இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 2 July 2011

முலை திருகி எரிந்து கொன்றழிக்கவும் ...

போலித்தனமில்லா
உன்னுடனான
தொடர்புகளை
நான் நாளும்
உணர்வதால்
இந்த  குமுகம்
குற்றமுடையதுதான்
என்பதை
புரிந்து  கொள்ள
முடிகிறது  என்னவனே ...

பொய்யும்  வழுவும்
அரசபீடம்  ஏறுகிறது
என்பதும் ...

நேர்மையும்
 அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள்  ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...

அதற்காக நான்
பொதுநல 
வாதியாகிட
முடியாது .

நான் தன்னலம்
எண்ணம்  கொண்டவள் தான் .

நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .

அதையே ...
வேடிக்கை  பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று  அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது  ...

மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம்   வா .


 

28 comments:

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் தொடருங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .


ஆஹா அழகு வரிகள்./. ஒரு படைப்பாளீயின் சுதந்திரத்தில் தலையிடுவதாக நினைக்காதீர்கள்,டைட்டிலாக இதையே வைத்திருந்திருக்கலாம்..

இராஜராஜேஸ்வரி said...

பொய்யும் வழுவும்
அரசபீடம் ஏறுகிறது
என்பதும் ..//

சிந்தனைகள் சிந்திக்க வைக்கும் துளிகள். பாராட்டுக்கள்.

vidivelli said...

nalla varikal
valththukkal..............

Anonymous said...

சிறப்பாக இருக்கிறது தொடருங்கள் ..

A.R.ராஜகோபாலன் said...

படித்து முடித்தவுடன் கைகள் அன்னிச்சையாக தமிழ் மணத்தை தேடியது,
தமிழ் பேசி , நேர்மை பேசுவதை ஒப்பாத மனம்
கொண்ட கவிதை
எதார்த்த இன்பம்
//மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம் வா ///

வாலிபத்தின்
வன்மையை
வலிமையாய் சொன்ன பதிவு
அட்டகாசம்

கூடல் பாலா said...

\\\நேர்மையும்
அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள் ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...\\\
என்ன ஒரு சாபக்கேடோ தெரியவில்லை .இதுதான் நடக்கிறது ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா நல்ல கவிதை - படிக்கத்தூண்டக்கூடிய நல்ல தலைப்பு.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதி அசத்துங்கள்.

குணசேகரன்... said...

வரிகள் ரொம்பவும் ஷார்ப்...பாராட்டுக்கள்

நெல்லி. மூர்த்தி said...

"வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது ...

மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம் வா"

மரபிற்காக என போலியாக எழுதாமல் எதார்த்தத்தினை கவிதையில் வடித்திருத்திருக்கிறீர்கள். அருமை!

ஹேமா said...

உலகத்து ஊழல்மேல் நேர்மையான ஆதங்கம்.என்னதான் திட்டினாலும் திருந்தாத உலகமிது !

Yaathoramani.blogspot.com said...

பொய்மை உலகு குறித்த கோபம்
அனலாய் கொதிக்கிறது கவிதை வரிகளில்
சிறந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

jayakumar said...

yathartham...unmai ....varigalil vali therigirathu...

சரியில்ல....... said...

இயல்பு வாழ்க்கையின் வரிகள்... "நேர்மை பேசி அழிவதை ஏற்றுக்கொள்ள முடியாது " வரிகளில் முடியாமையின் வலி தைக்கிறது.. வாழ்த்துக்கள்...

சுதா SJ said...

இயல்பான வரிகள்
நியாமான கோவங்கள்
உங்கள் கவி அசத்தல் அக்கா

சுதா SJ said...

கவிதை நடை உங்களுக்கு அழகாக வருகிறது
நயமான வரிகளுடன்...
வாழ்த்துக்கள்

சுதா SJ said...

இனி உங்கள் வலைப்பக்கம் தொடர்ந்து வருவேன்

Unknown said...

நச் கவிதை சகோ!

Unknown said...

நச் கவிதை சகோ!

Admin said...

அழகிய வரிகள்...

என்ன செய்வது?????????

'பரிவை' சே.குமார் said...

சிந்திக்க வைக்கும் வரிகள்.

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் மாலதி.என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதர்க்கு நன்றி..
உங்கள் சிந்தனைகளை நான் பின்தொடர ஆரம்பித்து விட்டேன்.கூடிய விரைவில் பழைய பதிவுகளையும் படித்து விடுகிறேன்..

பிரணவன் said...

நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .

அதையே ...
வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது ...உண்மையான வரிகள். . .அருமை. . .

...αηαη∂.... said...

நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்...

மாலதி said...

வணக்கம் உங்களின் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் சிபி சாரின் வேண்டுகோள் முறையானதே எந்த படைப்பாளியும் இன்னொரு படைபாளியின் கருத்தை உள்வாங்கி கொள்ளும்போது செழுமை அடைகிறான் என்பது எமது கருத்து இருப்பினும் தலைப்பை மற்ற இயலவில்லை பொறுத்தருள்க நன்றி ......

vetha (kovaikkavi) said...

''..மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம் வா ..''..
மாற்றுச் சிந்ததைனை.வாழ்த்துகள்!
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

மாய உலகம் said...

போலித்தனமில்லா
உங்களுடைய பதிவுகளை
புரிந்து கொள்ள
முடிகிறது
நான் நாளும் தொடர்வேன்...

ரிஷபன் said...

கவிதை முழுமையும் உணர்வுகளின் வெளிப்பாடு அற்புதம்..