எங்களின் பழமையையும்
காப்பதில்லை
மொழியையும் போற்றுவதில்லை .
மலையாளப் புத்தாண்டு
தெலுங்குப் புத்தாண்டு
சமற்கிருத புத்தாண்டு
ஆங்கிலப் புத்தாண்டு
எல்லாப் புத்தாண்டையும்
மானமில்லாமல் கொண்டாடுவோம்
கண்மூடித்தனமாய் வணங்குவோம்.
எங்களின் பாரம்பரியத்தைச்
சொன்னால் புறக்கணிப்போம் .
பல்லாயிரத்தாண்டாய்
""தை "" முதல்நாளே
தமிழர் புத்தாண்டு
என்றார் பாவேந்தர் .
உண்மையை ஏற்போமா ?
இதில் அறிவியலுமுண்டு
கதிரவன் தென்மேற்கு
திசையிலிருந்து
வடமேற்கு திசைநோக்கி
சாயத் தொடங்கும்
காலமான சுறவத் (தை )
திங்களே ஆண்டின்
தொடக்கம் அறிஞ்சர்
சொன்னது .
தமிழரின் தனிப்
பெரும் அறிவியலை
நிலைநிறுத்தும் போது
தமிழன் உயர்வான்
சிந்திப்போமா ?
இளந்தமிழா,கண்விழிப்பாய்
இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை
பழம் பெருமை
அனைத்தையும் நீ
படைப்பாய்! இந்நாள்
என்றார் பாவேந்தர்
சிந்திப்போமா ?
புதிய வரலாறை
படைப்போமா ?
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படம் , தமிழீழ வரைபடம் , விடுதலைப் புலிகளின் மலர் விடுதலைப் புலிகளின் கொடி ஆகியவற்றை அஞ்சல் தலையாக பிரான்சு நாடு வெளியிட்டு உள்ளது அந்நாட்டை வணங்கு வோம் பாராட்டி மகிழ்வோம் .
27 comments:
சரிதான்...ஆங்கிலப் புத்தாண்டு சொல்ற எல்லாருக்கும் நல்ல ஒரு அடி. !
காதலர் தினம் கொண்டாடும் நாம்..
நம் மொழிக்கு உண்டான
பண்பாடுகளை பேசுகையில்
கொஞ்சம் வெறுப்பாக தான்
ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
சிறந்த சிந்தனை
தமிழா உன்னை நீ அறிவாயா?
தமிழரின் தனிப்
பெரும் அறிவியலை
நிலை நிறுத்துவோம்.
புதிய வரலாறு படைப்போம்.
கொஞ்சம் வலித்தது சகோதரி..அருமை...
கவிதை வலிக்க செய்தாலும் உண்மையையும் உறைக்க செய்தது அக்கா... ;(
சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் மாலதி..
இவர்கள் நாவில் தமிழ் தற்கொலை செய்துகொள்ளும் காணொளியைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2011/12/blog-post_28.html
தமிழர்களிடம் தான் உண்டு. ஆளுக்கொரு நாள் (தை, சித்திரை) புத்தாண்டு கொண்டாடும் அவலம்.
எல்லாம் கொண்டாடி,
வந்தாரை வாழ வைத்து நாம் ஒன்றும் இல்லாமல் போனதுதான் மிச்சம்..
வலிக்கத்தான் செய்கிறது மாலதி...!!!
முன்கூட்டிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்
செமையா வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கீங்க!!!!
அன்பிற்கினிய தோழி! எது நாம் கொண்டாட வேண்டிய புத்தாண்டு? அது என்னாளில் வருகிறது? என்பது பற்றிய, உண்மையான தமிழ் புத்தாண்டை மிகக்கடுமையாக வலியுறுத்தும் விதமாக, நான் இடுகை ஒன்றை வரும் தைக்கு சில நாட்களுக்கு முன்பே வெளியிட வேண்டுமென்றிருந்தேன். ஆனால், அதற்க்கு முன்பாகவே தாங்கள் அப்பணியை செய்துவிட்டீர்கள்! தாங்கள் ஆற்றும் தமிழ் சேவையை நினைத்து பெருமிதமடைகிறேன் தோழி!
புதிய வரலாறு படைப்போம்..பிரான்சு நாட்டுக்கு நன்றி சொல்லுவோம்..
பிரான்ஸ் நாட்டில் தமிழீழம் குறித்த தபால் தலை வெளியீட்டில் இலங்கை அரசு பிரச்சனையை கிளப்பியுள்ளது. பார்க்கலாம் என்னவாய் முடிகிறதென்று.
தபால் துறையும் தங்கள் அனுமதியின்றி இது நடந்ததாய் நம்பமுடியாத ஒரு காரணகாரியத்தொடர்பாய் பேசுகிறது.
சிந்திப்போமா ?
புதிய வரலாறை
படைப்போமா ?
கவிதை என் கன்னத்திலும் அறைந்தது.
ஃப்ரான்ஸ் நாட்டிற்கு எனது நன்றிகளும் உரித்தாகட்டும்.
உண்மைதான். நம் பாரம்பரியம் நமக்கு இன்னும் புரியவில்லைதான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அறிவியல் ஆயினும்
புரட்சிக் கவி கூறினும்
அந்நாள்
உழைப்பின் திருநாள்
உழுதவன் மகிழும்நாள்
அதையே கொண்டாடுவோம்
வருடத்தின் முதல் நாளொன
@வே.சுப்ரமணியன்.நான் மேலோட்டமாக கொடுத்து இருக்கிறேன் நீங்கள் பருண்மையான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .
@MANO நாஞ்சில் மனோயாரின் உள்ளத்தையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பதிவு செய்யவில்லை உண்மையில் என்னுடைய தமிழினம் விழிக்க வேண்டும் ஒன்று பட வேண்டும் என்பது எனது பேராவல்
பகிர்வுக்கு நன்றி!
ரசித்து மகிழ்ந்தேன்.
புத்தாண்டு நல் வாழ்த்து. சிந்தனைக் கவிதை உள்வாங்கினேன் சகோதரி. நல்லது நடக்கட்டும் என்று எண்ணுவோம். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
அரிய கருத்துக்களை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்
Post a Comment