இரண்டும் ஒன்றுதான் . .
இரண்டும் ஒன்றுதான் . .
உன் கட்டளைப்படியே
தொடர்பு எல்லைக்கு
வெளியில் உள்ளதாக
வார்த்தை பிறழாமல்
சொல்லுகிறது
உன் கைப்பேசி .
பிரிவின்
கொடுமையும்
வேதனையும் ...
உணராதவன் நீ...
மரணத்தைவிட
கொடியது
பிரிவு .
மறந்துவிடு ...
என்கிறாயா?
மரித்துவிடு
என்கிறாயா?
உன்விசயத்தில்
இரண்டும் ஒன்றுதான் . .
14 comments:
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
>>உன் கட்டளைப்படியே
தொடர்பு எல்லைக்கு
வெளியில் உள்ளதாக
வார்த்தை பிழறாமல்
சொல்லுகிறது
உன் கைப்பேசி
ஓப்பனிங்க் அசத்தல்..
ஒரு திருத்தம்
வார்த்தை பிழறாமல்
வார்த்தை பிறழாமல்
Nice!
காத்திருப்போடு நகரும் பிரிவுத் துயரைக் கவிதை சொல்லி நிற்கிறது.
எழுத்தை கொஞ்சம் பெரிசாக போட்டிருக்கலாமே(Font Size is too small)
//மரணத்தைவிட
கொடியது
பிரிவு .///
மிக சரியாக சொன்னீர்கள் மாலதி...
//ஓப்பனிங்க் அசத்தல்..
ஒரு திருத்தம்
வார்த்தை பிழறாமல்
வார்த்தை பிறழாமல்///
விட்றா விட்றா படிக்கிறது நாமதானே நோ பிராப்ளம்....
//உன்விசயத்தில்
இரண்டும் ஒன்றுதான் . .//
சாடி தீர்த்துட்டீங்க போங்க....
கவிதை, அசத்தல்......
அழகாக ஆரம்பிக்கிறது கவிதை... மிகவும் அருமை!
//மரணத்தைவிட கொடியது பிரிவு//
ஆம். நல்ல வரிகளில் நல்ல கவிதை.
நல்லதோர் கவிதை .. தொடர்ந்து எழுதுங்கங்க வாழ்த்துகள்
// மரணத்தைவிட
கொடியது
பிரிவு //
மறுக்க முடியாத உண்மை..
கவிதை அருமை..
உங்கள் முந்தைய கவிதைக்கு இக்கவிதையில் பின்னூட்டம். உங்கள் தந்தையின் கண்ணோட்டம் சரிதான். !அவர் சொல்லாததையும் சிந்தித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
உங்கள் முந்தைய கவிதைக்கு இக்கவிதையில் பின்னூட்டம். உங்கள் தந்தையின் கண்ணோட்டம் சரிதான். !அவர் சொல்லாததையும் சிந்தித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
Post a Comment