உன்கண்களை ...
நேரடியாக சந்திக்கும்
துணிவு எனக்கில்லை .
காதலில் வீழ்ந்து
விடக்கூடாது என்பதான
என் எண்ணம்
சிதைந்து கொண்டே
வருகிறது .
கருக்கொண்ட மேகம்
போல்... என்கண்கள்
காதலை காட்டிக்
கொடுத்துவிடுமோ
என அச்சப்படுகிறேன் .
என் கடுமையான
பணிச்சுமையின்
ஊடாகவும் உன்னை
நினைக்காமல்
இருக்கமுடியவில்லை .
நாளும் என்னுள்ளம்
உன்னைவிட்டு
வெகுதொலைவு
வந்துவிட்டதாய்
குமுறுகிறது .
அப்போதுதான் ...நீ ...
என்னுள் குடிகொண்டு
விட்டதை
நான் அறிந்து கொண்டேன் .
நம் வாழ்வில்
மலரைவிட மென்மையாகவே
உன்னுடனான தொடர்புகள்
இருக்கும் .
உன் வெற்றியின்
பாதை நோக்கியே
என்னுள்ளம்
இனி சிந்திக்கும் .
உனது ...
வெற்றியின் உச்சத்திற்காய்
ஏணிப் படிகாளாய் ...
என்னுடலும் உழைக்கும் .
உனதான ...
வலிகளை இனி
என்னிடம் சேர்த்துவிடு
இன்பங்களை மட்டுமே
அணிந்துகொள் .
இப்போதெல்லாம் ...
உன்நினைவு தரும்
சுகத்திற்காகவே நான்
தனிமையை
விரும்புகிறேன்.
இரும்பு இதயமா
உனக்கு ? என்
காதலை ஏற்ப்பதில்
என்னதயக்கம் .
நம்பிக்கை ...
துரோகம்
இழைத்துவிட்டதாய்
இந்த சமூகம்
உன்னை குற்றம் சாட்டும்
என அச்சப்படலாம் .
காந்த விசை
போன்றதான
என் காதலுக்கு
பச்சைக் கொடிகாட்டு .
இந்த கவிதை கூட ஒரு விதத்தில் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதுதான் . காரணம் இது நமது கவிதை இல்லை . நம்பிக்கையோடு படிக்க கொடுத்ததை பதிவேற்றம் செய்துவிட்டேன் .
பொறுத்துக் கொள்வீர்கள்
என்ற நம்பிக்கையுடன் ...
மாலதி .
நேரடியாக சந்திக்கும்
துணிவு எனக்கில்லை .
காதலில் வீழ்ந்து
விடக்கூடாது என்பதான
என் எண்ணம்
சிதைந்து கொண்டே
வருகிறது .
கருக்கொண்ட மேகம்
போல்... என்கண்கள்
காதலை காட்டிக்
கொடுத்துவிடுமோ
என அச்சப்படுகிறேன் .
என் கடுமையான
பணிச்சுமையின்
ஊடாகவும் உன்னை
நினைக்காமல்
இருக்கமுடியவில்லை .
நாளும் என்னுள்ளம்
உன்னைவிட்டு
வெகுதொலைவு
வந்துவிட்டதாய்
குமுறுகிறது .
அப்போதுதான் ...நீ ...
என்னுள் குடிகொண்டு
விட்டதை
நான் அறிந்து கொண்டேன் .
நம் வாழ்வில்
மலரைவிட மென்மையாகவே
உன்னுடனான தொடர்புகள்
இருக்கும் .
உன் வெற்றியின்
பாதை நோக்கியே
என்னுள்ளம்
இனி சிந்திக்கும் .
உனது ...
வெற்றியின் உச்சத்திற்காய்
ஏணிப் படிகாளாய் ...
என்னுடலும் உழைக்கும் .
உனதான ...
வலிகளை இனி
என்னிடம் சேர்த்துவிடு
இன்பங்களை மட்டுமே
அணிந்துகொள் .
இப்போதெல்லாம் ...
உன்நினைவு தரும்
சுகத்திற்காகவே நான்
தனிமையை
விரும்புகிறேன்.
இரும்பு இதயமா
உனக்கு ? என்
காதலை ஏற்ப்பதில்
என்னதயக்கம் .
நம்பிக்கை ...
துரோகம்
இழைத்துவிட்டதாய்
இந்த சமூகம்
உன்னை குற்றம் சாட்டும்
என அச்சப்படலாம் .
காந்த விசை
போன்றதான
என் காதலுக்கு
பச்சைக் கொடிகாட்டு .
இந்த கவிதை கூட ஒரு விதத்தில் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதுதான் . காரணம் இது நமது கவிதை இல்லை . நம்பிக்கையோடு படிக்க கொடுத்ததை பதிவேற்றம் செய்துவிட்டேன் .
பொறுத்துக் கொள்வீர்கள்
என்ற நம்பிக்கையுடன் ...
மாலதி .
17 comments:
கொடி பறக்கட்டும்.
நக்கீரர் போல எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டிய சத்திரியன் அவர்கட்கு நன்றியும் பாராட்டும்
கவிதையில் காதல் கொடி கட்டிப் பறக்கிறது.
எழுதியவருக்கு வாழ்த்துக்கள்... ஒருவர் மேல் கொண்ட காதலும், அன்பும் உண்மையானதாயின் அது நிட்சயம் நிறைவேறும்.
அழகான கவிதை தான் !
படித்து பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..
தூரம் கூடக்கூடத்தான் காதல் நெருங்கி நிற்கும்.அனுபவம் அற்புதம் மாலதி !
superb!!!!!!!!!
நல்ல காதல் கவிதை,படித்து முடித்ததும் ஒருவித நெகிழ்வு தருகிறது.
உணர வைய்த்த வரிகள் நிச்சயம் உள்ளிருந்துதான் பிரசவமாகி இருக்கும் .
நல்ல கவிதையை நாலுபேர் படிக்கட்டுமே. இது நம்பிக்கை துரோகம் அல்ல.
மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி
எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.விடைபெறுகிறேன்.
http://dooritwilldo.blogspot.in/2012/12/blog-post_26.html
எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.விடைபெறுகிறேன்.
http://dooritwilldo.blogspot.in/2012/12/blog-post_26.html
அன்பு உள்ளமே பணிவாய் வணங்குகிறேன் உங்கள் போன்றோரின் வாழ்த்து களினாலும் விமர்சனங்களினாலும் வளர்ந்தவள் என்ற செருக்கு எனக்குண்டு ... அருள் கூர்ந்து நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் இந்த பதிவு உலகத்தில் ராஜாளிப் பறவையாய் உயர உயர விண்ணை முட்டும் அளவிற்கு பறக்க வேண்டும் அருள் கூர்ந்து தொடருங்கள் ...... பணிவுடன்
மாலதி
நல்ல சிந்தனை நயமான காதல் ,அருமை
வணக்கம்!
நெஞ்சை அள்ளும் வரிகளினால்
நேயத் தமிழை விளைத்துள்ளீா்!
பஞ்சைப் போன்றே பறக்கின்றேன்
பாட்டைப் படித்த மயக்கத்தில்!
கொஞ்சும் காதல் கொடியேற்றிக்
கோல வாழ்வை அடைந்திடுக!
மிஞ்ச வேண்டி வாழ்த்துகிறேன்
மின்னும் வலையின் உலகினிலே!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
Post a Comment