இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 31 December 2011

நாங்கள் தமிழர்கள் வரிசை 2


எங்களின் பழமையையும்
காப்பதில்லை
மொழியையும் போற்றுவதில்லை .

மலையாளப்  புத்தாண்டு
தெலுங்குப்  புத்தாண்டு
சமற்கிருத  புத்தாண்டு
ஆங்கிலப் புத்தாண்டு
எல்லாப்  புத்தாண்டையும்
மானமில்லாமல் கொண்டாடுவோம்
கண்மூடித்தனமாய் வணங்குவோம்.

எங்களின்  பாரம்பரியத்தைச்
சொன்னால்  புறக்கணிப்போம் .

பல்லாயிரத்தாண்டாய்
""தை "" முதல்நாளே
தமிழர்  புத்தாண்டு
என்றார்  பாவேந்தர் .
உண்மையை  ஏற்போமா ?

இதில்  அறிவியலுமுண்டு
கதிரவன் தென்மேற்கு
திசையிலிருந்து
வடமேற்கு  திசைநோக்கி
சாயத் தொடங்கும்
காலமான  சுறவத் (தை )
திங்களே  ஆண்டின்
தொடக்கம்  அறிஞ்சர்
சொன்னது .

தமிழரின்  தனிப்
பெரும்  அறிவியலை
நிலைநிறுத்தும்  போது
தமிழன்  உயர்வான்
சிந்திப்போமா ?

இளந்தமிழா,கண்விழிப்பாய்
இறந்தொ   ழிந்த
பண்டைநலம்  புதுப்புலமை
பழம்  பெருமை
அனைத்தையும்  நீ
படைப்பாய்! இந்நாள்
என்றார்  பாவேந்தர்
சிந்திப்போமா ?
புதிய  வரலாறை
படைப்போமா ?


     மேதகு  வேலுப்பிள்ளை  பிரபாகரன்  அவர்களின் படம் , தமிழீழ  வரைபடம் , விடுதலைப்  புலிகளின்  மலர்  விடுதலைப் புலிகளின்  கொடி ஆகியவற்றை  அஞ்சல்  தலையாக  பிரான்சு  நாடு  வெளியிட்டு  உள்ளது  அந்நாட்டை  வணங்கு வோம்  பாராட்டி மகிழ்வோம் .

Tuesday, 27 December 2011

நாங்கள் தமிழர்கள்

நாங்கள்  சிலந்தி
வலைகளைக் கண்டே
அச்சப்படுகிறோம்
சிறைக்கதவம்  பற்றி
சொல்வானேன்.

நாங்கள்
கூட்டாக  வாழ்வதைப்
பற்றி  கனவு
காண்பதில்லை .

எதன்
பொருட்டும் ஒன்றுபடுவது
இல்லை .

நாங்கள்
ஒன்றானால்
பகைவன்
அச்சம் கொள்வானே .

எங்கள்
தலைவர்கள்  வளமோடு
வாழ்வதற்கே
நாங்கள்  வறுமையில்
வாடுகிறோம்.

 நாங்கள்
சிதைந்தே  கிடைப்பது
எங்களுக்கு பல
தலைவர்கள்
வேண்டும்  என்பதால்தான் .

ஒருவர் குழிபறிப்பார்

ஒருவர் கொள்கைபேசுவார்
ஒருவர் மேடையில்
வீரங் காட்டுவார்.

ஆக எல்லோருமே
எங்களின்  ஒட்டு
மொத்த  பகைவர்களுக்கே
பல்லக்கு  தூக்குவார் .

நாங்கள்
சிதறிக்  கிடப்பதொடலாமால்
சிந்திக்கவும்  செய்வதில்லை .

சிந்திப்பதை  எங்கள்
தலைவர்களிடம்  தத்து
கொடுத்துவிட்டோம் .

அப்போதுதானே 
நாங்கள்  சுமைகளைமட்டுமே
தூக்க  இயலும் ?



          எமது முந்தய  பதிவு குறித்து  சிலர்  நித்தய  கல்யாணி  பற்றி மருத்துவ  குறிப்புகளை  எழுதச்  சொன்னார்கள்  மருத்துவக்  குறிப்புகளை  மருத்துவர்கள்  மட்டுமே  எழுதப் படவேண்டும்  ஒரு மூலிகைக்கு  பல  குணம்  உண்டு  முறையான  மருத்துவர்தான்  அதனை முறையாக  வெளிப்படுத்துவார் .ஒரு மூலிகையின் சிறப்புகளை  மட்டுமே எழுதுவது  படி (காபி ) எடுத்தல் போன்றதாக இருக்கும்  ஆனால் முறையான மருத்துவர்  எல்லா  செய்திகளையும் உள்ளடக்கி  நல்லது  கெட்டது அனைத்தையும்  கூறி தெளிவாக்குவார்  என்பதால் அந்த  கோரிக்கையை  நிறைவேற்றாமல்  மருத்துவர்களிடம்  விட்டு விடுகிறேன் .

  ௧. polurdhayanithi.blogspot.com
  ௨. தோழியின்   சித்தர்கள்  இராஜ்ஜியம்  போன்றோரின்  வலைபூக்களை  கணாலாம்

Saturday, 17 December 2011

மரண சாசனம் ....



இதோ ...
மரண  சாசனம் வரைகின்றேன்

என்
சடலத்தின் மேல்
பூக்களும்  வேண்டாம்
கண்ணீர்த்  துளிகளும்
வேண்டாம் .

நான்
பிறப்பெடுத் ததின்
நோக்கமே
மரித்துப்  போவதற்குத்தான் .

நான்

எதன்பொருட்டும்
கண்ணீர்  சிந்தியதில்லை .

என்
இதயம் இரும்பும்
இல்லை .

எனது
இறப்பிற்கு
சரவெடியும்  வேண்டாம்
சாப்பறையும்   வேண்டாம் .

பறவைகள்
அச்சமின்றி  வாழட்டும்
சூழல் நலன்
காக்கப் படட்டும் .

என்
கண்களும் ...

இதயமும் ...
உடலுறுப்புகளும்
அறுத்தெடுக்கப்  படட்டும் .

செப்படி  வித்தைதான் .
இருந்து விட்டுபோகட்டும்.
யாருக்கேனும்
என்னுடல் உறுப்புகள்
பயன் படட்டும்.

எனது ...
கல்லறையில்
கல்லறைப்பூக்கள்
(நித்யகல்யாணி ) மலரட்டும்.

யாரேனும்  ஒரு
புற்று  நோயாளி
நலன் பெறட்டும்.

என்
மரணத்திலேனும்
சிலர்  பாடம்
படிக்கட்டும் .

மரித்துப்  போன

நிலையிலும்  நான்
மற்றவர்களுக்காய்
வாழத்  துடிக்கிறேன் .

மரண சாசனம்
வரைகின்.......


                                    நித்யகல்யாணி  புற்று  நோய்க்கு மிக  சிறந்த மருந்து .

Saturday, 3 December 2011

மலட்டுவிதை மான்சென்டோ

                                                     

முன்பு ...
இந்தியாவில்
புரட்சி  செய்கிறோம்
என்றார்கள் .

செய்தும்  காட்டினார்கள்
ஆட்சியாளர்கள் வேளாண்புரட்சி .

வீரியரக  விதைகள்
கோதுமையில் ,நெல்லில்
இதனால்
விளைநிலங்கள்
விலை நிலமாகிப்போனது .

மண்வளமே
பாழாய் போச்சுது
இரண்டாம்  உலகப்
போரின் வெடிமருந்து
சொம்மாவா ?

நம்  நாடுபோலவே
சோமாலியாவும்
வளமாகவே  இருந்தது .

அமெரிக்க மாமா
வந்தார் கோகோ
போடச்சொன்னார் .

நாங்கள்  வளமோடு
வாழ்கிறோம்  வேண்டாமென்றார்கள் .

கடன்தருகிறோம் பயிரிடு
என்றான்  மாமா .

தவறான  வழி
ஆசைதானே  அழிவிற்கு
வழி .

கோகோ  போட்டன்
சிலர்  கொழுத்தனர்
பலர் வியந்தனர் .

நாடு முழுமையும்
கோகோ  பயிரே
கோலோச்சியது .

மரபுவழி  விதையும்
பயிரும்  பாழாய்போச்சு .

காலச்  சூழலில்
கோகோ விளைச்சலின்
தரமும்  குறையலாச்சு .

உங்கள் கோகோ
எமக்கு  வேண்டாமென்றான்
மாமா .

வெட்டவும் இயலாமல்
வீழ்த்தவும்  இயலாமல்
பட்டினியின்  பிடியில்
இன்று  சோமாலியா .

இந்த ...
மான்சென்டோ  மலட்டு
விதைதான்  இப்போது
இந்திய  சந்தையில்
நெல்லில்...
கோதுமையில் ...
மக்கா சோளத்தில்...

மண்ணும் பாழாய் ...
உணவும் இல்லாமால்
நாம் மடியப்போகும்  நாள்
விரைவில்  வரும்
அப்போதாகிலும்
விழிப்போமா ?



            

Saturday, 26 November 2011

இதைத்தான் ... இப்படித்தான்



நாளும் ...
நானும்
இதைத்தான்
நோக்கி இருந்தேன் .

உன்னிடமிருந்தான
பச்சை விளக்கு
எரிவதும்  நிறம் மாறுவதும்
தொடர்கதையாகிப்  போகிறது .

உள்ளம்  உள்ள
இடத்தில்  சிலருக்கு
கள்ளம்  இருக்கும் .

உன்னுள்ளம்
உயர்ந்ததென  நானறிவேன் .

நல்லதை  விரைந்துசெய்
தீயதை  தள்ளிப்போடு .

இது ...
நேர்மையானது  தானே .

நீ  நல்லதையும்
அல்லவா தள்ளிப்
போடுகிறாய் ?

தேவைகள் ...
தேவைகளாகவே
தொடரும்போது
தீர்வுகள்  தோற்றம்
கொள்ளதன்பனே .

நம்
இணைப்பிற்க்கான
வழியை  விரைந்து
சமைப்பாயா ?


            







Thursday, 24 November 2011

படி எடுத்தல்



மனிதப் படிஎடுத்தலின்
மகத்துவம்  அறிந்திருக்கவில்லை
இப்போது .

கால்வழிக் குற்றங்கள்
கண்மூடித்தனமாய்த்
தோற்றங்  கொண்டு
த்
தொடர்கிறது .

நதியின்  பிழையன்று
நறும் புனலின்மை
போல
விதியின்  பிழையன்று
நோயுற்ற  குமுகமும்
நோய்க்கான  காரணங்களும் .

இது ...
நம் மதியின்
பிழை .

உடலினை
ஊடுருவிப்  பார்த்து
நோய்க்கான
காரணமதைப் புறந்தள்ளி
நம் மண்ணின்
மருத்துவமதை
கைக்கொண்டால்
பிணிவந்து வருத்திடுமா ?

நம் பிள்ளைகள்
நோய்  வந்து
வீழ்ந்திடுமா ?
சிந்திப்போம் .


                   அக்கா சந்திரகௌரி அவர்கள்  கேட்டுக் கொண்டமைக்காக
இந்த ஆக்கம்  போதுமா  அக்கா ?

Saturday, 19 November 2011

எதையும் தாங்கு....



எதிர் பார்ப்புகள்
தோற்கும்  வெல்லும்
ஆயத்தம்மாகு .

தோல்விகள்  எல்லாம்
சுமையும்  அல்ல
சுழியமும்  அல்ல .

இமயத்தை   மயிரால்
கட்டி இழு .

வந்தால்  மலை
போனால்  மயிர் .

விடியட்டும்  என

காத்திராதே .

விடியவை  வாழ்வை .


                           மறப்போம் மன்னிப்போம்  

Saturday, 5 November 2011

நமது இடுகைக்கு  இப்படியாக  ஒரு பின்னூட்டம்  அந்துள்ளது அதை அப்படியே  உங்களின் பார்வைக்கு
karoopan
has left a new comment on your post "நான் ஏன் தமிழீழத்தை ஆதரிக்கிறேன் .":

அன்புத்தங்கை மாலதி அவர்களுக்கு ,what is on?
உங்களின் இடுகைகளைக் கண்டேன் முதலில் எனது கடுமையான கண்டனங்ககளை தெரிவித்துக் கொள்ளுகிறேன் காரணம் இங்கு தமிழகத்தில் இருக்கிற சிக்கல் களை உங்களைப் போன்றோருக்கு தெரிவிக்க வேண்டும் நீங்கள் வானத்தில் வட்டம் அடிப்பவர்கள் அதனால்தான் உங்களின் கண்களுக்கு தமிழத்தில் உள்ள சிக்கல்கள் தெரிய வில்லை போல . இலங்கை சிக்கல்கள் அவர்களுக்கானது அதை நாம் ஏன் தலையில் எடுத்துப் போட்டுக் கொண்டு நோக வேண்டும் . to my maind நீங்கள் உங்களின் உழைப்பை இதில் செலவிட வேண்டாம் யாரோ ஒருவர் கருத்துப் போட்டு இருக்கிறார் அந்த சிக்கல் எங்களுக்கானது என குறிப்பிட்டு உள்ளார் நாம் ஏன் அதை தலையில் போட்டுக் கொண்டு அழ வேண்டும் அழ வேண்டியவன் எல்லாம் சினிமாவுக்கு நடிகைகளின் இடுப்பை ரசித்துக் கொண்டு இருக்கிறான் உங்களைப் போன்ற இளையவர்கள் உழைப்பை வேண்டிக்க வேண்டுமா ? உங்களின் ஆற்றல் எவ்வளவு மகத்தனமானது to try ones best என்பார்கள் அதுபோல உங்களின் ஆற்றல் இங்கு உள்ள மக்களுக்காக செலவிடுங்கள் . we must give due respect to the fair sex என்கிற அடிப்படை கருத்தை கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறன் . அவனிடம் சொல்லுங்கள் clear off, you have given me enough trouble. என I agree with all you say . but அந்த இலங்கை சிக்கல்களுக்கு எனது அதரவு இல்லை .

உங்களின் மகத்தான எல்லா கவிதைகளையும் கண்டேன் நீங்கள் கேரளத்தில் மட்டும் இருந்து இருந்தால் உங்களை மாநில முதவரே வந்து பாராட்டி இருப்பார் அனால் இந்த பாழாய் போன தமிழ் நாட்டில் வந்து பிறந்து தொலைத்து விட்டீர்கள் உங்களின் கவிதைகளை எல்லாவற்றையும் பள்ளிக் கூடங்களுக்கு அல்ல காலேஜிக்கு புக்காக போட்டி இருக்க வேண்டும் இங்கு see eye to eye இந்த ஒத்த கருத்து என்பது இந்த கருத்துக் களை பாராட்டுகிற பண்பாடு தமிழ் நாட்டில் கொஞ்சமும் இல்லை ஆனாலும் கண்டுக்காமல் விட்டு விடுவான் பவம் அவனின் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறன் நீங்கள் அவனின் கண்களை திறக்க அந்த போரில் to give battle to நீங்கள் வெற்றி பெற முயலும் போது சில silly ass இடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறீர் . I WILL SEE TO இதை நான் முழுமையாக கவனிக்கிறேன் .TAKE BACK என நீங்கள் கூறினால் அந்த நாய் sorry நான் அந்த பின்னூட்டம் இட்டவனை இப்படி கூட கூற விரும்பவில்லை காரணம் நாயை கேவலப் படுத்துவானேன் literature is bornour of life. belongs to life and exists for like என்பார் ஹட்சன் இலக்கியம் என்பது வாழ்க்கையில் பிறப்பது . வாழ்க்கை சார்ந்தது வாழ்கையாக இருப்பது என்பது அந்த கூற்று .இப்பட்டிபட்ட தரமான படைப்புகளை இங்கு காண்பது அரிதாக காணப்படுகிறது நாம் இங்கு சாதி ரீதியாக சிக்கிக் கொள்ளத் தேவையில்லை அது கிடக்கிறது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி அது அதை பக்குவமாக கையாள வேண்டும் இல்லையேல் இருவரையும் கிழித்துவிடும் அதவும் கூட ஏழைகளைத்தான் குத்தும் அதை விடுவோம்

.



 


Imitative art is an inferiour, wich maries an inferiour and will have aninferiour of spring என்பார் பிளாட்டோ தரமற்ற போலி எழுத்துப் பற்றி பேச வேண்டிய கட்டாய மில்லை போலிகள் பெருகட்டும் இதுபோன்ற உமது வார்த்தயில் சொல்லுவதானால் கழிசடைகள் இருந்து விட்டு போகட்டும் நாம் நமது பாதையில் தூய்மையாக நடப்போம் நமது நாட்டை இளையோரை மீட்டோடுப்போம் உங்களின் எழுத்து விண்ணை முட்டும் . அதுவரை நீங்கள் பொருத்தருள வேண்டும் . நீங்கள் மதிக்கும் அந்த இலங்கைத் தமிழர் எத்தினை போர் சமூகம் சார்ந்து எழுது கிறார்கள் என்று போய் அவர்களின் இடுகைகளை பார் நடிகை உதட்டையும் மார்பையும் காட்டிக்க் கொண்டு இருக்கிறார்கள் . விளையாட்டு பற்றி எழுதுகிறான் அல்லது தன் சொந்த கதை சோக கதை எழுது கிறான். இப்படி எழுகிறேன் என கோபப் பட வேண்டாம் உண்மை அப்படி இருக்கிறது . வெளியில் இருக்கலாம் இந்த ப்லொக்ச்பொட் இதைத் தானே இன்றைய இளசுகள் அதிகமாக நேசிக்கிறது . என்கையில் விருது கொடுக்கும் சக்தி இருந்தால் உலக விருதே உனக்குதருவேன் சமூகம் சார்ந்த அது சந்திக்கும் சிக்கலினை அலசி அதற்க்கு தீர்வு காண்பது எளிதல்ல .

கடைசியாக ஒரு வேண்டுகோள் எனது தங்கை பணி செய்யும் கல்லூரியில் கவியரங்கம் நடக்கிறதாம் உங்கள் கவிதையை எல்லாவற்றையும் படித்து கட்டுவேன் ஏன் மூன்று தங்கையும் உனது ரசிகர்கள் கவியரங்கத்திற்கு தலைமை தங்க முடியுமா என கேட்டார்கள் தனியான இமெயிலில் நாளையும் நேரத்தையும் குறிப்பிடுகிறேன் தயவு செய்து வெளியுலகிற்கு வா உன்பாதை இந்த சமூகத் திற்காக இருக்கட்டும் .

கடைசியாக ஒரு வார்த்தை அதாவது நலமுடன் பிரச்னை இல்லாமல் இருக்கும் போது கொஞ்சி குலவுவது இருக்கட்டும் பிரச்னை உள்ளபோது அவர்களுக்கு ஆறுதல் தல்தர வேண்டும் அதை நான்கூட செய்ய வில்லை இப்படி வேறு பெயரில் வர வேண்டி இருக்கிறது எல்லோரும் இப்படியே என்பதை புரிந்து கொள் இதுதான் உலகம் .இன்னுமா தவறான பின்னூட்டம் இட்டவன் யாரு என புரியவில்லை.

     

Saturday, 22 October 2011

மண்ணில் வாழும் மனித நிலவே .....



எதையும் ....
கேட்கலாமா ....
கூடாதா ....
எனக் காலங்
கடத்துவதில்லை  நீ.

விரும்பியதைக்
கேட்டுப் பெறுகிறாய்.
தெரிந்ததை
சொல்லித்  தருகிறாய்.

தவறு நேரின்
பொறுப் பேர்க்கிறாய் ..
பொறுத்தருளவும் (மன்னிப்பு )
வேண்டுகிறாய்.

உள்ளத்தில்  ஒன்றும்
உதட்டில் ஒன்றும்
வேடங்களைச் 
சுமப்பதில்லை நீ.

கண்ணுள்ளபோதே
ஆதவ (சூரிய )
வணக்கத்தை
போதிக்கிறாய்.

இளமை உள்ளபோதே
வாழ்ந்து காட்ட
கட்டாயப்  படுத்துகிறாய்.

மண்ணில் வாழும்
மனித நிலவே
எனக்காகவும் _உன்
தண்ணொளி  வீசட்டுமே . 

         தீபாவளியாம் யாருக்கு  புரியவில்லை அசுரர்கள் சுரர்களை  அழித் தார்களாம் ( சுரர்கள் -குடிகாரர்கள் . அசுரர்கள் -  குடிக்காதவர்கள் . )குடித்துவிட்டு  வீணாக  சமர்புரிகிரவன்  எப்படி  நேர்மையனவானாக  இருக்கவியலும் ?  நரகாசுரன் யார்க்கு  என்ன கொடுத்தல்  செய்தார் ?
அருள் கூர்ந்து தெரிந்தவர்கள்  விளக்கின் தெளிவடைவேன் . நன்றி .

Saturday, 15 October 2011

சித்தன் போல் சிந்திக்கிறாய்

நுனிப்புல்  மேய்வதில்லை
நுணுகி நுணுகி ...
ஆய்கிறவன்  நீ.

கற்காமலே
கருத்துரைப்பதில்லை
ஆழ்ந்து  உள்வாங்கியே
கற்ப்பிக் கிறாய் ,

கண்ணீருக்கு
காரனமானவன்
அல்லன்  நீ
மாறாக  துடைத்தெரிய
களமாடுகிறாய்.

கனமானதை
உள்வாங்கிச்
செறித்துக்  கொள்கிறாய்
அதையே ...
எளிமையாக்கி  எமக்கு
பாடமாக்கு  கிறாய் .

உன் ...
பட்டறிவை எமக்கு
பயிற்று விக்கிறாய்
என் பாதையை
நேராக்குகிறாய்.

சித்தன் போல்
சிந்திக்கிறாய்
உலகின்  கண்களுக்கு
பித்தன் போல்
தோற்ற    மளிக்கிறாய்.

கண்ணுள்ள  குருடர்க்கு
வழி சமைக்கிறாய்
அனை   வருக்குமாய்
கலங்கரை  விளக்காக்கி
உயர்ந்து  நிற்கிறாய்.




  

Monday, 10 October 2011

அறிவுக் கோழைகள் .....



இவர்கள்  ...

கோழைகள் 
தமது ஆளுமையை 
நிலைநிறுத்த  இயலாத 
பேதைமை  உள்ளவர்கள் .

விளைந்தும் 
அறுவடைக்கு  
ஆயத்தமகாதவர்கள் ..
படித்தும்வாழ்க்கைப்   பயன்பாட்டுக்கு 
வராத  அல்ஜிபிரா 
கணக்குகள்.

நேர்மையிருந்தும் 
நேசிக்கத்  தெரியாதவர்கள்
விழி  இருந்தும் 
வழிகேட்டு  அலைபவர்கள் .

கைவிளக்கை  வைத்துக் 
கொண்டே  காரிருளைக் 
கண்டு  அச்சம்கொள்ளுபவர்கள் .

அறிவை  தன்னுள்ளே 
புதைத்துக்  கொண்டே 
முட்டாள்த்  தன
ஆளுமைக்கு அடங்கிப்
போகிறவர்கள் .

பேய்த்தனம்  நிறைந்த
பெண்மையை 
எதிர்க்கத்  தெரியாதவர்கள் .

சத்தமில்லாத ...
சமத்துவம் நிறைந்த _ வாழ்வை 
சமைக்கத்  தெரியாதவர்கள் .

 நாளும் ... 
இல்லறத்தை
அணு அணுவாய் 
சுவைக்கத்  தெரியாதவர்கள் .

பண்பட  தெரியாதவர்கள்.

பாராட்டத்  தெரியாதவர்கள் .

என் ...
விமர்சனம் 
கடினமாகத்  தோன்றினாலும் 
உண்மை  என்னவோ 
இதுதான். 

       கடந்த  எமது  இடுகைக்கு  வந்து  பெயரைக்  குறிப்பிடாமலே  பின்னுட்டம்  ஒன்றை  இட்டுவிட்டு  சென்று  உள்ளார் ஒருவர்  அதாவது  எனது  நறுக்கப்  (கவிதை)   போலவே நேர்மை  நிறைந்து இருந்தாலும்  இவரின்  மனைவி
Anonymous Anonymous said...
இப்படி தான் நானும், ஆனால் என் மனைவி நீ ஒரு மிருகம் என்கிறாள்...
இப்படி   குறிப்பிட்டு  இருந்தார்  இவர் நேர்மையாக  இருந்தாலும்     இவரின்  மனைவி நேர்மையாக  இல்லை  என்கிறார்  இதை  நான்  எப்படி  பார்க்கிறேன்  இந்த  நேர்மையாளர்கள்  வெளியே  வராத  காரனத்தினல்தான்  இந்த  சமூகம் சிக்கலை  சந்திக்கிறது  நேர்மையாளர்கள்   எல்லா இடங்களிலும்  தமது  ஆளுமையை  நிலை  நிறுத்த வேண்டும்  என்பதே  நமது  அவா .




















  







Saturday, 1 October 2011

என் தவத்தின் காரணமும் இதுதான்



உன் இதழ்களில்
வெண்சுருட்டின்
நாற்றமெடுக்க  வில்லை
அதைமறைக்க
வேறு எதையும்
அசைபோட  வில்லை.

உன் வியர்வையிலும்
சாராய  நெடியில்லை
இரத்தத்திலும்  தான்.

உன் கொள்கையிலும்
கோணலில்லை.

உன் உணவுத்திட்டத்திலும்
மரக்கறி  உணவே.
என் வாழ்னாள் 
முழுமையும்
மகிழ்வு நிறைந்திட
இதுபோதும்
என் கடுந்தவத்தின்
காரணமும் இதுதான்
அன்பனே ....

Saturday, 24 September 2011

மின்னஞ்சல் விடு தூது

மின்னஞ்சலே ...
என் பாட்டுடைத்தலைவனிடம்
இருந்தான செய்தி
விரைந்து  கொண்டுவா
நான் வேட்கையுடன்
காத்திருக்கிறேன்.

நாளது   தேதிவரை
சேதியில்லை.

என் மன்னவன்
மாலையுடன் வருவான் 
என மாலைவரை
காத்திருந்தேன் .
மாலையுமில்லை என்
மன்னவனுமில்லை

இரவாகிப்  போனது .

இருட்டு ...
அச்சத்தையும்  தரும்
இச்சையையும் தரும்
இரண்டும் கொடுமையானது
தீர்வுமட்டும்  ஒன்று என்னவன்.

ஏட்டில் எண்ணங்களைப்
பதிக்கலாம் ...
எண்ணுனர்வினை  எப்படிப்
பதிப்பேன் .நீ
அறிவாயா?

அவரின் அடையாளம்
கேட்டாய்
நேர்மை அவர்பாதை
உண்மை அவர்பேச்சு
சமூகநலன்அவர்கொள்கை
இப்படித்தான்  என்னுள்ளத்தில்
அவர் ...

தேடு மின்னஞ்ச்சலே
விரந்துதேடு
நெஞ்சத்தில் உள்ள
அவரை  நிசத்தில் கொண்டுவா.

      தூதுப்  பிரபந்தங்கள்  கலி வெண்பாவிற்  செய்யப் படுத்தல்  வேண்டும் 
என்பது இலக்கணம் .நமக்குஅது தெரியாது  என்பதால்  / இந்த நறுக்கு (புதுக் கவிதை
) களுக்கு இலக்கணம்  இன்மையால்  உங்கள் முன்  வாசிக்கப் படுகிறது .  

  

Saturday, 17 September 2011

எது சிறந்தது ?



அறிவிற்கும்
அழகிற்க்குமான போட்டியில்
நீ
அறிவைமட்டுமே  தேர்வு
செய்கிறாய்.

பண்பிற்கும்
பணத்திற்க்குமான தேடலில்
பண்பிற்க்கே வாய்ப்பளிக்கிறாய்.

நட்பிற்கும்
உறவிற்க்குமான
போராட்டத்திலும்
நட்பையே  விரும்புகிறாய்.

எதிர்ப்பிற்கும்
பாராட்டுகளுக்குமான
நேரெதிர்  கோட்பாடுகளிலும்
எதிர்ப்பவரையே  பேசவைக்கிறாய்.


கண்களுக்கும் 
காதுகளுக்குமான
துலாக்கோலில்
கண்களுக்கே
முதலிடம்  வைக்கிறாய்.  

நீ
சமத்துவ  உலகை
காண கனவு
காண்பது புரிகிறது
அன்பனே  நானும்
ஆயத்தமாயிருக்கிறேன் .


 ஈழத்தில் இன்று ...

                பல  இலட்சம் ஈழத் தமிழரை  கொன்ற கொலைகாரன்  ஆட்சியில் தமிழர்கள்  தங்களின்  நாட்டுபுற  கடவுள் நம்பிக்கைகளுக்குஆடுகளையும் , கோழிகளையும்   பலியிட  கூடாதாம் . ஏனெனில்  கொலை  பாவமான  காரியமாம்  ஏன்டா  நாய்களே  உங்களுக்கே  வெட்கமாக தெரியவில்லையா?

Saturday, 10 September 2011

ஏதுமற்ற (நிர்வாண ) நிலை

காதல் ...
உடலுக்கான தேவையில்
தொடங்கியதா?

உள்ளத்திற்க்கான
தேடலில் தொடங்கியதா?
என கேட்டாய்.

ஒரு நிமிடம்
சிந்தித்தேன் .

உன் வினவின்
நோக்கத்தை
உள்வாங்கி  கொண்டால்தானே
நான் நீயாக முடியும்.

 ஆறாவது
அறிவை  எடைபோடுவதில்
தேர்ந்தவன் நீ.

தேவையில்லாது
சினம் கொள்வதுமில்லை
சினம் கொள்ளவைப்பதுமில்லை.

காதலை ...
புரிந்து கொள்ள
இன்னுமொரு இதயம்
வேண்டுமென்றாய்.

அது ...
புரிந்து கொள்ள
இயலாதவர்களுக்கு தானே?
என்பதை புரியாதவள்
அல்ல நான்.

அன்பனே ...
காதல் உடலுமில்லை
உள்ளமுமில்லை
அது....ஏதுமற்ற
(நிர்வாண) நிலை.

ஏதுமற்ற நிலையில்
சுகமுமில்லை
துக்கமுமில்லை
அது உயர்ந்த உணர்வு
என்பதைத்  தானே
நீ  எனக்கு கற்பித்தாய்.

 

      சாந்தன் பேரறிவாளன் , முருகன்  விடுதலை  குறித்து குடித்துவிட்டு  பேசும்  அந்த பெரியாரின்  பேரன்  என கூறும்  கழிசடை பற்றிதானே கேட்கிறீர்கள்  தமிழனாக  இருந்தால் தான் ஆடவிட்டாலும்  தன் சதை ஆடும்  என்பார்கள்  அதுதான்  தமிழனே இல்லையே  அதை பற்றி  பேசி நேரத்தை வீணடிப்பானேன் ? நான் இளங்கோவனை  சொல்கிறேன்  என நீங்கள்  நினைக்க வேண்டாம்.

Saturday, 3 September 2011

உன் சுவடுகள் ...


நீ ... குழப்பவாதியல்ல
வெற்றி அல்லது
தோல்விக்கான
காரணங்களை மட்டுமே
சிந்திக்கிறாய்.

மூன்றாவதாக
ஒன்றை சிந்தித்து
நீயும் குழம்பி
மற்றவர்களையும் 
குழப்புவதில்லை .

தோல்விக்கான காரணங்களை
கண்டு அதுதந்த
பட்டறிவால்
வெற்றிக்கனியை பறிக்க
வேண்டுமென்கிறாய்.

வெற்றியும்
நிரந்தரமல்ல  என்பது
உன் கோட்பாடு .

அதை
நிலைநிருத்தாவிட்டால்
தோல்வி நம்மைவிழுங்கி
விடும்  என்கிறாய்.

வெற்றிக்கான உன்
இலக்கணமும்
மாறுபட்டது.

முயன்று
மலை முகட்டை
அடையவேண்டும் என்கிறாய்.

பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை  மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.

என்னவனே ...
உன்  சுவடுகள் ...
நாளை நல்லன
விளைவிக்கட்டும்.
 

Saturday, 27 August 2011

என்றும் ஆயத்தமாகவே காத்திருக்கிறேன் அன்பனே

உன் ...
வறுமைக்கான
காரணம்  நேர்மை
என்பதை  நானறிவேன்.

இருப்பினும்-உன்
வறுமையை  நான்
பழிக்கவில்லை.

நான்
சாடுவது இந்த
போலி  சமூகத்தைதான் .

ஓரிடத்தில்
செல்வம் குவிமையம்
கொண்டிருப்பதும்
மற்றோர்இடத்தில்   வறுமை
வேட்டையாடுவதும்
பிழையான சமூகத்தின்
எச்சங்கள் தானே?

காலங்கடந்து
நிற்கவேண்டிய மெய்ம்மங்கள்
நம்  பழமைவாய்ந்த
பண்பாட்டின் மீட்டுரு
வாக்கத்தேவை  ஒட்டியே
உனக்கான
போராட்டக்  கலங்கலாக
தொடர்கிறது.

வறுமை நம்
வாழ்க்கையில்
போராட்டமாக
இருக்காது -ஆனால்
போராட்டமே  வாழ்கையாக
மாறிவிடக்கூடாது  என்பதான
உன்  இலக்கை
தலைவணங்கி  ஏற்கிறேன்.

வீண் செலவிற்கும்
சிக்கனத்  திற்க்குமான
வேறுபாட்டை  நானறிவேன்.

சிக்கனம்  தேவையை
ஒட்டி நிறைவேற்றிகொள்ளுவது
வீண் செலவு
இதுதான்  தேவைஎன
அடம்பிடித்து அழிவது
நான் அங்கனமில்லை .

நோயின்றி  
வாழ்வதற்க்கான
உன்தேடலில்
கைகோர்க்க என்றும்
ஆயத்தமாகவே
காத்திருக்கிறேன்  அன்பனே .

ராஜீவ் கொலையாளிகளுக்கு செப்.9-ந் தேதி தூக்கு...
      சரியான விசாரணை இல்லை, இவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லை, இவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரியாது என முன்னாள் நீதிபதிகளே சொன்னது தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்கு தெரியாதா?...இன்னும் எப்படி ராசிவ் "கொலையாளிகள்" என்று இவர்களால் விளிக்கமுடிகிறது.

      தமிழ் நிரபராதிகளுக்கு தூக்கு என்பது நீதிக்கு தூக்கு....
உணர்வுள்ள  தமிழர்களே சாந்தன் , முருகன் , பேரறிவாளன்  ஆகியோரின்  தூக்கு தண்டனையை  எதிர்போம் .


இந்திய  அரசே !
இந்தியாவில்  மரணதண்டனை சட்டத்தை  நீக்கம் செய்.
இப்போதுள்ள அனைத்து மரண தண்டனைகளையும் திரும்பப்பெறு.

தமிழக  முதல்வர் அவர்களே !
மூவரின் மரண தணடனையை  நீக்கம் செய்ய ஆளுநருக்கு  பைந்துரை செய்யுங்கள் .

தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்திட உடனே  சட்டம் இயற்றுங்கள்.


 





 

Saturday, 20 August 2011

இது தான் மதங்களின் களின் இலட்சணமா? அரசுகளின் இலட்சணமா?

யாழில் சிங்களவன்
அறிவிக்கிறானாம்.

போரின் காரணமாக

வீடிழந்த  மக்கள்
தங்களின் காணிகளில்
புத்த விகாரமைக்க
இடமளித்தால்
ஆறு   இலட்சம்செலவில்
வீடு  கட்டித்தரப்படுமாம் .

இந்தியாவை  ஆள்வோரே

எங்களின்  கைகளைகொண்டே
எங்களின்  கண்களை  குத்துவதா ?
இதற்கா எங்களின்  வரிப்பணம் இரண்டாயிரம்  கோடி 
 


சண்டையில்

தமிழர்களிடமிருந்து
வலிந்து பெறப்பட்ட
இடங்களின் தமிழ
பண்பாட்டு அடியாளங்களை
அழித்து அதேவேகத்தில்
புத்தன் சிலைகள் நடப்படுகின்றனவாம் .

ஏ...
புத்தனே -நீ
கண்களை மூடிக்கொண்டே
கொடுமைகளுக்கு  கூர்தீட்டு கிறாயா?

யாழ் ...

கிளிநொச்சி ...
மாங்குளம்...
கனகராயன் குளம்
வவுனியா ...
எல்லா இடங்களிலும்
புத்தன் புன்னகைத்தபடியே
சிலைகளாய்  ஆக்கிரமிக்கிரானாம்

வீரம்
செறிந்த வன்னி நிலம் -இப்போது
பௌத்த  நிறமாக  மாறுகிறதாம்

.யாழ் பல்கலையும்

தொல்லியல் அமைச்சும்
கந்தரோடையில் ஆய்வு
நிகழ்த்துகிறதாம்
புத்தநடாக உலகிற்கு
அடையாளம்  காட்ட .

இலங்கையில் தமிழர்
நாடாண்டகல்வெட்டுகள்
காணக்கிடக்கிறதே
அதை எப்படி மறைப்பாய் ?

இராணுவப் பாதுகாப்பும்

அரச கட்டளையும்
புத்தனின் சிலைகளை
ஈழம் முழுமைக்கும்
கொண்டு சேர்க்கிறதாம் .

தமிழகத்து
ஆண்மக்களே
உங்களின் ஆண்குறியும்
அறுத்தெறிய படலாம்
ஈழத்தில் பிறக்கும் தமிழ் குழந்தைகள் போல .

கேரளா மூத்தூட் பைனான்சு

வந்து விட்டது  நம்  நிலம்
பறிபோகிறது உன் 
நாடிழக்கலாம்
வீரத்தை
இப்போதே காட்டு
தமிழ் ஈழத்திக்கு
தோள்கொடுக்க பழகு
சிங்களனுக்கு
எதிர்ப்பை காட்டு..
   சோனியாவின்
  மன்மோகன்
அரசுக்கும்  எதிர்ப்பைகாட்டு...

     உலகின் எல்லா மதங்களும் அமைதியையும்  அன்பையும்தான்   போதிப்பதாக கூறு கிறது  ஆனால் தன் கைகளில்  நச்சு  குண்டுகளை அல்லவாவைத்திருக்கிறது .

இஸ்லாம்  நபிகள்  நாயகம்
   கூடாரங்கள்  எப்போதும் தனித்தனியாக பிரிந்தே  இருக்கட்டும். ஆனால் எல்லோருடைய  இதயங்களும்  இணைந்தே  இருக்கட்டும். என்கிறார் .

கிருத்துவ மதமுதல்  பாடல்
      கடவுளுக்கு மகிமையும்  மண்ணில்  சமாதானமும்  மனிதர்கள் மேல்  பிரியமும்  உண்டாவதாக . என்கிறது .

புத்தமதத்தை  பற்றி   சொல்லவே வேண்டாம்.
       சண்டை இல்லாத   உலகத்தை படைக்க வேண்டும்  என்பதுதான்  அதன் முதன்மை குறிக்கோள்  ஆனால் பல இலட்சம்  தமிழர்கள்  படுகொலை புத்த மதத்தின் பேரால்  செய்யப்பட்டது .

இந்து மதம்

அதிகம்  பேச வேண்டாம்  அன்பே  சிவம்  என்கிறது

        இப்படி  உண்மைக்கு நேரான  கொள்கைகளை கொண்ட  இந்த மதங்கள் தான் கொலை கருவிகள் வழங்கியும்  பொருளுதவி  வழங்கியும்  பல்லாயிர தமிழ மக்களை  கொன்றது  இது தான்  மதங்களின்  களின் இலட்சணமா?    அரசுகளின் இலட்சணமா?


உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா


அண்ணா ஹசாரேவின் மக்கள்  அறமன்றம் (நீதி) அமைக்க  துணை நிற்ப்போம்   ( ஜன லோக்பால்)

நாகை மீனவர்கள்  தாக்க பட்டமைக்கும்  தொடர்ந்து  தமிழக மீனவர்கள்  தாக்கபடுவதர்க்கும் இந்திய அரசே ! தமிழக  மீனவர்களிடம்  மன்னிப்பு கேள் தமிழக  மீனவர்களுக்கு  சிங்களனுக்கு  கொடுத்ததைபோல   கருவி (ஆயுதம் )கொடு . 

Saturday, 13 August 2011

நீ......... உளியாகும் போதெல்லாம் நான் சிலையாகிறேன் .

 நீ ...
தொட்டுக்காட்டும்
போதெல்லாம்
நான்  கற்றுக்கொள்ளுகிறேன் .


 நீ ..........
கற்றுக்கொடுக்கும்
 போதெல்லாம்
 நான்
செழுமையடைகிறேன் .

 நீ.........
வழிகாட்டும்
போதெல்லாம்
 நான்
தெளிவடைகிறேன் .

நீ.........
உளியாகும்
 போதெல்லாம்
 நான் சிலையாகிறேன் .

 நீ........
மௌனம் ஆகும்
 போதெல்லாம்
நான் தவமேற்கிறேன்.












Saturday, 6 August 2011

இன்றைய உலகம்?

தேவைக்கும்
 இருப்பிற்குமான
இடைவெளி  நெடியது _இது
முதலாளித்துவ
சுரண்டல்  தத்துவத்தின்
தனிச்  சிறப்பு .

கொள்ளையும்
கொள்ளை இலாபமும்
அதன்நேரிய குறிக்கோள் .

ஏழ்மையிலும்
அறியாமையிலும் மக்களை
வைத்திருந்தால்தான்
கொள்ளை இலாபம்
அடிப்பவர்கள் கோலேச்சமுடியும்என்பது
அதன்கமுக்கமான  உண்மை .

ஆள்வோருக்கும்  ஆட்டிப்படைப்போருக்கும்
மறைமுக  பிணைப்பு
தொடர்ந்தே  இருக்கும்.

ஆளும் வகுப்பு
என்றும் கடவுள்களை
தோற்றுவித்துக்  கொண்டேஇருப்பார் _ அவர்கள்
கொள்ளையடித்துக்  கொண்டேஇருக்க.

புதியவடிவில் மூடத்தனங்கள்
காட்டுத்தீயாக  பரவும்.
பட்டுப்  பீதாம்பரங்களுடன்.

உண்மை
நூலாம் படையோடு
சுருண்டுவீழ்ந்து கிடக்கும்.

தலைவிதியை  எண்ணி
அறியாமை மக்கள்
கடவுள்களை நோக்கிப்
படைஎடுப்பர்கள் .தங்கள்
பாமரத்தனத்தை  அறியாமல்.

மக்களின்உழைப்புச்
சுரண்டலில்  தேர்ந்தவர்கள்
கோவில்களில்
தொன்னையில்  வைத்துச்
சோறு படைப்பர்.

கடவுளரைக்  காணுவதில்மட்டும்
பாமரர்கள்  ஒன்றுபடுவர்.
அப்போதும்  கொள்ளைக்காரர்களுக்கு
தனிவழி.

மனிதன்  கண்டெடுத்த
கண்டு பிடிப்புகளில்
கடவுள் கண்டுபிடிப்பே
உயர்ந்தது  _இது அறிவர் .

இதன் தாக்கத்தை
பாமரர்கள்  உணராதபடி
முட்டாள்(தொலைக்காட்சி )  பெட்டிகள்
முணகிக்கொண்டே  இருக்கும் .

இதனூடே ....
முதலாளித்துவம்
கொள்ளையடித்துக்  கொண்டே
கோலேய்ச்சும் மாற்றம்
வந்துவிடாதபடி .

ஏதிலிகள்  வயிற்றுப்
பட்டினியுடன் தலைவிதியை
நொந்து  கொண்டே
போராடுவார்கள்  வயிற்றுப்பசியுடன்.

மாற்றம்  வேண்டிய
அறிவர்கள்  பாமரனின்
கண்களில் பித்தர்களாக (பிழைக்கத்  தெரியாதவர்களாக )
தோற்றமளிப்பார்கள்
தீவிரவாதிகள்  என்ற  பட்டந்தாங்கி.

ஒரு
கூட்டம்  திரைப்பட
புல்தடுக்கிப்  பயில்வான்களுக்கு
வெண் சாமரம்வீசிக்கொண்டிருக்கும்
அவனின் எச்சில்களையும்
கழிவுகளையும்  நக்கிக்கொண்டே.



உன்களின் கண்டன கனிகளை  எதிர் நோக்கி

                              மாறாத தமிழன்புடன்
                                        மாலதி .

 .  

Saturday, 30 July 2011

நல்லன எல்லாம் -நீ நீ நீயே .........

தொட்டுக்காட்டமல்
வளர்ந்தவன் -நீ

இந்த ........
சமூகம்
கற்றுக்கொடுக்காமல்
தேர்ந்தவன் -நீ

நாளும் பட்டுத்தேரியவன்
நீ

உள்ளத்தில்
பட்டதைச்  சொல்பவன் -நீ

நல்லன
மட்டுமே கற்றவன் -நீ

இந்நாடே
போற்றவேண்டியவன் -நீ

புதிய
பாதையை
சமைத்தவன் -நீ

பெண்மையை
மதிப்பவன் -நீ

நல்லன
எல்லாம் -நீ  நீ  நீயே .........


Saturday, 23 July 2011

அன்பே நம்வளமான வாழ்வைமட்டுமே சிந்திப்பாயா?

 நம்
பண்பாட்டைப்
பேணுவதில்
உன் சர்வாதிகாரத்தை
வெளிப்படையாய்
அறிவித்தாய் .

கல்லூரிப் பெண்கள்
 விட்டில் பூச்சிகளாக
மடிவதாய்
வருத்தபட்டாய்.

முதலாளித்துவ
இன்றைய
அரசுகள்
குடும்ப உறவுகளை
நசுக்குவதாய்
சினம்  கொண்டாய் .

ஊடகங்களும்
திரைப்படங்களும்
சீரழிவின்
கொம்புகளை கூர்
சீவிவிடுவதாய் 
குற்றம்  சாட்டினாய்.

நம் மொழி
அழியுமுன்னம்
இனமழியும்
என்றாய் .

நம் கலைகள்
காப்பது மட்டுமே
இப்போதைய
தேவை  என்றாய் .

அன்பனே
இதையெல்லாம்
பேசி வறுமையோடு
வாடியவர்களின்
பட்டியலில்
சேரப் போகிறாய் .

கொள்கைக்காக
மரித்துபோவதையும்
மறந்துபோகும்
சீக்காளி சமூகமிது
அன்பே
நம்வளமான
வாழ்வைமட்டுமே

சிந்திப்பாயா?


Saturday, 16 July 2011

இதுதான் அரசுகளின் அறமா?


ஒரு
இனத்தின்
விடுதலை வேட்கை
எங்கனம்
தீவிரவாதமாகும்?

என்
இனப்பெண்களின்
மார்பகம்
எங்கனம்
வெடிகுண்டாய்
மாறும்?

சிங்கள நாய்கள்
சோதித்து பார்த்ததாம் .

உலகத்தீரே
இதுதான் அறமோ?

மனித உரிமைகளை
வாய்கிழியப்  பேசும்
போலிக்கனவான்களே!

பச்சைக்குழந்தைகள்
பாசமிகு முதியோர்
சூலுற்ற  பெண்கள்
இருந்த இடங்களில்
பாஸ்பரஸ்
குண்டுமழை ...
பொழிந்து கொன்றது
எந்த நாட்டு
அரச நீதி ?

இவர்களை  கொல்ல
எவன்கொடுத்தான்
அதிகாரம் ?

சிங்கள
நாய்கள் எப்படி
என்னினத்தை
வேட்டையாடியது ?

உலக
தமிழ் அறிஞர்களே !
நீவீர்  ஏன்
இன்னும்
ஈழத்தமிழரை
அழித்தவர்களை 
அறம்பாடி அழிக்கவில்லை ?

அரிதாரம்
பூசாத என்
வார்த்தைகள்
உங்களை வசப்படுத்தாமல்
போகலாம்.

ஈழத்தில்
நடந்த போர்குற்றங்கள்
இந்த உலகின்
செவிட்டுக்காதுகளுக்கும்
குருட்டுக் கண்களுக்கும்
இன்னுமா புரியவில்லை ?

     இந்த வசனத்தின் காரணம்  ஐயா  வைகோ  அவர்கள்  கல்லுரி  வாசல்களில்  நின்று  வழங்கிய  குறுவட்டை பார்த்ததால்  எழுதப்பட்டதாகும் .

Saturday, 9 July 2011

கற்றுக்கொடுக்காதபோதும் ....

நானும்  சராசரி
பெண்தான் .

என்னுள்ளும்
ஆயிரமாயிர
போராட்டங்கள் .

பலமுனையிலிருந்தும்

நெருக்குதல்கள்.
தாக்கு பிடிக்கயியலா
எத்தனையோ
சுமைகள்
கொடுமைகள் .

வறுமையோடு
போராடுவது
தற்கொலைக்கு
ஒப்பானது .

வழ்கையினுடனான
எனது போராட்டத்தில்
நானே  தலைமை
தாங்குகிறேன் .

நானே வீரனுமாகிறேன் .

தோல்வி  காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால்  கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
 இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.

இந்த  சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .

Saturday, 2 July 2011

முலை திருகி எரிந்து கொன்றழிக்கவும் ...

போலித்தனமில்லா
உன்னுடனான
தொடர்புகளை
நான் நாளும்
உணர்வதால்
இந்த  குமுகம்
குற்றமுடையதுதான்
என்பதை
புரிந்து  கொள்ள
முடிகிறது  என்னவனே ...

பொய்யும்  வழுவும்
அரசபீடம்  ஏறுகிறது
என்பதும் ...

நேர்மையும்
 அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள்  ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...

அதற்காக நான்
பொதுநல 
வாதியாகிட
முடியாது .

நான் தன்னலம்
எண்ணம்  கொண்டவள் தான் .

நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .

அதையே ...
வேடிக்கை  பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று  அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது  ...

மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம்   வா .


 

Saturday, 25 June 2011

இன்முகம் காட்டி எப்படி பேசுகிறாய் அன்பனே ?

 
உன் ...
நினைவுகள்
என்னைத்தாக்கும்
போதெல்லாம்
கோடைமழைஎன
கொட்டித்தீர்க்கிறது
கண்கள் .

ஆண்மை மீறாத ஆண்மை
அமைதி
வியக்கவைக்கும்
 பொறுமை  எதற்கும்
கலங்காத  நெஞ்சம் .

இந்த ...
சமூகத்தைப்பற்றிய
சரியான புரிதல் .

வறுமை உன்னை
ஆட்டங்கான
வைக்க நேர்ந்தபோது
ஆண்மைதவறாமல்
காத்தமை .

உன் ...
இலையுதிர்காலத்து
நாட் குறிப்பேட்டை (டைரி )
காணநேர்ந்தபோது
வாய்விட்டே
கதறி அழுதே அல்லாவா
 போனேன் .

எப்படி ...
எப்படி ....
உன்னிதயத்தை
இரும்பாக்கிக்கொண்டு
அத்தனையும்
 பதிவு செய்தாய் .

இன்முகம்
காட்டி  எப்படி

எல்லோரிடமும் 
பேசுகிறாய் அன்பனே? 

     இன்றைய சூழலில்  காதல் வெறுமனே  உடலை  கண்டு  காதல் என  கற்பிதம் செய்துகொள்ளுகிறது. காதல் உடல்  அல்ல உள்ளம் சார்ந்தது என்பதையும்  காதல் பற்றிய முழுமையான புரிதலை உண்டக்கவுமே  இந்த   ஆக்கங்கள்  எழுத்து   பிழை  இருப்பின் சுட்டிகாட்டும்  அன்பர்களுக்கு   எமது  உளம் கனிந்த  பாராட்டுகள்  சொற்பிழை  இருப்பின் சுட்டிகாட்டுக என்றும்  நன்றியுடன்    மாலதி .


Saturday, 18 June 2011

கனவுலகில் வாழ்பவள் இல்லை



ஆயிரம் மலர்கள்
பூத்துக் குலுங்கும்
கல்லூரி தோட்டத்தில்
பூத்த புதுமை
மலரென்றாய்.

காதலில் தோற்று
கல்லறைக்கு
அனுப்புவோருக்கு
நடுவே ...
கலங்கரை
விளக்காய்  நின்றாய்
என்றாய் .

சட்டைப்பையின்
கனத்தை
கணக்கெடுக்காமல்
உண்மைக்காதலை
வென்று எடுத்தேன்
என்றாய்.

உண்மையை ...
எளிமையை கண்டு
இகழ் கிறவர்களுக்கு
நடுவே வலிமை
நிறைந்த 
வாழ்க்கைப்பாதையை
தேர்வு  செய்தேன் என்றாய்.

மனிதத்தை
மதிக்கத்தெரிந்ததால்
என்னை முழுமையாக
தத்தெடுத்துக்  கொண்டேன்  என்றாய்.

உயிரே ...
நான் கணவுலகில்
வாழ்கின்றவள்  இல்லை .

உன் ...
கண்ணெதிரே
வாழ எண்ணுகின்
அதனால்தான் அன்பே .

       மாறுபட்ட  கோணத்தில்  இந்த  இடுகை   பதிவு  செய்ய எண்ணினேன்  மீண்டும்  இந்த இடுகையும்  காதலை  மையப்படுத்தியே  அமைந்து விட்டது .



 

Sunday, 12 June 2011

நீ என்னுள்ளத்தை ஆக்கிரமித்து கொண்டதால் ...

உன்....
தேடலின்
தகுதிகாண் பருவத்தில்
நான்வெற்றி
பெற்றதாய் சொன்னாய் .

என்னை...
வேண்டுமென்றே
சீண்டிப்பார்த்து
என்சகிப்புத்தன்மையை
அளவிட்டதாக கூறினாய்.

இன்பத்திலும்
துன்பத்திலும்
எனது உளவியலை
படம்பிடித்ததாக
பகிர்ந்துகொண்டாய்.

மற்றவர்களுடனான
தொடர்பில்
நான் தேர்ச்சிபெற்றதாக
அறிவித்தாய்.

முதியோர்களுக்கு
அக மகிழ்வுடன்
நான் உதவியதை
பரவசத்துடன்
பட்டியலிட்டாய்  .

என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ?





Sunday, 5 June 2011

வேள்விச் சாலையாக்கிக் கொள்ளட்டும்

உன்னைப்பற்றிய 
எந்த குறிப்புமில்லை
என்னிடம் .

ஆனாலும் ...
என்னிதயத்தை -நீ
நிறைத்துக் கொண்டாய்.

நான் ...
வரைந்து வைத்துள்ள
வரைபடத்தை -நீ
ஒத்திருப்பதாக
காட்டுகிறது  உன்
எழுத்து.

நீ...
ஆக்கிரமித்துக்கொள்ள
எண்ணுவது
என்னுடலையா
என்னுள்ளத்தையா
என்பதை
வைத்தே என்
தலைஎழுத்து
நிர்ணயிக்கப் படும்
என்பதை நானறிவேன்.

நீ ...
என் கற்ப்பை
காவு கேட்கும்
கள்வனல்ல.

நிறம் மாறும்
பச்சோந்தியல்ல
என்பதை
பறைசாற்றுகிறது
உன் பால்முகம்  .

நீ ...
பாலபாடம்
பயின்ற
பல்கலைகழகம்
எது என்பதை 
அடையலாம்
காட்டு.

இந்த ...
 பாழாய்ப்போன 

முடைநாற்றம்
வீசும் போலிச்மூகம்
அதை
வேதம் பயிலும்
வேள்விச் 
சாலையாக்கிக் கொள்ளட்டும்.