும்
நிகழ் காலத்திலும்
என் இதய வாசலை கூட
எவனும்  தொட்டதில்லை .

இனியும் தொடப்போவதில்லை.

நம் இரண்டு
பக்கங்களையும்
அறிந்து கொண்டோம்..

விட்டுகொடுத்து
வாழ தீர்மானித்துவிட்டோம் .

இனியும்
ஏன்தயக்கம் ?

என்னவனே
மாலையுடன்வா .

12 comments:

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் கவிதை...!!!

Yaathoramani.blogspot.com said...

அன்பும் உணர்வும்
யதார்த்த சிந்தனையும்
மொத்தத்தில்
முதிர்ச்சியும் கொண்ட
காதலியின் அழைப்பு
இப்படித்தான் இருக்குமோ?
உண்ர்வு மட்டுமின்றி
அறிவும் கலந்த காதல் கவிதை
வித்தியாசமான சிந்தனை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாம் ...
பதின் (teen age )பருவத்தை
கடந்துவிட்டோம்.//

பதின் பருவத்தைக்கடந்த எங்களை மீண்டும் அந்தப்பருவத்திற்கே கொண்டு செல்கிறதே, இந்த அழகிய இனிய காதல் கவிதை.

பாராட்டுக்கள்

G.M Balasubramaniam said...

இன்னவனே என்று சொல்லாதவரை, ஏராளமானவர்கள மாலையுடன் வரப் போகிறார்கள்....!

A.R.ராஜகோபாலன் said...

மாலையிட வேண்டுமென்றால்
மண்டியிட வேண்டும் என சொல்லும்
வெகு சில பெண்களின்
மத்தியிலே
"என் கடந்த ...
காலத்திலும்
நிகழ் காலத்திலும்
என் இதய வாசலை கூட
எவனும் தொட்டதில்லை"
என்று பெண்ணவளின்
உள்ளத்து உறுதியை -அவளின்
குற்றமில்லா குருதியை
அருவியாய் வெளிப்படுத்திய விதம்
நலம்
வாழ்த்துக்கள்
நன்றி
பகிர்ந்தமைக்கு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிருக்கு சகோ.. தொடருங்கள் வாழ்த்துக்கள்

erodethangadurai said...

அழகான , எதார்த்தமான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

வா காத்திருக்க நேரம் இல்லை.. என அழைக்கும் அழைப்பு அழகு

இராஜராஜேஸ்வரி said...

@இனியும்
ஏன்தயக்கம் ?

என்னவனே
மாலையுடன்வா .//

மாலையுடன்
மாலையில் வந்து
மாலை சூடி
மணநாள் காண
மணம்நிறைந்த வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அழகான உணர்வின் வெளிப்பாடு.எனக்கும் காதல்
வருது மாலதி !

மதுரைக்காரன் said...

Awesome...one.