இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 17 May 2011

முன் அனுபவம் ?


 
சுய சிந்தனை
கொண்டவன்
அடிமை சேவகம்
செய்ய வரும்பவில்லை .
 
உண்மைக்கு
இங்கு  எவனும்
வேலை கொடுக்கவில்லை .
 
நான் ஏகல்வயனாக (ஏகலைவன் )
கற்று
தேர்ந்து
நிற்கும் முன்
பரமபத பாம்பாய்
தோல்விகள் .
 
பிழையானத்தை
செய்யவும்
திணிக்கவும்
தொடரவும் இல்லை .
 
காட்டாற்று 
வெள்ளத்தில்
கடலலையில் 
முகிழ்த்தாலும்
கேட்டு அல்ல
வேண்டுமா ?
உதவி என்றே
நீட்டுகிறேன் கையை .
 
நான் ஏன்
அழவேண்டும் ?
என் உழைப்பை
உள்வாங்காத
போலி உலகம்
தானே அழவேண்டும்?
 
திருமண வட்டத்திலும்
உள்நுழைய
விரும்பவில்லை .
 
எதிலும் முன்
அனுபவம் இல்லாத
நான்
என் திருமணத்திலும்
முன் அனுபவத்தை
கேட்டுத்  தொலைத்தல்
நான் என்ன செய்வேன் ?.

நான் மதிக்கும் ஒருவரின்  நாட்குறிப்பில்  இருந்து அவருக்கே  தெரியாமல் அடுத்த கவிதை இது  அவரின்  மனம்  எவ்வளவு சங்கட பட்டு யுக்கும் இந்த உலகத்தின் மீது  எவ்வளவு வெறுப்பு உண்மையானவர்கள் இந்த மக்கள் புரிந்து கொள்வதில்லையோ ?

12 comments:

MANO நாஞ்சில் மனோ said...

உங்க சிந்தனை சூப்பர்.....

Chitra said...

எழுதப்பட்டு இருக்கும் கவிதையில் ஆதங்கமும் வலியும் தெரிகின்றன. நல்வாழ்வு மலரட்டும்!

குணசேகரன்... said...

எதிலும் முன்
அனுபவம் இல்லாத
நான்
என் திருமணத்திலும்
முன் அனுபவத்தை
கேட்டுத் தொலைத்தல்
நான் என்ன செய்வேன் ?.//எவ்ளோ வலி...super

ஹேமா said...

மனித மனங்களின் இறுக்கமான போக்கு மனித நேயத்தை மறந்தே போகிறது !

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலிகள் மிக்க ஆதங்க வரிகள்.
நல்வாழ்க்கை அமையட்டும்.

jayakumar said...

super...same thoughts...

jayakumar said...

halo...how to follow your blog?...pls give me your mail id...

சரியில்ல....... said...

வலி.. வரிகளில்.. வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

சைக்காலஜிக்கல் தாட்.. நீட்

சிவகுமாரன் said...

வலி நிறைந்த கவிதை.
நன்றாக உள்ளது. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் கவனித்து சரி செய்யுங்கள்.

சிநேகிதி said...

வலிகள் நிறைந்த வரிகள்

Ramani said...

சுய சிந்தனை கொண்டவன்
அடிமை சேவகம் செய்வதில்லை
சத்தியமான வார்த்தை
திருமணத்திலும் முனனனுபவமா..
நல்ல நக்கல் வரிகள்
நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்