இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 6 August 2011

இன்றைய உலகம்?

தேவைக்கும்
 இருப்பிற்குமான
இடைவெளி  நெடியது _இது
முதலாளித்துவ
சுரண்டல்  தத்துவத்தின்
தனிச்  சிறப்பு .

கொள்ளையும்
கொள்ளை இலாபமும்
அதன்நேரிய குறிக்கோள் .

ஏழ்மையிலும்
அறியாமையிலும் மக்களை
வைத்திருந்தால்தான்
கொள்ளை இலாபம்
அடிப்பவர்கள் கோலேச்சமுடியும்என்பது
அதன்கமுக்கமான  உண்மை .

ஆள்வோருக்கும்  ஆட்டிப்படைப்போருக்கும்
மறைமுக  பிணைப்பு
தொடர்ந்தே  இருக்கும்.

ஆளும் வகுப்பு
என்றும் கடவுள்களை
தோற்றுவித்துக்  கொண்டேஇருப்பார் _ அவர்கள்
கொள்ளையடித்துக்  கொண்டேஇருக்க.

புதியவடிவில் மூடத்தனங்கள்
காட்டுத்தீயாக  பரவும்.
பட்டுப்  பீதாம்பரங்களுடன்.

உண்மை
நூலாம் படையோடு
சுருண்டுவீழ்ந்து கிடக்கும்.

தலைவிதியை  எண்ணி
அறியாமை மக்கள்
கடவுள்களை நோக்கிப்
படைஎடுப்பர்கள் .தங்கள்
பாமரத்தனத்தை  அறியாமல்.

மக்களின்உழைப்புச்
சுரண்டலில்  தேர்ந்தவர்கள்
கோவில்களில்
தொன்னையில்  வைத்துச்
சோறு படைப்பர்.

கடவுளரைக்  காணுவதில்மட்டும்
பாமரர்கள்  ஒன்றுபடுவர்.
அப்போதும்  கொள்ளைக்காரர்களுக்கு
தனிவழி.

மனிதன்  கண்டெடுத்த
கண்டு பிடிப்புகளில்
கடவுள் கண்டுபிடிப்பே
உயர்ந்தது  _இது அறிவர் .

இதன் தாக்கத்தை
பாமரர்கள்  உணராதபடி
முட்டாள்(தொலைக்காட்சி )  பெட்டிகள்
முணகிக்கொண்டே  இருக்கும் .

இதனூடே ....
முதலாளித்துவம்
கொள்ளையடித்துக்  கொண்டே
கோலேய்ச்சும் மாற்றம்
வந்துவிடாதபடி .

ஏதிலிகள்  வயிற்றுப்
பட்டினியுடன் தலைவிதியை
நொந்து  கொண்டே
போராடுவார்கள்  வயிற்றுப்பசியுடன்.

மாற்றம்  வேண்டிய
அறிவர்கள்  பாமரனின்
கண்களில் பித்தர்களாக (பிழைக்கத்  தெரியாதவர்களாக )
தோற்றமளிப்பார்கள்
தீவிரவாதிகள்  என்ற  பட்டந்தாங்கி.

ஒரு
கூட்டம்  திரைப்பட
புல்தடுக்கிப்  பயில்வான்களுக்கு
வெண் சாமரம்வீசிக்கொண்டிருக்கும்
அவனின் எச்சில்களையும்
கழிவுகளையும்  நக்கிக்கொண்டே.



உன்களின் கண்டன கனிகளை  எதிர் நோக்கி

                              மாறாத தமிழன்புடன்
                                        மாலதி .

 .  

38 comments:

Unknown said...

நல்ல படைப்பு சகோ

அத்தனையும் உண்மையே ...
ஆன்மிகம் ஒரு வியாபாரம் ஆகிவிட்டதும் உண்மை
ஆனால் கடவுள் தேவைகள் அற்ற படைப்பாளன்
நம்மிடம் உள்ள குழப்பத்தினால் தொலைத்து விட்டோம் நல்ல தேடல் இருந்தால் இறைவனை காணலாம் ..

இது என் கருத்து சகோ எதிர்ப்பு அல்ல

Unknown said...

தமிழ் மனதில் இணைத்து முதல் ஓட்டும் போட்டாச்சு சகோ

கிராமத்து காக்கை said...

உண்மை
நூலாம் படையோடு
சுருண்டுவீழ்ந்து கிடக்கும்.
அருமை

M.R said...

உண்மையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் சகோ...


தோழிக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

ஆள்வோருக்கும் ஆட்டிப்படைப்போருக்கும்
மறைமுக பிணைப்பு
தொடர்ந்தே இருக்கும்.//

கனக்கும் உண்மை.

இராஜராஜேஸ்வரி said...

தோழிக்கு இனிய

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

ஏகாதிபத்தியம்
பாமரம்
இரண்டையும் கலந்தடித்து
சிவப்புச் சிந்தனையுடன்
ஓர் விழிப்புக் கவிதை
அருமை!!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி.

கவி அழகன் said...
This comment has been removed by the author.
கவி அழகன் said...

சமூகவியலில் மாக்சிசம் முதலாளித்துவமும் ஏழைகளின் கடவுள் நம்பிக்கையும் படித்த ஜாபகம் மீண்டும் வருகிறது கவிதையை வாசிக்கும் போது

vetha (kovaikkavi) said...

''...பட்டுப் பீதாம்பரங்களுடன்.

உண்மை
நூலாம் படையோடு
சுருண்டுவீழ்ந்து கிடக்கும்.''
இந்த வரி மட்டுமல்ல அனைத்து வரிகளும். பிரமாதம்! எல்லாம் எழுதினால் இன்னொரு மறு பதிப்பாகி விடும். வாழ்த்தகள் சகோ! தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

காட்டான் said...

கூட்டம்  திரைப்பட 
புல்தடுக்கிப்  பயில்வான்களுக்கு
வெண் சாமரம்வீசிக்கொண்டிருக்கும்
அவனின் எச்சில்களையும்
கழிவுகளையும்  நக்கிக்கொண்டே. 

இத விட நல்ல சவுக்கு இல்லை சகோதரி இவங்களுக்கு அடிபோட வாழ்த்துக்கள் சகோதரி...

காட்டான் குழ போட்டான்..

Yaathoramani.blogspot.com said...

நிஜங்களை ரசித்துப் படிக்கும்படி
தரமாக இப்படித் தராமல் அதிக காரமும்
உப்பும் சேர்த்தததால்தான்
சிவப்பிலக்கியம் செல்லுபடியாகாமல் போனது
பாராட்டிப் போற்ற வேண்டிய படைப்பிது
கண்டனங்களை எப்படி எதிர் பார்த்தீர்கள்?
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கவிக்கா... said...

அருமையான படைப்பு... பாராட்டுக்கள்...!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த கவிதை. வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த கவிதை. வாழ்த்துக்கள்.

சுதா SJ said...

அசத்தலான குட் கவிதை அக்கா

சி.பி.செந்தில்குமார் said...

கவிதையின் கடைசி வரிகளில் காட்டமாக வெளிப்படுத்த நினைத்த உங்கள் கோபங்க உங்களையும் அறியாமல் கொஞ்சம் வல்கரா வந்துடுச்சுன்னு நினைக்கறேன்

K.s.s.Rajh said...

வணக்கம் இன்றுதான் முதன் முதலில்உங்கள் தளத்திற்கு வருகின்றேன்.
//தேவைக்கும்
இருப்பிற்குமான
இடைவெளி நெடியது _இது
முதலாளித்துவ
சுரண்டல் தத்துவத்தின்
தனிச் சிறப்பு .//

அருமையான வரிகள்

Unknown said...

பெங்கி ஒலிக்கும் பரட்சிக்
குரல் பாடலில் என்றும்
மங்காது ஒலிக்க வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

உண்மை
நூலாம் படையோடு
சுருண்டுவீழ்ந்து கிடக்கும்.//

இன்றைய உலகம்?"/?????

ரிஷபன் said...

உங்கள் கோபம் முதலில் பொங்கி.. பிறகு கடைசியில் சீறி.. அப்பப்பா..
இன்றைய உலகம் நல்லவர்களையும் வைத்திருக்கிறது.. அல்லவா..

உலக சினிமா ரசிகன் said...

உங்கள் கவிதை வரிகளில் சிவப்பு சிந்தனையின் கரு இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
நீங்கள் சிசிலியன் கேர்ள் படத்துக்கு விமர்சனம் எழுதினால் மிகச்சிறந்த படைப்பாக திகழும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

ஹேமா said...

உண்மைகளை உரத்துச் சொல்லியிருக்கிறீர்கள் மாலதி.இதில் ஏதேனும் ஒன்றை யாராவது இல்லையென்று சொல்லட்டும் பார்க்கலாம்.எவரால் கண்டனம் சொல்லமுடியும்.கோபத்தைக் கொட்டி எழுத்துக்களாக்கியிருக்கிறீர்கள் !

பிரணவன் said...

கடவுளரைக் காணுவதில்மட்டும்
பாமரர்கள் ஒன்றுபடுவர்.
அப்போதும் கொள்ளைக்காரர்களுக்கு
தனிவழி... உன்மைதான். மக்களுக்கு தங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை விட. கடவுள் மீதோ அல்லது அடுத்தவர்கள் மீதோ அதிகம் வைத்து விடுகின்றனர். . .மூடத்தனத்தை எடுத்துச் சொல்ல பெரியார் போல் ஒருவர் இன்று இல்லை என்பதே வ்ருத்தம். . .

ஸ்ரீராம். said...

அருமை.

மாலதி said...

@சி.பி.செந்தில்குமார்உண்மைதான் நமது சினம் சாமானியர்கள் மீதல்ல சாம்ராஜியங்கள் மீதுதானே உங்களின் கருத்திற்கு உளம் கனிந்தன் பாராட்டுகள்

ஆகுலன் said...

கவிதையின்..கருத்து நல்லது......கவிதையும் நல்லம்.....

கதம்ப உணர்வுகள் said...

நிதர்சனம் இங்கே சத்திய வரிகளாய் மிளிர்கிறது மாலதி....

அன்பு வாழ்த்துகள் நெருப்பு சாட்டை சுழற்றி சமுதாய எழுச்சி வரிகளை சிறப்பாக வடித்திட்ட கவிதை வரிகளுக்கு...

Ayyammal said...

இதன் தாக்கத்தை
பாமரர்கள் உணராதபடி
முட்டாள்(தொலைக்காட்சி ) பெட்டிகள்
முணகிக்கொண்டே இருக்கும் .

சபாஷ்!

Unknown said...

உங்கள் வார்த்தைகளில் கொஞ்சம் முரண்பாடுகள் இருந்தாலும் கூட, மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் ஒழிய வேண்டும் என்னும் உங்கள் ஆதங்கத்திற்கு தலைவணக்குகிறோம்.

Unknown said...

முட்டாள் பெட்டிகளுக்கு மனதை கொடுத்து விட்டு, புதியதாய் யோசிக்க இயலாமல் கிடக்கிறது நம் சமூகம். சரி பார்ப்போம், கொஞ்சம் பொறுத்திருந்து...நொடிப்பொழுதில் வந்திடுமா நாம் எதிர்பார்க்கும் மாற்றம்.

சித்ரவேல் - சித்திரன் said...

ஒரு
கூட்டம் திரைப்பட
புல்தடுக்கிப் பயில்வான்களுக்கு
வெண் சாமரம்வீசிக்கொண்டிருக்கும்
அவனின் எச்சில்களையும்
கழிவுகளையும் நக்கிக்கொண்டே.
- அந்தக் கூட்டத்தை நினைத்தால் பாவமாயிருக்கிறது...

சாய்ரோஸ் said...

கவிதையில் எந்த வரிகளைப்பாராட்டுவது எந்த வரிகளை விட்டுவிடுவது என்றே தெரியாததால் எதையும் தனியாகக்குறிப்பிடாமல் கவிதைக்கு தலைவணங்குகிறேன். பெரும்பாலும் உங்களவரைப்பற்றியே காதல் கவிதைகள் படைக்கும் நீங்கள் தொடர்ந்து எங்களுக்காக இதுபோன்ற சமூகப்படைப்புகளையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்...

எஸ் சக்திவேல் said...

வேறு தலைப்புக்களிலும் நன்றாகவே எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

மாலதி said...

@பாரத்... பாரதி...உங்களின் வருகைக்கும் கருத்துகளிற்கும் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி முரண்பாடு என்ன என்பதை கூறினால் சிறப்பைருந்து இருக்கும் ஏனென நாம் விமர்சனத்தை விரும்பி வேண்டுகிறவள் சொல்லுங்கள்

மாலதி said...

வருகைக்கும் கருத்துகளிற்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும்

G.M Balasubramaniam said...

அன்பின் மாலதி, நானும் பலரது வலைப்பூக்களில் வாசம் நுகர்ந்திருக்கிறேன். உணர்ந்ததை உள்ளபடி எழுத பலருக்கும் தயக்கம். அதற்கு அவர்களிடம் Courage of conviction இல்லாதிருக்கலாம். ஆனால் உங்கள் பதிவு ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது. இந்த மாதிரி நடப்புகளுக்கு காரண காரியங்கள் ஆராய்ந்து அவ்வப்போது நானும் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். என் வலையின் முகப்பில் நான் எழுதியுள்ளதை மீண்டும் பாருங்கள். தொடர நல் வாழ்த்துக்கள்.கண்டனம் தெரிவிக்கவும் தைரியம் வேண்டும்.