இதோ ...
மரண சாசனம் வரைகின்றேன்
என்
சடலத்தின் மேல்
பூக்களும் வேண்டாம்
கண்ணீர்த் துளிகளும்
வேண்டாம் .
நான்
பிறப்பெடுத் ததின்
நோக்கமே
மரித்துப் போவதற்குத்தான் .
நான்
எதன்பொருட்டும்
கண்ணீர் சிந்தியதில்லை .
என்
இதயம் இரும்பும்
இல்லை .
எனது
இறப்பிற்கு
சரவெடியும் வேண்டாம்
சாப்பறையும் வேண்டாம் .
பறவைகள்
அச்சமின்றி வாழட்டும்
சூழல் நலன்
காக்கப் படட்டும் .
என்
கண்களும் ...
இதயமும் ...
உடலுறுப்புகளும்
அறுத்தெடுக்கப் படட்டும் .
செப்படி வித்தைதான் .
இருந்து விட்டுபோகட்டும்.
யாருக்கேனும்
என்னுடல் உறுப்புகள்
பயன் படட்டும்.
எனது ...
கல்லறையில்
கல்லறைப்பூக்கள்
(நித்யகல்யாணி ) மலரட்டும்.
யாரேனும் ஒரு
புற்று நோயாளி
நலன் பெறட்டும்.
என்
மரணத்திலேனும்
சிலர் பாடம்
படிக்கட்டும் .
மரித்துப் போன
நிலையிலும் நான்
மற்றவர்களுக்காய்
வாழத் துடிக்கிறேன் .
மரண சாசனம்
வரைகின்.......
33 comments:
மகத்தான மரண சாசனம்.
நித்யகல்யாணி - யின் பயன்கள் பற்றி நீங்கள் ஒரு பதிவெழுதலாமே!
/நித்யகல்யாணி புற்று நோய்க்கு மிக சிறந்த மருந்து/
மிக அரிதான செய்தி.நித்ய கல்யாணி செடியின் வேர்கள் ஏற்றுமதி ஆவதை அறிவேன், ஆனால் அதன் மூலிகை குணம் அறிந்ததில்லை. நன்றி.
மரணத்திலும் மானுடம் தன்னால் பயனுற வேண்டும் என்பது நல்லதொரு சிந்தனை
வாழ்த்துக்கள்
நல்ல கருத்துக்களை கொண்ட ஒரு கவிதை அருமை, நித்ய கல்யாணி இப்பொழுதுதான் கேள்விபடுகீறேன், மேலதிக தகவல்கள் கிடைக்குமா?
போன மாதம்தான் புற்று நோய் என் தங்கையை தின்று தீர்த்தது சகோதரி...
அருமை.
மரண சாசனத்தின் மூலம் அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
மரண சாசனம்!
ஓ... சாசனம் உருக்கம்.
நித்யகல்யாணி// பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.
அழுத்தமான ஆழமான வரிகள்...
வாழ்த்துக்கள் சகோதரி..
செத்தும் கொடுத்தான் சீதக்காதி .....
என்று வாழவிரும்பும்
குணநலன்கள் அருமை.
உடலின் அத்தனை பாகங்களும்
என் இறப்பிற்கு பின் பயன்படட்டும்..
என் இறப்பினில் இரைச்சலை
ஏற்படுத்தாதீர்கள்
பறவை இனம் இரைச்சலால்
தன் இயல் நிலை மாறிவிடக்கூடாது..
என்ன ஒரு சிந்தனை சகோதரி..
வாழ்த்துவதற்கில்லை.....
சிரம் தாழ்கிறேன்......
உலர்ந்த வார்த்தைகள் கோர்த்து உருக்கமாக படைத்த கவிதை.... மனசை ஏதோ செய்கிறது கவிதை.... :(
வாழுகையில் மட்டும் அல்ல
இறந்தபின்னும் ஆர்பாட்டமின்றி
அடுத்தவர்களுக்காகவே வாழ எண்ணும்
உயர்ந்த லட்சிய்ம பாடல் வரிகளில் பளிச்சிடுகிறது
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
த.ம 2
மரணத்திற்கு அஞ்சாதவன் அனைத்தையும் கடந்தவனாக பார்க்கப்படுகிறான். (தற்கொலை விதிவிலக்கு) இறப்பை பதிவு செய்த விதம் அருமை.
நன்றி.
நான் ஏற்கனவே எழுதி வைத்துவிட்டேன் மாலதி.நித்ய கல்யாணி இதுதானா !
//நித்யகல்யாணி புற்று நோய்க்கு மிக சிறந்த மருந்து//
அரிய தகவல்.
அழகான கவிதை.நன்றி பகிர்வுக்கு.
/நித்யகல்யாணி புற்று நோய்க்கு மிக சிறந்த மருந்து/
>>
நெஞ்சை கனக்க வைத்த கவி வழியே ஒரு செய்தியை பெற்றேன். வாழ்த்துக்கள் தங்காய்
த ம 3
வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
கவிதையுடன் மருத்துவம்.. அருமை.
அருமை.
நல்ல விசயம் உள்ள சாசனம் ,அருமையான மருந்து டிப்ஸ்
என் முதல் வருகை..மரண சாசனத்தை அருமையாக சொல்லிவிட்டீர்கள்..வாழ்த்துகள்..
அருமையான படைப்பு
வாழ்வாங்கு வையத்தில் வாழுபவர்கள் நெஞ்சில்தான்
இத்தனை உயர்ந்த சிந்தனை தோன்றும்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமை சகோதரி. இக்குறிப்பே என் கைப்பையில் எப்போதோ வைக்கப்பட்டுள்ளது. அதற்க்கான அனுமதியுடன் தான் நான் நடமாடுகின்றேன். நாம் இறந்தும் நமது உடல் பிறர்க்குப் பயன்பட வேண்டும். இதுபற்றி ஒரு இலக்கியமும் எழுதியிருந்தேன். ஆனால் இலங்கையில் பிறந்த எமது இரத்தத்தை தானம் செய்வதற்கு மட்டும் இந்நாடு அனுமதி தராது என்னும் உண்மையையும் இவ்விடத்தில் அறியத்தருகின்றேன். பல தடவை முயற்சித்து தோல்வி கண்டுள்ளேன் . நான் மட்டுமல்ல இன்னும் சிலர்கூட. நல்ல சிந்தனை வாழ்த்துகள்
மிக அருமை நித்தியகல்யாணியின் சிறப்பும் அருமை....
மரண சாசனத்தில்
உடலுறுப்பு தானம்
அருமை சகோ!
நித்ய கல்யாணி ...நல்ல தகவல்..நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்
மருத்துவமும் , மனிதநேயமும் கூடிய மகத்தான சாசனம் ...!
ஃஃஃபறவைகள் அச்சமின்றி வாழட்டும்ஃஃஃ
இப்படி ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொருத்தரும் பொது நோக்கம் கொண்டால் எம் புவி எப்படி வளம்பெறும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
வாழும்போது வீரத்துடிப்பு , வாழ்ந்து மறைந்த பின்னும்
தானத் துடிப்பு யாருக்கு வரும் ? அருமை தோழி .
இப்போதான் ஒருவழியாய் கண் தான அடையாள அட்டைக்கு
விண்ணப்பித்திருக்கிறேன். பிற்காலத்தில் உடல்தானம் பற்றியும்
கண்டிப்பாக யோசிப்பேன். நித்யகல்யாணி தகவலுக்கு நன்றி.
இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.
ஆழமான வரிகள் நன்றாக உள்ளது..
Post a Comment