உன் இதழ்களில்
வெண்சுருட்டின்
நாற்றமெடுக்க வில்லை
அதைமறைக்க
வேறு எதையும்
அசைபோட வில்லை.
உன் வியர்வையிலும்
சாராய நெடியில்லை
இரத்தத்திலும் தான்.
உன் கொள்கையிலும்
கோணலில்லை.
உன் உணவுத்திட்டத்திலும்
மரக்கறி உணவே.
என் வாழ்னாள்
முழுமையும்
மகிழ்வு நிறைந்திட
இதுபோதும்
என் கடுந்தவத்தின்
காரணமும் இதுதான்
அன்பனே ....
32 comments:
இனிய கவிதை வாழ்த்துக்கள்......
நல்ல கவிதை .வாழ்த்துக்கள்.
இப்படி தான் நானும், ஆனால் என் மனைவி நீ ஒரு மிருகம் என்கிறாள்...
எல்லாப் பெண்களின் மன நிலைதான் இந்த கவிதை...!!!!
என் கடுந்தவத்தின்
காரணமும் இதுதான்
அன்பனே ..../
வரம் பெற்ற தவம் அருமை!
சூப்பர் கவிதை
இன்று என் வலையில்
கருத்துரைகளை சுருக்க விரிக்க
கடும் தவத்தின் காரணமும் அதனால் கிடைத்த வரமாகவும்
இதைக் கொள்ளலாம்
எல்லா பெண்கள் விரும்பும் வரமும் இதுதான்
ஆனால் பெரும்பாலோருக்கு இது வாய்ப்பதில்லை
என்பதுதான் கசப்பான உண்மை
மனம் கவர்ந்த் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
அருமையான கவிதை
பகிர்விற்க்கு நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
அருமை
கவிதை ரெம்ப நல்லா இருக்கு.
கடுந்தவம் கைகூடினால்
மகிழ்ச்சியே!
அருமை
தவத்தின் பலனா... கவிதை கலக்கல்
அருமையான கவிதை.
அழகான வரிகள்.
கொடுத்து வைத்தவர் தான்.
பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
புகையும் மதுவுமில்லாத மனிதன் இங்கு குறைவுதான், அளவற்ற அன்பும், அளவோடு எல்லாமும் இருந்தால் வாழ்க்கை இன்பமாக இருக்கும். . .கவிதை அருமை. . .
அருமையான கவிதை..... பிரமாதம்.
நல்லொதொரு ஒரு கருத்து உள்ளது இந்த இனிமையான கவிதையில்.
நடுநாயகமாய் பெண்களின் சார்பில்
வைர வரிகளால் எழுதப்பட்ட கவிதை.
அருமை
வணக்கம் சகோதரி.. உங்கள் கவிதை அருமையாக உள்ளது ஆனா என்னைப்பிடிச்சு கதற கதற கும்மியதுபோல் இருக்குங்க ஹி ஹி ஹி...!!!??
தம7
நல்லதொரு தவம்...நல்லதொரு கவிதை தோழி...
கவிதை அருமை மகளே!
இளமை ஊஞ்சலாட
எழுதிய சொற்களும் வரிகளும்
பொருள் பொதிந்தவை
வாழ்ப அம்மா!
புலவர் சா இராமாநுசம்
மனதின் குரலாய்
கவிதை
கேட்கிறது மாலதி..
அருமை..
ஆகா அருமை சகோ
அழகான கவிதை சகோதரி
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
என்ன எளிமையான எதிர்பார்ப்பு!
அருமை மாலதி!
இந்த எளிமை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு மாலதி....
எண்ணங்களும் எளிமை
எதிர்ப்பார்ப்புகளும் எளிமை
அழகிய மனநிலை இதுவே என்றும் நிலைக்கட்டும் என்றும் மாலதி....
அன்பு வாழ்த்துகள்பா...
கவிதை அருமை வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...........
தமிழ்மணம் 13
சிறப்பான கவிதை மாலதி. வாழ்த்துக்கள்.
என்னைப் போலவே கொடுத்து வைத்தவர் இக் கவிதைக்காரர். அத்தனை தொல்லைகளுமற்றவர் மகிழ்ச்சி வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
தங்கள் கவிதைகள் தூய்மையான ஆழமான வரிகள் மிகவும் அருமை.தங்க்லீஷ் தட்டச்சு மூலம் எழுத்து பிழைகள் ஏராளம்.அதை மட்டும் சரி செய்தால் போதுமானது.மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Post a Comment