இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday, 5 June 2011

வேள்விச் சாலையாக்கிக் கொள்ளட்டும்

உன்னைப்பற்றிய 
எந்த குறிப்புமில்லை
என்னிடம் .

ஆனாலும் ...
என்னிதயத்தை -நீ
நிறைத்துக் கொண்டாய்.

நான் ...
வரைந்து வைத்துள்ள
வரைபடத்தை -நீ
ஒத்திருப்பதாக
காட்டுகிறது  உன்
எழுத்து.

நீ...
ஆக்கிரமித்துக்கொள்ள
எண்ணுவது
என்னுடலையா
என்னுள்ளத்தையா
என்பதை
வைத்தே என்
தலைஎழுத்து
நிர்ணயிக்கப் படும்
என்பதை நானறிவேன்.

நீ ...
என் கற்ப்பை
காவு கேட்கும்
கள்வனல்ல.

நிறம் மாறும்
பச்சோந்தியல்ல
என்பதை
பறைசாற்றுகிறது
உன் பால்முகம்  .

நீ ...
பாலபாடம்
பயின்ற
பல்கலைகழகம்
எது என்பதை 
அடையலாம்
காட்டு.

இந்த ...
 பாழாய்ப்போன 

முடைநாற்றம்
வீசும் போலிச்மூகம்
அதை
வேதம் பயிலும்
வேள்விச் 
சாலையாக்கிக் கொள்ளட்டும்.

30 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

சி.பி.செந்தில்குமார் said...

>.நான் ...
வரைந்து வைத்துள்ள
வரைபடத்தை -நீ
ஒத்திருப்பதாக
காட்டுகிறது உன்
எழுத்து.


இது தான் காதல் என்பதா?இளமை பொங்கி விட்டதா ?

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்த ...
பழய்போன

ப்ளீஸ் கரெக்ட் அஸ்

இந்த ...
பாழாய்ப்போன

MANO நாஞ்சில் மனோ said...

இந்த ...
பழய்போன
முடைநாற்றம்
வீசும் போலிச்மூகம்
அதை
வேதம் பயிலும்
வேள்விச்
சாலையாக்கிக் கொள்ளட்டும்///


அருமையா எழுதி இருக்கீங்க மாலதி சூப்பர்ப்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>இந்த ...
பழய்போன

ப்ளீஸ் கரெக்ட் அஸ்

இந்த ...
பாழாய்ப்போன///


டேய் அண்ணா விடுடா விடுடா ஓவரா ஃபிலிம் காட்டாதே...

கவி அழகன் said...

காதலும் சமுகத்தின் மீதான கோபமும் கவிதயில் தெரிகிறது

வை.கோபாலகிருஷ்ணன் said...

காதலுக்கான தடைக்கற்களை
உடைக்க நினைக்கும் உளி
இந்தக் கவிதை.

பாராட்டுக்கள்.

பிரபாஷ்கரன் said...

கவிதையில் கோபம் யதார்த்தம் தெரிகிறது வாழ்த்துக்கள்

மாலதி said...

உங்களின் கருத்துகள் விமர்சனகள் ஏற்றுகொள்ளபடும் குறைகள் திருத்திகொள்ளபடும் வருகைக்கு பாராட்டுகள் நன்றிகள்

மாலதி said...

எமது தவறுகள் சுட்டி கட்டுகிறவர்களுக்கு எமது பணிவான வணக்கங்களும் நன்றிகளும் தொடர்ந்து வருக குறைகளை பட்டியலிடுக அவைதான் என்னை வழிநடத்தும்.

ஹேமா said...

மாலதி ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா ரொம்பக் கோவமா இருக்கீங்க.என்னதான் கத்தினாலும் சமூகம் திருந்தாது.நாம் மாறுவோம் !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
இந்த ...
பாழாய்ப்போன
முடைநாற்றம்
வீசும் போலிச்மூகம்
அதை
வேதம் பயிலும்
வேள்விச்
சாலையாக்கிக் கொள்ளட்டும்.
////////

இது போன்ற நிலைதான் சமூகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல கவிதை வாசித்தேன்..
தொடருங்கள்..

Anonymous said...

இந்த ...
பாழாய்ப்போன
முடைநாற்றம்
வீசும் போலிச்மூகம்
அதை
வேதம் பயிலும்
வேள்விச்
சாலையாக்கிக் கொள்ளட்டும்./// என்னே ஒரு "நச்" என்று வரி...

சாகம்பரி said...

அழகான கவிதைகள். மகிழ்ச்சி, துக்கம், கோபம், கருணை இவற்றின் செய்திகளாக இன்னும் எதிர்பார்க்கிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

"நீ...
ஆக்கிரமித்துக்கொள்ள
எண்ணுவது
என்னுடலையா
என்னுள்ளத்தையா
என்பதை
வைத்தே என்
தலைஎழுத்து
நிர்ணயிக்கப் படும்
என்பதை நானறிவேன்."

இந்த கேள்வியே என்னை ஆக்கிரமித்தது
எனக்கு இதில்
கோபம் தெரியவில்லை
தற்காப்பே தெரிகிறது
தவறில்லை
தவறாதிருக்க
செய்யும்
எந்த செயலும்
எந்த கேள்வியும்
தவறில்லை.

நல்ல கவிதை
பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி said...

வேள்விச் சாலையாக்கிக் கொள்ளட்டும் அருமையான பகிர்வு .பாராட்டுக்கள்.

நிரூபன் said...

காதலை எப்படி எம் சமூகம் உற்று நோக்குகிறது என்பதை நச்சென்ற வார்த்தையலங்காரத்தால் கவிதையாகப் படைத்துள்ளீர்கள்.

ஹ ர ணி said...

வாழ்வின் உண்மைப் பக்கங்களை மட்டும்தேடும் மனது தெரிகிறது. இப்படி எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்துவிட்டால் அற்புதம்தான். எளிமையான சொற்களில் கவிதை பளிச்சிடுகிறது.


இந்த ...
பாழாய்ப்போன
முடைநாற்றம்
வீசும் போலிச்மூகம்
அதை
வேதம் பயிலும்
வேள்விச்
சாலையாக்கிக் கொள்ளட்டும்.

கவிதையின் ஒட்டு மொத்தத்தையும் காட்சிப்படுத்தும் வரிகள் இவை.வாழ்த்துக்கள்.

ஹ ர ணி said...

வாழ்வின் உண்மைப் பக்கங்களை மட்டும்தேடும் மனது தெரிகிறது. இப்படி எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்துவிட்டால் அற்புதம்தான். எளிமையான சொற்களில் கவிதை பளிச்சிடுகிறது.


இந்த ...
பாழாய்ப்போன
முடைநாற்றம்
வீசும் போலிச்மூகம்
அதை
வேதம் பயிலும்
வேள்விச்
சாலையாக்கிக் கொள்ளட்டும்.

கவிதையின் ஒட்டு மொத்தத்தையும் காட்சிப்படுத்தும் வரிகள் இவை.வாழ்த்துக்கள்.

Anonymous said...

எந்த வரியை மேற்கோள் காட்ட..எல்லா வரிகளும் நிதர்சணம் மாலதி..

"உழவன்" "Uzhavan" said...

அருமையா எழுதி இருக்கீங்க.

ஸ்ரீராம். said...

ஹேமா சொன்னது போல ஒரு கோபமான கவிதை...!

Unknown said...

ஏன் ஒட்டு பட்டைகளை இணைக்கலாமே??

Collections 4 U said...

very nice and cute

Yaathoramani.blogspot.com said...

நினைப்பது மட்டும் அல்ல
உணர்வதை உணர்ந்தபடி
படிப்பவர்கள் உணரச் செய்வதுவே
உன்னதப் படைப்பு
உங்கள் தார்மீகக் கோபத்தை
அப்படியே உணர்ந்தேன்
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Super writings!

மாலதி said...

அன்பானவர்களே உங்களின் அனைவரின் விமர்சனங்களும் ஊக்கபடுத்துதல் களும் என்னை செழுமைபடுத்துகின்றன . உங்களின் வருகையும் பின்னுட்டங்களும் பாராட்டுகளுக்கு உரியன நன்றிகள் .

லதானந்த் said...

பட்டியல் போடச் சொல்லி இருக்கிறீர்கள். இதோ பட்டியல்!
1) எந்த குறிப்புமில்லை
2) ஒத்திருப்பதாக காட்டுகிறது
3) கற்ப்பை
4) கற்ப்பை காவு
5) என்பதை பறை
6) பல்கலை கழகம்
7) அடையலாம் காட்டு
8) போலிச் மூகம்

vetha (kovaikkavi) said...

என்ன இப்படி ரெம்ப கோபமாக எழுதியுள்ளீர்கள்.....
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com