தரணி போற்றிடும்
தமிழர்க் கலைகள்
விண்ணை முட்டி
உயர்ந்து நின்றவை
கட்டிடக் கலைகள்
வானவியல் கலைகள்
அன்றே நம்மவர்
ஆய்ந்து சொன்ன
அணுவைப் பிளந்திடும்
அறிவியல் படைப்புகள் .
அறிவில் வேர்பிடித்து
அறிவியியலில் உயர்ந்த
தமிழரின்
சித்த மருத்துவம் ஆக
ஆய கலைகள்
அறுபத்து நான்கும்
விண்ணை முட்ட
உயர்ந்து நின்றவை .
நிலைத்தது நின்ற
நீரியல் மேலாண்மை
கனவாய் மாறிய
வேளாண் கலைகள்
சிந்து வெளியில்
சிறந் தோங்கிய
வாழ்வியல் முறைகள் .
எண்ணற்ற கலைகள்
முடமாகிப் போனது
இதனல் தமிழர்
வாழ்வும்விடை தெரியமால்
போனது .
திக்கு தெரியாகாட்டில்
வழிதேடிப் பயணிக்கிறான் .
கண்களைக் கட்டிக்
காட்டில் பயணிக்கிறான்
விட்டில் பூச்சியாய்
வீழ்ந்து மடிகிறான் .
நம் கலைகளை
வளர்க்க நாமும்
உயர்வோம் நாடும்
உயரும் .
நம்கலைகளை வளர்த்து
விண்ணை முட்டி
உயர்ந்து நிற்ப்போம் .
17 comments:
கலைகளை வளர்ப்போம் எமது இருப்பினை உறுதிப்படுத்துவோம்
நம் கலைகளை
வளர்க்க நாமும்
உயர்வோம் நாடும்
உயரும் .
நம்கலைகளை வளர்த்து
விண்ணை முட்டி
உயர்ந்து நிற்ப்போம் .
அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..
நம் கலைகளை
வளர்க்க நாமும்
உயர்வோம் நாடும்
உயரும் .
நம்கலைகளை வளர்த்து
விண்ணை முட்டி
உயர்ந்து நிற்ப்போம்
//.
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
நம் அடையாளங்களே நமது வரலாறு.... மறந்திடலாகாது... அருமை..
எண்ணற்ற கலைகள் முடமாகிப்போனது..சரியாகச் சொன்னீர்கள்..
வாழ்த்துகள்..
த.ம-1
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)
நாம் உலகினுக்கு கற்றுவித்த கலைகள்
ஏராளம் ஏராளம்...
அவற்றின் மகிமைகளை உலகத்தோன் அறிந்து கொண்டான்
ஆனால் நாம் இன்னும் அக்கலைகளுக்கான
அங்கீகாரம் கொடுக்க
மறுத்தே வருகிறோம். முதலில் கலைகளை
புரிந்துகொண்டு அவைகளை வாழ்விக்க வேண்டும்
கலைகள் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்
பிரதிபலிப்பவை. அவைகள் காக்கப் பட வேண்டும்.
அருமையான கவிதை சகோதரி.
நம்ம பாரம்பரியத்தை நாம் மறந்து ரொம்ப நாளாச்சுன்னு எனக்கு ரொம்ப வருத்தம். பாரம்பர்ய கலைகளை மட்டுமா நாம் விட்டு வைப்போம்?
என் நீண்ட நாள் ஏக்கத்தினை தீர்த்து வைத்துவிட்டது உங்க கவிதை.
arumayana pathivi tholar
நம் கலைகளின் அருமைதெரிந்து எழுதியிருக்கிறீர்கள் மாலதி.எத்தனயோ எம் கலைகள் இல்லாமலே போய்விட்டன.வில்லுப்பாட்டு,கூத்து,
பறை போன்றன மறைந்துகொண்டு வருகின்றன !
கலைகளை மறந்த கவலையின்றி
கடமைக்கு வாழும் மனிதர்தாம் நாம்!
காலத்தே வந்த கவிதை- தன்
கடமையைச் செய்யும்.
காக்க வேண்டும்
காப்போம்
உண்மைதான் சகோதரி பல கலைகள் இப்பொழுது மறைந்து போனது கவலைக்குறிய விசயம் தான்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
நலம்தானே சகோதரி?
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்...
வணக்கம் சகோதரி நலமா?
புது வருட வாழ்த்துக்கள்..
பண்டைய தமிழர் கலைகள் அழிந்து வருவது கவலைஅளிக்கும் விடயம்தான்.. வசந்த மண்டபம் போன்ற பதிவர்கள் இன்னும் விடாது அதை நிலை நிறுத்த பாடு படுவது பாராட்டுக்குரியது..!!
கலைகளை காப்பது நமது கலாச்சாரத்தை காக்கும் செயல்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்
அழகான கருத்துக்கள்.
எழுச்சி ஊட்டும் கவிதை.
வாழ்த்துக்கள்.
Post a Comment