இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 27 December 2011

நாங்கள் தமிழர்கள்

நாங்கள்  சிலந்தி
வலைகளைக் கண்டே
அச்சப்படுகிறோம்
சிறைக்கதவம்  பற்றி
சொல்வானேன்.

நாங்கள்
கூட்டாக  வாழ்வதைப்
பற்றி  கனவு
காண்பதில்லை .

எதன்
பொருட்டும் ஒன்றுபடுவது
இல்லை .

நாங்கள்
ஒன்றானால்
பகைவன்
அச்சம் கொள்வானே .

எங்கள்
தலைவர்கள்  வளமோடு
வாழ்வதற்கே
நாங்கள்  வறுமையில்
வாடுகிறோம்.

 நாங்கள்
சிதைந்தே  கிடைப்பது
எங்களுக்கு பல
தலைவர்கள்
வேண்டும்  என்பதால்தான் .

ஒருவர் குழிபறிப்பார்

ஒருவர் கொள்கைபேசுவார்
ஒருவர் மேடையில்
வீரங் காட்டுவார்.

ஆக எல்லோருமே
எங்களின்  ஒட்டு
மொத்த  பகைவர்களுக்கே
பல்லக்கு  தூக்குவார் .

நாங்கள்
சிதறிக்  கிடப்பதொடலாமால்
சிந்திக்கவும்  செய்வதில்லை .

சிந்திப்பதை  எங்கள்
தலைவர்களிடம்  தத்து
கொடுத்துவிட்டோம் .

அப்போதுதானே 
நாங்கள்  சுமைகளைமட்டுமே
தூக்க  இயலும் ?          எமது முந்தய  பதிவு குறித்து  சிலர்  நித்தய  கல்யாணி  பற்றி மருத்துவ  குறிப்புகளை  எழுதச்  சொன்னார்கள்  மருத்துவக்  குறிப்புகளை  மருத்துவர்கள்  மட்டுமே  எழுதப் படவேண்டும்  ஒரு மூலிகைக்கு  பல  குணம்  உண்டு  முறையான  மருத்துவர்தான்  அதனை முறையாக  வெளிப்படுத்துவார் .ஒரு மூலிகையின் சிறப்புகளை  மட்டுமே எழுதுவது  படி (காபி ) எடுத்தல் போன்றதாக இருக்கும்  ஆனால் முறையான மருத்துவர்  எல்லா  செய்திகளையும் உள்ளடக்கி  நல்லது  கெட்டது அனைத்தையும்  கூறி தெளிவாக்குவார்  என்பதால் அந்த  கோரிக்கையை  நிறைவேற்றாமல்  மருத்துவர்களிடம்  விட்டு விடுகிறேன் .

  ௧. polurdhayanithi.blogspot.com
  ௨. தோழியின்   சித்தர்கள்  இராஜ்ஜியம்  போன்றோரின்  வலைபூக்களை  கணாலாம்

16 comments:

மதுமதி said...

இன்றைய தம்ழர்களின் மீதான கோபம் கவிதையில் வெளிப்படுகிறது..தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் புவியை கூட புரட்டலாம்தான் என்ன செய்வது சேர மறுக்கிறார்களே..அருமை வாழ்த்துகள்..

த.ம-1


அன்போடு அழைக்கிறேன்..

நாட்கள் போதவில்லை

MANO நாஞ்சில் மனோ said...

சாடல், வேதனை, கண்ணீர், கோபம, துன்பம், இயலாமை கலந்து கட்டி கவிதை சொல்கிறது, மனதில் வலி கொள்ளவைக்கிறது...!!!

ஹேமா said...

மாலதி....அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இதுதான் தமிழனென்று சில அடிப்படைப் பறைதல் சிறப்பு.ஈழத்தோடு இந்தக் கவிதையைப் பொருத்திப் பாருங்கள்.கச்சிதமாகப் பொருந்துகிறதா இல்லையா !

Ramani said...

மிகச் சரி
சிந்தனைச் சுமை கூட சுமக்க திராணியும்
மனபலமும் முதுகெலும்பும் இல்லாமல்தான்
போய்விட்டோம்
சொல்லவேண்டியதை சொல்லிப் போனவிதம் அருமை
வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

காலம்காலமாக நாம் இருக்கும் நிலையை
நிலைக்கண்ணாடி போல காண்பித்துவிட்டீர்கள் சகோதரி.
உள்ளக்குமுறல்கள் மென்மையாக ஆணித்தரமாக
ஒலிக்கிறது கவிதையில்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை...அருமை...
வாழ்த்துக்கள்.

Joker said...

யார் நம் சகோதரியா இப்படி எழுதியது.
ஏன் சகோதரி இவ்வளவு விரக்தி.
மாறும் அதற்கு சிறிது காலம் ஆகும்.
மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும்
தமிழ் உணர்வுகளில் நானும்....
என் வலையில் சிறு மன பகிர்வு
http://dooritwilldo.blogspot.com/2011/10/blog-post_8478.html

Joker said...

கடந்த சில நாட்களாக
தங்கள் பதிவுகளுக்காக
காத்திருந்து இப்போது
"நாங்கள் தமிழர்கள்"
நன்றி.நல்லாருக்கு.
http://dooritwilldo.blogspot.com/2011/12/blog-post_27.html

துஷ்யந்தன் said...

எங்களை பற்றி புட்டு புட்டு வைக்கிறீங்களே மாலதி அக்கா...
நான் என்னத்தை சொல்லுவேன்....
நாங்கள் அப்படித்தான்...
மாறவும் மாட்டோம்
மாற முயற்சிக்கவும் மாட்டோம்......
இது எங்கள் சாபம் போல் :(

ராஜி said...

நானும் தமிழந்தான்

அ. வேல்முருகன் said...

பெரும்பான்மை
தமிழர்கள்
ஆம்
அப்படிதான்
என நினைத்து
எழுதியதோ

மன்னிக்கவும்
சிறுபான்மை
சில்லரைக்கள்
செய்திகளில் வருவதால்
சினந்து எழுதியதாக
எடுத்துக் கொள்கிறேன்

பெரும்பான்மை
எதுமற்றவர்கள்
எழுவதற்கு தயாரனவர்கள்


அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தலைமைகள் தோன்றும் போதே
சரி செய்யப்படுகிறார்கள் அல்லது
சதி செய்து காணாமல் போக்கப்படுகிறார்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி நானும் தமிழந்தான்

சத்ரியன் said...

தலைப்பின் தனமையையும், கவிதையின் கருவையும் , ‘கோமாளி’யின் புகைப்படமே தெளிவாய் புட்டுப்புட்டு வைக்கிறது.

உதயசூரியன் said...

"சிலந்தி வலைகளைக் கண்டே பயப்படுகிறோம்...
சிறைக்கதவுகளைப் பற்றிச்
சொல்லவே வேண்டியதில்லை!"

--அற்பதமான, அழகான வரிகள்.

தமிழர்கள், நாம் எழுதுவதற்கு நிறையத் தீனி போடுகிறார்கள்... என்பதைதவிரச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

--உதயசூரியன்.

RADIO FOR FREE VOICES நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின்‌ குரல் said...

நாங்கள் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம், அது தொடர்பான உங்கள் காத்திரமான கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

RADIO FOR FREE VOICES

நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின்‌ குரல்

மாலதி said...

@ஹேமாஉங்களின் கருத்து முற்றிலும் உண்மை என்பது மட்டுமல்லாமல் ஈழம் மட்டுமல்லாது இங்கு தமிழகமும் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல அங்கு வரதராசபெருமாள் என்றலால் இங்கு முத்தமிழரிஞ்ச்ர் என கூறிக்கொள்ளும் கருணாநிதி அங்கு கருணா என்றால் இங்கு கங்கரசு தமிழர்களை முற்றாக ஒழிக்கவே செய்கிறார்கள் தமிழன் ஒன்று படவேண்டிய நேரமிது தமிழகத்திலும் , ஈழத்திலும் பல்வேறு வகையில் பிரிந்துகிடப்பது தமிழன் அழிவிற்கே வழிவகுக்கும்.